Veera Kumar . Oneindia Tamil
:
டெல்லி: சாமியார் ராம் ரஹீம் சொத்துகளை முடக்க பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட் உத்தரவிட்டதோடு, அவரது ஆதரவாளர்கள் சேதமான சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு சாமியார் சொத்தில் இருந்து பங்கு வழங்க உத்தரவிட்டது.
பாலியல் வழக்கில் குற்றவாளி என சிபிஐ கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட ராம் ரஹீம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மாலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
The Punjab and Haryana High Court orders attachment of all properties owned by Ram Rahim
இதனிடையே ராம் ரஹிம் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தால் ஹரியானா மற்றும் பஞ்சாப்பின் பல பகுதிகளிலும் பஸ், ரயில்கள் எரிக்கப்பட்டன. டெல்லியிலும் ரயில்களும், பஸ்சும் எரிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாலை 6.30 மணி நிலவரப்படி தேரா சச்சாவை சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ராம் ரஹிம் சொத்துக்களை முடக்கி அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக