முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19பேர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரையும், எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
இதையடுத்து அரசு கொறடா பரிந்துரையை ஏற்ற, சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்
அதிமுகவில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்புக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்குவோம் என அறிவிப்பு வந்ததில் இருந்து தினகரன் அணி எம்.எல்ஏக்ககள் கொந்தளித்தார்கள்.
அந்த அணியை சேர்ந்த 19பேரும் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
அதன் பிறகு 19பேரும் பாண்டிச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் அதிமுகவின் கொறடாவான ராஜேந்திரன், தினகரன் அணி 19 எம்.எல்.ஏக்களையும், எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்ததும், அதனை அறிவிப்பாக வெளியிட்டார். இதன் பின்னனி தான் பா.ஜ.கவின் ரகசியத்தை உடைத்துள்ளது.
இன்று காலை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகத்தில் சந்தித்தார் பா.ஜ.கவின் தேசியசெயலாளர் எச்.ராஜா. அப்போது எடப்பாடி மற்றும் பன்னீரிடம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதில் பிரதானமானது தான் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கும் விவகாரம். அதிமுக அணிகள் இணைப்பு இந்த ஆட்சியை தொடர்வது, தங்களுக்கு சாதகமாக இந்த ஆட்சியை நகற்றுவது, இந்த ஆட்சியின் கயிறை பிடித்திருப்பது பா.ஜ.க தான்.
ஆனால் தினகரன் வடிவில் இந்த ஆட்சிக்கான முற்றுப்புள்ளி வந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இருந்து இந்த ஆட்சியை தப்பிக்க வைக்க கொடுக்கப்பட்ட ஆலோசனைதான் 19பேர் தகுதி நீக்கம். சட்டரீதியாக இந்த செயல்பாடு நிக்காது என்றாலும் கால நீடிப்பு கிடைக்கும். இன்னும் சில மாதங்கள் கால நீடிப்பு கிடைக்கும். அதன் பிறகு அடுத்த அடுத்த திட்டங்களை செயல்படுத்தி கொள்ளலாம்.
ஆக சட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் பா.ஜ.கவின் திட்டப்படி அனைத்தும் அரங்கேறுவதாக அதிமுகவில் உள்ள சீனியர் எம்.எல்ஏக்கள் கூறுகிறார்கள். இதற்கான உதாரணமாக அமைந்தது தான் முதல்வர் மற்றும் துணை முதல்வரை பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்ததும், தொடர்ந்து தகுதி நீக்க அறிவிப்பு வந்ததும். ஆக தமிழக அரசியலை தனது உள்ளங்கையில் வைத்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க மேலிடம். - ஜீவா தங்கவேல் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக