tamilthehindu : : கருணாநிதி
விரைவில் நலம் பெறுவார். அவரின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும் என்று
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், முரசொலி பவள விழாவில்
பங்கேற்பதாக அவர் கூறியுள்ளார்.
கருணாநிதியை சந்திப்பதற்காக இன்று அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு வைகோ
வருகை புரிந்தார். அப்போது ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வைகோவை
வரவேற்றனர்.
கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரித்த பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''53 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவனாக இருந்தபோது கருணாநிதியை சந்தித்தேன். 23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்தேன். அவர் மீது ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக் கொண்டேன். வை கோபால்சாமியாக என்னை வைகோ என்று முதன்முதலாக அழைத்தவர் கருணாநிதி.
என்னை அரசியலில் வளர்த்தவர் கருணாநிதிதான். நெருக்கடி நிலை காலத்தின்போது எனக்கு ஆதரவு தந்தார். கடந்த 2 மாதங்களாக ஒவ்வொருநாளும் கருணாநிதி கனவில் வருகிறார்.போய் வருகிறேன் என்றதும் கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார். நல்ல நினைவாற்றலுடன் உள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெறுவார். அவரின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும்.
முரசொலி பவள விழாவில் பங்கேற்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். நானும் சம்மதம் சொன்னேன். சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள முரசொலி பவள விழாவில் கலந்துகொண்டு பேச உள்ளேன்'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக