பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும்
தினகரன் எம்.எல்.ஏ.க்கள்!
அ.தி.மு.க.வில் உள்ள டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் அந்த சொகுசு விடுதியின் நிர்வாகம் அவர்களை 24ந் தேதி இரவுக்குள் அங்கிருந்து காலி செய்ய கூறியுள்ளது. இதன் பின்னணியில் பா.ஜ.க. மேலிடமும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் இருப்பதாக தெரிகிறது.
வருகிற 25ந் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது விடுதிக்கு வரவுள்ளதாக அந்த சொகுசு விடுதி நிர்வாகம் கூறியுள்ளது. வேறு வழி இல்லாமல் அ,திமுக தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கி செல்ல உள்ளார்கள். இனி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்க உள்ளார்கள்.
- ஜீவாதங்கவேல் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக