குடும்பப் பிரச்சனைகளை பொது இடத்தில் விவாதிப்பது என்பது முகம் சுளிக்க வைக்கும் விஷயம். நான்கு சுவற்றுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனையை ஊடகங்களில் கொண்டு வருவதும், விவாதிப்பதும் ட்ரெண்ட் ஆகிவிட்டது. தற்போது சில தொலைக்காட்சிகளில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் போன்ற நிகழ்ச்சிகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், இந்நிகழ்ச்சிகள், சற்றும் நாகரீகம் இல்லாமல் இருக்கிறது. பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளன.
இந்நிலையில், மயிலாடுதுறையை சேர்ந்த பா.ஜ.க.வினர், இந்த நிகழ்ச்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த நிகழ்ச்சிகளை தடை செய்ய கோரி அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. குடும்பப் பிரச்சனையை பொது மேடையில் பல லட்சக்கணக்கான மக்களின் பார்வையில் படும்படி நடிகை குஷ்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன், ஆகியோர் நடத்தும் இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக