மாலைமலர் : மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.
இவருக்கு 50 வயதாகிறது. 50 வயதான மஹுவா மொய்த்ரா 65 வயதான பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாக தெரிகிறது.
ஆனால், இருவரும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. மஹுவா மொய்த்ரா ஏற்கனவே டென்மார்க்கை சேர்ந்த லார்ஸ் பிரோர்சன்னை திருமணம் செய்திருந்தார். கட்சித் தலைவர்களுடன் இவர்களுடைய திருமணத்தை உறுதி செய்யவில்லை.
பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரான பினாகி மிஸ்ரா, உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக உள்ளார். புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக