வெள்ளி, 14 மார்ச், 2014

BSLN இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய தயாநிதி: ஜெ., தாக்கு

திருப்பூர்: பி.எஸ்.என்.எல்., இணைப்பை முறைகேடாக வீட்டில் அமைத்திருந்த குற்றச்சாட்டுள்ள தயாநிதிக்கு போட்டியிட கருணாநிதி சீட் வழங்கியுள்ளார் . ஆனால் அது போன்று ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு எதிரான ஆதாரம் இல்லை என கருணாநிதி ஊழலை நியாயப்படுத்துகிறார் என திருப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க, பொது செயலர் ஜெ., குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் மேலும் பேசுகையில்; எண்ணூர் மின் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி பெற காலதாமதமானது. இதை, ஒரு கேள்வியாக கருணாநிதி கேட்கிறார். எங்களால், "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல்போல், அவசரமாக முடிவு எடுக்க முடியாது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்துள்ளது.
ஏர்செல்' நிறுவனத்தை மிரட்டி, "மேக்சிஸ்' நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, 675 கோடி ரூபாய் முதலீடு பெற்றதாகவும்/// அம்மா உண்மை அம்மா. அப்படிதான் அவர்கள் பெற்றார்கள் சிவசங்கரன் கூட சொல்லி இருக்கிறார்கள் அம்மா, அப்புறம் நம்ம ஜெயா TV யின் பிரதான பங்குதாரர் திருவாளர் யாரம்மா அவர் நானும் மறந்திட்டேன், அவர் நம்ம TV யில் முதலீடு செய்வதற்கு அங்கே நீங்களும் உங்கள் தலைமையிலான் அதிமுக அரசும் மணலை, கனிம வளத்தை கொள்ளை அடிக்க பட்டா போட்டு கொடுத்ததன் விளைவாக அவர் பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பெரும் தொழில் அதிபர் ஆகிவிட்டாராமே, அந்த பணம் தான் ஜெயா TV யில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், நண்பன் சொல்கிறான் அம்மா உண்மையா அம்மா...
தமிழகத்துக்கு ஆதரவாக, மத்திய அரசு இல்லை. தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அரசே இருந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா, "ஏர்செல்' நிறுவனத்தை மிரட்டி, "மேக்சிஸ்' நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, 675 கோடி ரூபாய் முதலீடு பெற்றதாகவும், பி.எஸ்.என்.எல்., இணைப்பை முறைகேடாக வீட்டில் அமைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாநிதிமாறன் ஆகியோரை வேட்பாளராக கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேள்வி கேட்டதற்கு, "அந்த வழக்குகள் எல்லாம் ஆடிக்கொண்டிருக்கின்றன; சாட்சிகள் இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது' என, கூறுகிறார். ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இந்தியாவில் ஏற்றுமதியை ஊக்குவித்து, இறக்குமதியை குறைக்க, மீன் பிடி உரிமை பெற, மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக, 2ஜி, நிலக்கரி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தர, ஊழல் பணத்தை பறிக்க, கறுப்பு பணத்தை மீட்க, தனி நபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த, ஜவுளி ஏற்றுதிமதியை அதிகரிக்க, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: