செவ்வாய், 11 மார்ச், 2014

டாடா' மூடில் பா.ம.க., - பா.ஜ., 48 மணி நேர கெடு ?

தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, எட்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்; அதை ஏற்று, 12ம் தேதிக்குள், கூட்டணி முடிவை வெளியிட வேண்டும் என, அக்கட்சிக்கு, பா.ஜ., கெடு விதித்துள்ளது. அதேநேரத்தில், 12 தொகுதிகள் கேட்டு, பட்டியல் கொடுத்த, பா.ம.க., தற்போது, 10 தொகுதிகள் வேண்டும் என்றும், அந்த பத்தும், அக்கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும், ஒற்றைக்காலில் நிற்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு, தீர்வு காண, 12ம் தேதி வரை, அக்கட்சிக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.நீண்ட இழுபறிக்கு பின், தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளது. தே.மு.தி.க., - ம.தி.மு.க.,வுடன் தொகுதிகள் உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது. விஜயகாந்த், பா.ம.க. இரு கட்சிகளுமே கூட்டணியில் இல்லை என்றால் நல்லது....ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடக்காது....தேய்ந்து வரும் இரு கட்சிகளையும் திரும்பவும் வளர்த்து விட்ட பாவம் பா.ஜ.க. மீது விழும்....இரு கொள்ளியில் நல்ல கொள்ளி எது என்றால், பெரும்பாலான பா.ஜ.க.வினரின் விருப்பம் விஜயகாந்தே....ஆகவே, ராமதாஸ் கட்சியை வெளியேற்ற சந்தர்ப்பம் கிடைத்தால், ரொம்ப நல்லது, போயிட்டு வாங்க என்று அனுப்பி வையுங்க.....புண்ணியமா போகும்
தே.மு.தி.க.,வுக்கு, 14, ம.தி.மு.க.,வுக்கு, ஏழு என, முடிவாகி உள்ளது. மேலும், ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., - என்.ஆர்.காங்., கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீதியுள்ள, 16 தொகுதிகளை, பா.ஜ.,வும், பா.ம.க.,வும், தலா, எட்டு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும் என, உடன்பாடு போடப்பட்டு உள்ளது. ஆனால், எட்டு தொகுதிகளுக்கு உடன்பட, பா.ம.க., தயக்கம் காட்டி வருகிறது. ஏற்கனவே, அக்கட்சி, 10 தொகுதி களுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அரக்கோணம், ஆரணி, கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை, புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், சேலம், மயிலாடுதுறை என, 10 தொகுதிகளுக்கு, பா.ம.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த பத்தும் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

ஒருவேளை, இந்த பத்தில், ஏதாவது மாற்றம் இருக்குமானால், அதற்கு பதிலாக, தர்மபுரி தொகுதியை, பா.ம.க.,வுக்கு ஒதுக்க வேண்டும் என, கூறுகிறது.இதற்கிடையில், பா.ம.க.,வின் பத்தில்,ஆறு தொகுதிகளை, தே.மு.தி.க.,வும் கேட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில், பா.ஜ.,வும் போட்டியிட விரும்புகிறது. ஆனால், '12ம் தேதிக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டு விட்டது. 13ம் தேதி டில்லியில், பா.ஜ., தேசிய செயற்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில், கூட்டணி பற்றிய முழு விவரத்தையும், தொகுதி பங்கீட்டையும், தமிழக பா.ஜ., தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதற்குள், பா.ம.க., தன் முடிவை தெரிவித்து விடும் என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.,வின் கெடுவுக்குள், பா.ம.க., பதில் அளிக்காவிட்டால், அந்தக் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த, 10 தொகுதிகளில் மட்டுமின்றி, மேலும், சில தொகுதிகளிலும், தனித்தே போட்டியிடும் என, நம்பப்படுகிறது.


மூன்று நாளில் பா.ஜ., வேட்பாளர் பட்டியல் :



'மூன்று நாட்களில், தமிழகத்தில், பா.ஜ.,வின் லோக்சபா வேட்பாளர் பட்டியலும், கூட்டணிக் கட்சிகளுடன், தொகுதி பங்கீடு செய்த விவரமும் வெளியிடப்படும்' என, பா.ஜ., தமிழக பொறுப்பாளர் முரளீதர் ராவ் கூறினார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் முதல் முறையாக, 'மெகா கூட்டணி' அமைத்துள்ளோம். தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியும் நடக்கிறது.இவற்றுக்கு, பா.ஜ.,வின் மத்திய தேர்தல் குழுவிடம் அனுமதி பெற்று, இன்னும் மூன்று நாட்களில் வெளியிடுவோம். கட்சியின், தலைவர் ராஜ்நாத் சிங், இந்த விவரங்களை சென்னையில் அறிவிப்பார். இதன்பின், தமிழகத்தில் நரேந்திர மோடியின் பிரசாரம் அறிவிக்கப்படும்.இந்த தேர்தலில், ஊழல், மோசமான நிர்வாகம், செயல்படாமல் முடங்கிய மத்திய அரசு ஆகியவற்றை முன்னிறுத்தி, பிரசாரம் செய்கிறோம். இந்த நோக்கத்திலிருந்து, திசை திரும்பி, அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், எங்களது சக்தியை வீணாக்கவும் விரும்பவில்லை.தேர்தல் லோக்சபாவுக்கு நடப்பதால், அதை முன்னிறுத்தி தான், பிரசாரம் செய்வோம். 'தமிழகத்தில் மோடி அலை இல்லை; எனக்கு தெரிந்து வங்காள விரிகுடாவில் தான் அலை வீசுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் மூத்த தலைவர், அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. அதை அவர் தீர்த்து வைத்தால் போதுமானது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: