புதன், 12 மார்ச், 2014

காங்கிரசை உடைக்க வாசன் போட்ட திட்டம் 'அம்பேல்' !பிரதமரிடம் வாங்கி கட்டினார் !

கோபமடைந்த பிரதமர், வாசனை கண்டித்துள்ளார். 'மத்திய அமைச்சரவையில் இருந்து கொண்டு, நீங்கள் இப்படி குறைகூறுவது பொருத்தமான செயல் அல்ல. பிரதமர் என்ற முறையில், நான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாருக்கும் தெரியும். அதை விமர்சிக்கவோ, குறை சொல்லவோ, உங்களுக்கு உரிமை கிடையாது' என்று பிரதமர் கொஞ்சம் சூடாக பேசியதாக தெரிகிறது. அ.தி.மு.க.,விடம் இருந்து, 'கிரீன்' சிக்னல் கிடைக்காததாலும், எதிர்பார்த்த அளவுக்கு, மூத்த நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்காததாலும், காங்கிரசை உடைக்கும் முயற்சியை, கடைசி நேரத்தில் கைவிட்டார், வாசன். 'தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; 39 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யப் போகிறேன்' என்றும், அவர் அறிவித்துள்ளார்.
தனிக்கட்சி துவங்கும் திட்டத்தோடு, டில்லியில் இருந்து திரும்பிய மத்திய அமைச்சர் வாசன், நேற்று காலை, தன் ஆதரவாளர்களை அழைத்தார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், ஆதரவாளர்கள் கூடினர். அவர் எதிர்பார்த்த அளவுக்கு, முன்னணி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தற்போதைய எம்.பி.,க்களில் ஆரூண், ராமசுப்பு மட்டுமே வந்திருந்தனர்; எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வரவில்லை.   எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் யாரும் நம்பமாட்டாங்க தமிழகத்தில்
திரண்டனர்

முன்னாள் எம்.எல்.ஏ.,க்களில், கோவை தங்கம், விடியல் சேகர் வந்திருந்தனர். மாவட்ட தலைவர்களில், காஞ்சிபுரம் நெடுஞ்செழியன் மட்டும் வந்தார். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், யுவராஜ் உட்பட அவரது ஆதரவாளர்கள், பலர் திரண்டனர்.தற்போதுள்ள சூழ்நிலையில், காங்கிரசில் தொடர்வதா அல்லது தனிக்கட்சி துவங்குவதா என்பது குறித்து, அவர்களுடன் வாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் உட்பட சிலருடன், தொலைபேசியில் கருத்து கேட்டார். ஞானசேகரன் உட்பட, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலருடனும் பேசினார்.

யாருடன் கூட்டணி

கருத்து சொன்ன யாருமே, வாசனின் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டனர். காங்கிரசை உடைத்து, தனிக்கட்சி துவங்கினால், போதுமான ஆதரவு கிடைக்காது என, அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.மேலும், தனிக்கட்சி துவக்கிய பின், யாருடன் கூட்டணி வைப்பது என்ற, கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். 'காங்கிரசே வேண்டாம்' என, தி.மு.க., திட்டவட்டமாக கதவடைப்பு செய்து விட்டதால், அ.தி.மு.க.,விடம் தான் அடைக்கலம் கேட்க வேண்டும் என, பதில் கூறப்பட்டுள்ளது.முன்னர், இதுபோன்ற ஆலோசனையை, வாசன் நடத்தியபோது, 'காங்கிரசை விட்டு வெளியே வாருங்கள்; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என, ஆளும் கட்சி தரப்பில், உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில், இப்போது தனியாக போகலாம் என, வாசன் கருதியுள்ளார். ஆனால், ஆளும் கட்சியிடம் இருந்து, 'கிரீன் சிக்னல்' வரவில்லை என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.தனித்துப் போட்டி என்ற நிலை எடுத்து, உடனிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும், அ.தி.மு.க., வெளியேற்றி விட்டது. இந்த சூழலில், அந்த கட்சியுடன் அணி சேரும் எதிர்பார்ப்பு எப்படி நிறைவேறும்' என்றும், ஆதரவாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.இப்படி, கட்சியில் போதுமான வரவேற்பு கிடைக்காததால், தனிக்கட்சி துவங்கும் திட்டத்தை, தற்போதைக்கு, வாசன் கைவிட்டுள்ளார் என்கின்றனர், அவரின் ஆதரவாளர்கள்.
வாசனின் இந்த திடீர் முயற்சிக்கு என்ன காரணம் என்று விசாரித்தால், டில்லியில் நடந்த விவகாரத்தை சுட்டிக்காட்டுகிறது, அவரது ஆதரவு வட்டாரம். அந்த வட்டாரங்கள் கூறியதாவது:டில்லியில் நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங்கை, வாசன் சந்தித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் விவகாரம் பற்றி பேசியுள்ளார். இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் பற்றியும் பேசிய வாசன், பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றம் சாட்டியிருக்கிறார்.இதனால், கோபமடைந்த பிரதமர், வாசனை கண்டித்துள்ளார். 'மத்திய அமைச்சரவையில் இருந்து கொண்டு, நீங்கள் இப்படி குறைகூறுவது பொருத்தமான செயல் அல்ல. பிரதமர் என்ற முறையில், நான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாருக்கும் தெரியும். அதை விமர்சிக்கவோ, குறை சொல்லவோ, உங்களுக்கு உரிமை கிடையாது' என்று பிரதமர் கொஞ்சம் சூடாக பேசியதாக தெரிகிறது.

கோபத்தில் கடிந்தார்

இது, வாசனை கடுமையாக அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை அழைத்து, கூட்டணி விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் இப்படியொரு நிலைமை இருப்பதை, ஏன் என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என, கடிந்துள்ளார்.தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் கூறியதாக, ஞானதேசிகன் கூறிய விளக்கத்தை, சோனியா ஏற்கவில்லை. எனக்கு, இ - மெயில் அனுப்பியிருக்கலாமே என கூறி விட்டு, மூன்று நிமிடத்தில் விவாதத்தை முடித்து கோபத்தில் வெளியேறி விட்டார்.இந்த தகவலும், வாசனை கடுப்பேற்றியது. அதன் எதிரொலி தான், டில்லியில், காங்கிரசை தலைமையை விமர்சித்து, வாசன் அளித்த பேட்டி. அந்த சூட்டோடு, சென்னையில் நேற்று, இந்த ஆலோசனையை நடத்தியுள்ளார்.இவ்வாறு, வாசன் ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: