சனி, 15 மார்ச், 2014

புதிய வழக்கில் தேவயானியை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு:

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே மீது மீண்டும் ஒரு வழக்கினை அமெரிக்கா தொடர்ந்துள்ளதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில் தேவயானிக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும்  இரு நாடுகளுக்கிடையேயான உறவினை பாதிக்கும என்று எச்சரித்துள்ளது. தேவயானி கோப்ரகடே மீது தொடரப்பட்ட விசா மோசடி வழக்கை நியூயார்க் நீதிமன்றம் இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்திருந்த நிலையில் மீண்டும்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்குரைஞரான ப்ரீத் பராரா புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றதில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தேவயானி, தமது வீட்டுப் பணியாளாரான சங்கீதா ரிச்சர்டுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, உழைப்பைச் சுரண்டியுள்ளார் என்றும், பணியாளர் குறித்து பொய்யான தகவல்களைத் தந்து விசா பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
 இதனையடுத்து தேவயானியை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் இந்தியாவில் இருப்பதால் கைது செய்ய முடியாது என்றும், தேவ்யானி அமெரிக்கா வரும்போது அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: