
இந்த நிலையில் இன்று அஞ்சலி மீது சென்னையில் புகார் கொடுத்திருந்தார்
மு.களஞ்சியம் . அடுத்த சில மணி நேரங்களில் அஞ்சலியைக் காணவில்லை என்று
ஹைதராபாதிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இதனை அஞ்சலியின் சகோதரர்
ரவிசங்கரும் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில் ஏற்கெனவே பலவித
பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் அஞ்சலி மீது, படப்பிடிப்புக்கு வரவில்லை
என்று கூறி புகார் தரப்போவதாக நடிகர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
இவருடன் போல்பச்சன் பட ரீமேக்கில் நடிக்கத்தான் அஞ்சலி ஹைதராபாதில்
முகாமிட்டார்.பொதுவாக இந்த மாதிரி சிக்கலில் நடிகைகள் சிக்கித்
தவிக்கும்போது, உடன் நடிப்பவர்கள் உதவுவதுதான் வழக்கம். ஆனால் அஞ்சலிக்கு
மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக வெங்கடேஷ் அறிவிப்பு அமைந்துள்ளது
பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
குறிப்பாக வெங்கடேஷ் படத்தை ஒப்புக் கொண்டதிலிருந்துதான் அஞ்சலிக்கு
டார்ச்சர் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்காக அஞ்சலியை பலவிதத்தில் டார்ச்சர் செய்தாராம் சித்தி பாரதிதேவி. அதன் பிறகே பொறுமையிழந்து மீடியாவிடம் ஓடிவந்தார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்காக அஞ்சலியை பலவிதத்தில் டார்ச்சர் செய்தாராம் சித்தி பாரதிதேவி. அதன் பிறகே பொறுமையிழந்து மீடியாவிடம் ஓடிவந்தார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக