
“வட மாநில மாணவர்களை
கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ள
டாக்டர் ராமதாஸ், அவர்கள் துப்பாக்கி சகிதம் நடமாடுகிறார்கள்” என்கிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் சிலர், தங்களது மாநிலங்களில் இருந்து கள்ளத்கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து இங்குள்ள ரவுடிகளுக்கு விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்களது கல்லூரிகளில் வட இந்திய மாணவர்களைச் சேர்க்கத் துடிக்கும் கல்வி நிறுவனங்கள், அதற்கு ஆள் பிடிப்பதற்காக தங்களது வட இந்திய முன்னாள் மாணவர்களையே தரகர்களாக அமர்த்தியுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடித்து தரும் தரகர் வேலை பணம் கொழிக்கும் ஒன்றாகிவிட்டதால், அதில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை மிரட்டவும், தாக்கவும் துப்பாக்கிகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றனர்.
மாணவர் சேர்க்கை இல்லாத நேரத்தில் வழிப்பறி, கொள்ளை போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
தனியார் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு காப்பாளரை நியமித்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், பணம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட கல்வி நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாததால் மாணவர் விடுதிகள் ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாக மாறிவிட்டன.
தனியார் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அதை முறியடிக்க அந்த விடுதிகளில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். இதற்காக திறமையான, நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட புதிய படை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
வைத்தியர் ஐயா… நம்ம கா.வெ.குரு அண்ணனிடம் துப்பாக்கி இல்லைதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக