
நிலையில், இலங்கை அரசு வெளிப்படையாக அதற்கு கவுன்டர் கொடுக்கவில்லை. ஆனால், ஓசைப்படாமல் சில காரியங்கள் செய்யப்படுகின்றன. இலங்கையில் கப்பல் கட்டும் அரசு நிறுவனமான கொழும்பு டொக்யார்ட்டில் (Colombo Dockyard) பணியாற்றும் 2000 இந்திய தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கத்தின் தலைவர் அண்மையில், “தமிழகத்தில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்” என்று எச்சரித்திருந்தார். அவர் சார்ந்த தொழிற்சங்கம், அரசு தொழிற்சங்கம். இப்போது, கொழும்பு டொக்யார்ட்டில் பணிபுரியும் இநந்திய தொழிலாளர்கள் பற்றி அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இலங்கையில் கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம், கொழும்புத் துறைமுகத்தில் செயற்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.
இலங்கை தொழில்துறை அமைச்சர் காமினி லொக்குகே செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொழும்பு டொக்யார்ட்டில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்தியத் தொழிலாளர்கள் இங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள். அவர்கள் விரைவிலேயே சிங்களம் பேசவும் கற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால், இவர்களுக்குப் பதிலாக இலங்கையர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்கு அரசு உத்தரவிட உள்ளது” என்றார்.
இதற்கிடையே, மற்றொரு விஷயம்.
கொழும்புத் துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனா மேற்கொள்கிறது. அவர்கள், கொழும்பு துறைமுகப் பகுதியில் செயல்படும் டொக்யார்ட்டில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு அழுத்தங்கள் கொடுத்திருக்கவும் சான்ஸ் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக