புதுடில்லி:பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த, சபா, பராக் சலீம் ஆகிய
இருவரும், உடல் ஒட்டிப் பிறந்த சகோதரிகள். இப்போது, 15 வயதாகும் இருவரின் உடலையும், அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாக பிரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.ஏழைச் சிறுமிக
இதையடுத்து, தங்கள் குழந்தைகளை பராமரிக்க, பீகார் மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என, அக்குழந்தைகளின் பெற்றோர் கோரினர். இந்த வழக்கு, மீண்டும், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா தலைமையிலான, "பெஞ்ச்' தங்கள் உத்தரவில்கூறியதாவது:
தினமும் பரிசோதனை:ஒட்டி பிறந்த சகோதரிகள், சபா மற்றும் பராக் சலீம் ஆகியோரின் பராமரிப்பு செலவை பீகார் அரசு ஏற்க வேண்டும். அவர்களுக்கான மருத்துவ செலவையும், பீகார் அரசு பார்த்து கொள்ளவேண்டும்.பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.எனினும், அந்த சகோதரிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க தயாராக இல்லை என்பதால் குழப்பம் நிலவுகிறது.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக