மின்வாரிய இணைப்பிலிருந்து மின்சாரத்தை திருடி, நாஞ்சில் சம்பத் பங்கேற்ற
பொதுக்கூட்டத்தை, அ.தி.மு.க.,வினர் நடத்தியது, மக்களிடையே பெரும்
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில், பொதுக்கூட்டம் நடந்தது. ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் முதல் கூட்டம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
அரசின் சாதனைகளைப் போற்றும் பதாகைகள், அலங்கார விளக்குகள், பொதுக்கூட்ட வரவேற்பு பேனர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முதல்வரின் உருவ படம், இரட்டை இலை சின்னம் மற்றும் வண்ண, வண்ண விளக்குகள் கொண்ட தோரணங்கள் என, மயிலை மாங்கொல்லை திடலை, அ.தி.மு.க.,வினர் அமர்க்களப்படுத்தி இருந்தனர்.
கச்சேரி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில், ஏராளமான அலங்கார விளக்குகளை அமைத்திருந்தனர். மயிலை மாங்கொல்லை திடலுக்கு வரும் வழிகளில், "டியூப்' லைட்டுகளுடன், கட்சிக் கொடியையும் பறக்கவிட்டிருந்தனர்.
கூட்டத்திற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே, அனைத்து அலங்கார விளக்குகளும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
கூட்டம் முடிந்து, நள்ளிரவுக்கு மேலும் விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தன. மேடையையும் பச்சை நிற விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.
இந்த விளக்குகளுக்கான மின்சாரத்துக்கு, மேடை அருகே மட்டும் "ஜெனரேட்டர்' வைத்திருந்தனர். சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுக்கான மின்சாரத்தை, மின்வாரிய லைனிலிருந்து "கொக்கி' போட்டு, எடுத்திருந்தனர்.
மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவும் நேரத்தில், பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, "ஜெனரேட்டர்' வைத்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கே மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இந்நிலையில், மின்வாரிய லைனிலிருந்து, "கொக்கி' போட்டு மின்சாரத்தைத் திருடி, அலங்கார விளக்குகள் அமைத்திருந்தது, மயிலை பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதனால், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்கள், அலங்கார விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில், அலங்கார விளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை, மின் இணைப்பு பெட்டியில் இருந்து, திருடியள்ளனர். மின்வாரியமும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களில் நடப்பதை எங்களால் தடுக்க முடியாது. அதுவும், ஆளும் கட்சிக் கூட்டத்தில், எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. மின் திருட்டைத் தடுக்க, அமலாக்கப் பிரிவு தனியாக உள்ளது. அப்பிரிவு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
- நமது நிருபர் -

s.maria alphonse pandian - mettur,இந்தியா
கொக்கி போட்டு வளைக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத் என்பதாலேயே கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....
கூட்டம் முடிந்து, நள்ளிரவுக்கு மேலும் விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தன. மேடையையும் பச்சை நிற விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.
இந்த விளக்குகளுக்கான மின்சாரத்துக்கு, மேடை அருகே மட்டும் "ஜெனரேட்டர்' வைத்திருந்தனர். சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுக்கான மின்சாரத்தை, மின்வாரிய லைனிலிருந்து "கொக்கி' போட்டு, எடுத்திருந்தனர்.
மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவும் நேரத்தில், பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, "ஜெனரேட்டர்' வைத்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கே மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இந்நிலையில், மின்வாரிய லைனிலிருந்து, "கொக்கி' போட்டு மின்சாரத்தைத் திருடி, அலங்கார விளக்குகள் அமைத்திருந்தது, மயிலை பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதனால், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்கள், அலங்கார விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில், அலங்கார விளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை, மின் இணைப்பு பெட்டியில் இருந்து, திருடியள்ளனர். மின்வாரியமும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களில் நடப்பதை எங்களால் தடுக்க முடியாது. அதுவும், ஆளும் கட்சிக் கூட்டத்தில், எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. மின் திருட்டைத் தடுக்க, அமலாக்கப் பிரிவு தனியாக உள்ளது. அப்பிரிவு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக