மதுரை
மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா
பாண்டியனின் மகன் மருது பாண்டியன்-ஆர்த்தி திருமணம் 10.12.2012
திங்கள்கிழமை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா மகாலில் நடந்தது.
மத்திய
மந்திரியும், தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி
திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர்
பேசியதாவது:-
நமக்கு
துரோகம் செய்தவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எங்கும்
போகட்டும். நம்மை விட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும்
தெரியும். நம்மால் பதவியும், பொருளாளதார நிலையில் உயர்ந்தவர்களும் நம்மை
விட்டு சென்ற துரோகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.
மதுரையில்
என்றைக்கும் நாம் தான். நம்மை மீறி யாரும் நடை போட முடியாது. நாம் பெற்று
கொடுக்காத பதவியா? பட்டமா? நாம் தேர்தலில் உழைத்து வெற்றி பெற்றவர்கள். இது
அனைவருக்கும் தெரியும். அவர்களை இயற்கையே பார்த்து கொள்ளும். நம்மிடம்
இருந்த போது ஜெயிக்க முடியாதவர்கள் நம்மை விட்டு சென்று ஜெயிக்க
போகிறார்களா? அதை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக