சிட்னி, டிச. 13-பல் வேறு நாட்டு
அரசுகளின் இணையதளத்தில் உள்ள ரகசிய செய்தி களை வெளியுலகிற்கு
அம்பலப்படுத்தி பர பரப்பை ஏற்படுத்தியவர் 'விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின்
உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. ஆஸ் திரேலியாவை சேர்ந்த இவர் மீது ஸ்வீடன்
நாட் டில் பாலியல் குற்றம் தொடர்புடைய வழக்கு நடந்து வருவதால், ஈக் வாடர்
நாட்டில் தஞ்ச மடைந்து வசித்து வரு கின்றார்.
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரே
லியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப் பினர் பதவிக்கு போட்டி யிட
உள்ளதாக ஜுலி யன் அசாஞ்சே அறிவித் துள்ளார். விக்கிலீக்ஸ் என்ற பெயரில்
ஆஸ்தி ரேலியாவில் அரசியல் கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட அவர்
திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டு சட்டப்படி அயல்
நாட்டில் வசிக்கும் வேட் பாளராக போட்டியிடப் போவதாக அவர் கூறி யுள்ளார்.
ஆஸ்திரேலி யாவில் புதிதாக அர சியல் கட்சி தொடங்க, ஒரு மாகாணத்தின் வாக்
காளர் பட்டியலில் உள்ள 500 பேர் பரிந்துரை செய்ய வேண்டும்.
தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தை விரும் பும்
1.7 மில்லியன் உறுப் பினர்களும், 2.1 மில்லி யன் பேஸ் புக் ஆதரவா
ளர்களும், ஆஸ்திரேலி யாவில் தனக்கு ஆதர வாக, இணையதளத்தின் வாயிலாக தேர்தல்
பிரச் சாரம் செய்ய முன்வரு வார்கள் என அசாஞ்சே நம்பிக்கை தெரிவித்து
உள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் அல்லது விக்டோரியா
மாகாணத்தில் ஜுலியன் அசாஞ்சே போட்டி யிடக்கூடும் என ஆஸ்தி ரேலிய ஊடகங்கள்
கருத்து வெளியிட்டுள்ளன.http://www.viduthalai.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக