Viruvirupu
புதிய கட்சியாக, ‘கர்நாடக ஜனதா’ கட்சியைத் தொடங்கிய எடியூரப்பாவுக்கு சட்ட மேலவை உறுப்பினர் சிவராஜ் விருந்தளித்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் 21 சட்டமன்ற உறுப்பினர்கள், 7 மேலவை உறுப்பினர்கள் மற்றும் 4 மக்களவை எம்.பி.க்கள் எடியூரப்பாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.
புதிய கட்சியின் தொடக்க விழாவிலும் பாரதிய ஜனதாவின் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கட்சி மேலிடத்திடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தவர்கள்.
ஆனால், முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
தாம் பதவி விலகப் போவதில்லை என கூறியுள்ள முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டசபையை கலைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். “பாரதிய ஜனதா அரசுக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது” என்கிறார் அவர்.
எடியூரப்பாவை ‘காகித புலி’ என விமர்சித்துள்ள கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பா, “எடியூரப்பா தமது கட்சி தொடக்க விழாவுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று கூறினாரே.. அவர் கூறியபடி 60 எம்.எல்.ஏ.க்கள் ஏன் வரவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக