திங்கள், 10 டிசம்பர், 2012

ரயில் விபத்துக்கள்: இந்தாண்டு 16 ஆயிரம் பலி- ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடில்லி: இந்தாண்டு ரயில் விபத்துக்களில் 16 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறைக்கென பார்லிமென்டில் ஆண்டு தோறும் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பல்வேறு ரயில்வே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் , ஆண்டு தோறும் ரயில் விபத்துக்களால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக ரயில் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; http://www.dinamalar.com/

ரயில் செல்லும் பாதைகளில் ஆளில்லா ரயில்வே கிராங்சிகுகள், ரயில்வே மேம்பாலம், சாலையின் குறுக்கே செல்லும் ரயில்பாதைகள் ஆகியவற்றில் பல்வேறு ரயில்பாதைகளில் ஏற்படும் விபத்துக்களால் இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரையில் 15, 934 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் இந்தாண்டு நடந்த விபத்துக்களில் 71 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு பலி எண்ணிக்கை 202 ஆக இருந்தது. தவிர பல்வேறு ரயில் விபத்துக்களில் கடந்த ஆண்டில் 14,611 பேர் பலியாகியுள்ளனர்.இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திட்டங்களை விரைந்து முடிக்க தாமதம்



இது குறித்து ரயில் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் மொத்தம் 13,530 ஆளில்லா ரயில்வே கிராசிங்குள் உள்ளன. இவற்றினால் ஏற்படும் விபத்துக்ளை தடுக்க ,ரயில்வே மேம்பாலங்களும், சாலையில் கீழ் ரயில் பாதைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தீர்க்கவும், திட்டங்களை விரைந்து முடிக்கவும் மத்திய அரசு ,தேசிய போக்குவரத்து அமைச்சகத்துடன் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை: