பாட்னா: பீகாரில், குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகளும், தாதாக்களும்,
தங்களுக்கு தேவையான ஆயுதங்களை, வாடகைக்கு பெறும் வசதி உள்ளது. இதை
பயன்படுத்தி, தங்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களை வாங்கி, குற்றச் செயல்களில்
பயன்படுத்தி, பின் அவற்றை ஒப்படைக்கும்
வழக்கம், அங்கு உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாரம்பரியம், பண்பாடு நிறைந்ததாக விளங்கிய பீகார் மாநிலம், இப்போது, ரவுடிகள், தாதாக்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்குவதை, சமீப கால சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஊர் ஊருக்கு ரவுடி கும்பல்களும், தாதாக்களும், சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்.பீகார் மாநில ரவுடிகள் மற்றும் தாதாக்களுக்கு, பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவற்றை வாடகைக்கு விடும் சமூக விரோதிகளும், அங்கு பலர் உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.சாதாரண, கள்ள துப்பாக்கியை, 3 மணி நேரத்திற்கு, 300 ரூபாய் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்; நாள் வாடகை என்றால், 500 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த ஆயுதத்தின் உண்மை விலையை அவர்கள், டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.கள்ள துப்பாக்கியின் மார்க்கெட் விலை, 15 ஆயிரம் ரூபாய் என்றால், அதை வாடகைக்கு வாங்குபவர்கள், அந்த தொகையை, டெபாசிட்டாக செலுத்த வேண்டும். 9 எம்.எம்., பிஸ்டலை, ஒரு நாள் வாடகைக்கு வாங்க விரும்புபவர்கள், 1,000 முதல், 2,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்; தோட்டாக்களுக்கு விலை தனி.ஆயுதங்களை வாடகைக்கு விடுவதற்கு பல கும்பல்கள் உள்ளன. புதிதாக வன்முறையில் இறங்க விரும்புபவர்களுக்கு, இது மிகவும் எளிதாகப் போய்விடுகிறது.http://www.dinamalar.com/
ஆயுதங்களை சேகரிக்க வேண்டும் என்ற கவலையே கிடையாது. பணத்தை மட்டும் கையில் வைத்திருந்தால் போதும்; தேவையான ஆயுதங்களை வாங்கிக் கொள்ளலாம்.பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அருகில் உள்ள, மனேர் மற்றும் பிகிடா போன்ற பகுதிகளில், ஆயுத வாடகை அமைப்புகள் இயங்கி வருகின்றன. யார் வேண்டுமானாலும், எவ்வளவு ஆயுதங்களை வேண்டுமானாலும் இங்கு வாங்கிக் கொள்ளலாம் என்பது தான் விசேஷம்.சமீபத்தில் இந்த பகுதியில் பொறுப்பேற்ற, போலீஸ் அதிகாரி ஒருவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், ஆயுத வாடகை கும்பல்கள் சிக்கின. மறைவிடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த, துப்பாக்கி தோட்டாக்கள், கடைகளின், ÷ஷா-கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது போல, அடுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை, மூடைமூடையாக அள்ளி வந்த அந்த போலீஸ் அதிகாரி, அடுத்த சில நாட்களிலேயே மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக