ஞாயிறு, 9 டிசம்பர், 2012

எதியூரப்பா Launch கர்நாடக ஜனதா கட்சி' BJP MLA க்கள் பங்கேற்பு!

Yeddyurappa formally launches Karnataka Janata Party, huge show of strength in HaveriHaveri: Former Karnataka Chief Minister BS Yeddyurappa formally launched the newly minted Karnataka Janata Party (KJP) and took over as its President at a massive rally in Haveri in north Karnataka today. After months of threats, behind the scene bargaining and public displays of strong emotion, Mr Yeddyurappa had finally quit the BJP at the end of November.
In a sign of potential trouble for the BJP government in the state, at least 10 ruling party MLAs attended the rally ignoring the party warnings to legislators and other leaders to keep away from it. Prior to the launch, Mr Yeddyurappa also hosted a breakfast meeting which was attended by at least 21 BJP MLAs, seven MLCs and four Lok Sabha MPs. Actress Pooja Gandhi, who was with the JD(S), was also there to join the KJP.
Today's event can be billed as a show of strength. Thousands of people turned up in Haveri for Mr Yeddyurappa's rally.
ஹவேரி: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எதியூரப்பா முறைப்படி தமது புதிய கட்சியான கர்நாடக ஜனதா கட்சி என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கர்நாடகாவின் ஹாவேரியில் இன்று பிற்பகல் நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் பிரம்மாண்ட பேரணியுடன் தமது கட்சியை முறைப்படி தொடங்கினார் எதியூரப்பா. எதியூரப்பாவின் புதிய அரசியல் பயணத்தில் பாஜகவின் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக எதியூரப்பா கொடுத்த காலை விருந்தில் 21 பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 எம்.எல்.சிகளும் 4 லோக்சபா எம்.பிக்களும் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தின் எச்சரிக்கைகளையும் மீறி எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் எதியூரப்பாவின் பின்னால் அணி திரள்வதால் பாஜக தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலரும் எதியூரப்பா கட்சியில் ஐக்கியமாகியிருக்கின்றனர்.
கர்நாடக ஜனதா கட்சி தொடக்க விழாவில் பேசிய எதியூரப்பா, கர்நாடகா மக்களுக்கு நன்மை செய்யவே தாம் கட்சியைத் தொடங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தற்போதைய ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் அரசைக் கவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்த தயாரா? என்றும் எதியூரப்பா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: