சனி, 15 டிசம்பர், 2012

வீதிக்கு வந்தது ஜெனரேட்டர் power cut sale

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜெனரேட்டர் வாங்குவது பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் திருச்சியில் சாலையோரங்களில் வைத்து ஜெனரேட்டரை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் சுமார் 14 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் முடங்கி விட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து, செய்வதறியாது திகைத்து வருகின்றனர். காவிரியில் நீர் திறந்து விடப்படாத நிலையில், போர்வெல் மற்றும் கிணறுகளில் உள்ள மின்மோட்டரை கூட இயக்க முடியாததால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையும் நீடித்து வருகிறது.


இந்நிலையில் அரசிடமிருந்து கம்பி கழியாக தங்களுக்கு தேவையான அளவு மின்சாரத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால், அதற்கான மாற்று வழிகளை தேடி விவசாயிகளும் பொதுமக்களும் களமிறங்கி விட்டனர். பல வீடுகளில் சூரிய ஒளி சக்தி மூலம் (சோலார்) மின்சாரம் தயாரிப்பதற்கான சாதனங்களை பொருத்தி வருகின்றனர். சிலர், மின்வெட்டு நேரங்களை சமாளிப்பதற்காக சிறிய அளவிலான ஜெனரேட்டர்களை வாங்க தொடங்கி விட்டனர்.

திருச்சியின் பல இடங்களில் தற்போது ஜெனரேட்டர்களையும் ரோட்டோரத்தில் வைத்து விற்பனை செய்ய தொடங்கி விட்டனர். ஏராளமானோர் அங்கு வாகனங்களை நிறுத்தி ஜெனரேட்டர்களின் விலை மற்றும் திறன் பற்றி விசாரித்து செல்கின்றனர். சிலரோ அந்த இடத்திலேயே ஜெனரேட்டரை விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர்.இதுபற்றி திருச்சி பொன் னகர் பகுதியில் ஜெனரேட்டர் விற்பனையில் ஈடுபட்டிருந்த சந் துரு என்பவர் கூறுகையில், வீடு மற்றும் அலுவலகங்களுக்கும், விவசாய பணிகளுக்கும் மின்சாரம் பெற ஜெனரேட்டர் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஜெனரேட்டர் விற்பனை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அலைச்சலின்றி அவற்றை பெறும் வகையில் சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகிறோம்.

வீடு மற்றும் அலுவலகங்களுக்கான ஒரு கே.வி திறனுக்கு ரூ.20 ஆயிரம், 2 கே.வி திறனுக்கு ரூ.36 ஆயிரம் என ஜெனரேட்டர் விற்கப்படுகிறது. விவசாய பணிக்கான 5 கே.வி திறனுடைய ஜெனரேட்டர் ரூ.56 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது என்றார்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை: