திங்கள், 25 ஜூன், 2012

இந்த முட்டாள்கள் ஏன் கிணறுகளை மூடி வைக்கவில்லை.. சல்மான் கான் குமுறல்



 Why Don T These Idiots Cover Bore Well Slams Salman

மும்பை: ஹரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி மஹி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 நாள் உயிர்ப் போராட்டத்துக்குப் பின் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து நடிகர் சல்மான் கான் வேதனை தெரிவித்துள்ளார். இந்த முட்டாள்கள் ஏன் கிணறுகளை ஏன் மூடி வைக்கவில்லை என்றும் அவர் கோபமாக கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
சிறுமி கிணற்றில் விழுந்தது குறித்த செய்தி அறிந்து அறிந்து கோபமடைந்தேன். இந்த முட்டாள்கள் ஏன் கிணறுகளை மூடி வைக்கவில்லை?. மஹி உயிருடன் இருந்திருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தேன். அலட்சியமான செயல்பாடுகளால் 85 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் அந்தக் குழந்தை இறந்துள்ளது வேதனை தருகிறது.

சிறுமியை மீட்கப் போராடிய ராணுவத்தினரை வணங்குகிறேன். சுயநலமில்லாமல் அவர்கள் செயல்பட்டது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் சல்மான் கான்

கருத்துகள் இல்லை: