புதன், 27 ஜூன், 2012

4 போலீஸ்காரர் கைது கணவர் முன்பாக நிர்வாணப்படுத்தி பலாத்காரம்

காவல் நிலையத்தில் கணவர் கண் முன்னே பெண் பலாத்காரம் :
தலைமைறைவான 4 போலீஸ்காரர் கைது
திருட்டு வழக்கை விசாரிப்பதாக கூறி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த நந்தகோபால் என்ற கூலித் தொழிலாளியையும் அவரது மனைவியையும் 2.6.92 அன்று அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து சித்ரவதை செய்தனர்.
கணவர் கண் எதிரே மனைவியை நிர்வாணப்படுத்தி ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர். போலீஸ் தாக்கியதில் நந்தகோபால் இறந்தார். தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி. ஐ.டி எஸ்.பி லத்திகாசரண் தலைமையில் விசாரணை நடந்தது.
இதில் தொடர்புடைய சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்நிலையத்தை சேர்ந்த சப்& இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கடலூர் செசன்ஸ் நீதிமன்றம் மெகபூப்பாஷா, கருணாநிதி, பார்த்தசாரதி, ஜாபர்சாதிக் ஆகியோ ருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. அதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.


அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. ஏன் பாலியல் பலாத்கார வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? சென்னை உயர்நீதி மன்றமும் கவனிக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டு கடந்த 29.3.2011 அன்று பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
 இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க கடந்த 4.4.2011 அன்று கடலூர் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தண்டனை பெற்ற 4 போலீஸ்காரர்களையும் கடந்த 14 மாதங்களாகியும் சி.பி.சி. ஐ.டி. போலீசார் கைது செய்யவில்லை.
குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த இரு நாட்களாக அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி மெகபூபாஷா (72), கருணாநிதி (67), ஜாபர்சாதிக் (60), பார்த்தசாரதி (58) ஆகியோரை கைது செய்து செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: