பயணச்சீட்டு
இல்லாமல் பயணித்த வாலிபரை, ரயிலின் பயணச்சீட்டு பரிசோதகரும், போலீசாரும்,
ரயிலில் இருந்து தூக்கி வெளியே எறிந்ததால், வாலிபர் சம்பவ இடத்திலேயே பலத்த
காயங்களுடன் பலியானார்.
பீகார் மாநிலம், நாலந்தா
மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார். இவர் வெள்ளிக்கிழமை மாலை,
ராஞ்சியில் இருந்து பாடலிப்புத்திரா நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்
பயணித்தார். அவரிடம் பயணச்சீட்டு பரிசோதகர், பயணச்சீட்டை காண்பிக்குமாறு
கேட்டார். ஆனால், ராகேஷ் குமாரிடம் பயணச்சீட்டு இல்லை. இதையடுத்து,
பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. ஆத்திரமடைந்த
பரிசோதகரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் சேர்ந்து, அவரை, ஓடும்
ரயிலில் இருந்து தூக்கி வெளியே எறிந்தனர். கீழே விழுந்து பலத்த காயமடைந்த
ராகேஷ் குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, அவரின்
உறவினர்கள் பாத்துவா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து,
போலீசார் விசாரிக்கின்றனர். போலிஸ் அராஜகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக