வெள்ளி, 29 ஜூன், 2012

சிக்கினர் நண்பர்கள் : ஹசாரேயும், பாபா ராம்தேவும் மவுனம் சாதிப்பது ஏன்?


மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டட ஒப்பந்ததாரரான திலீப் சூர்ய வன்ஷினி மற்றும் சுரங்க ஒப்பந்ததாரரும், வி.என்.எஸ்., குழு இயக்குனருமான சுதீர் சர்மா ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இதுகுறித்து, அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் சிங் பத்திரிகையாளர்களிடம், ’’மத்திய பிரதேச மாநிலத்தில் எட்டு ஆண்டுகளாக நடந்த பா.ஜ., ஆட்சி யில் திலீப் சூர்ய வன்ஷினி மற்றும் சுதீர் சர்மா ஆகியோர் கோடீஸ்வரர்களாக மாறி விட்டனர். அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனை குறித்து, முதல்வர் சவுகான் ஏன் பதிலேதும் கூறாமல் இருந்து வருகிறார்.
அந்த இருவரும் பாபா ராம்தேவுடன் புகைப்படங்களில் காட்சி அளிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவும், ஹசாரேவும் உண்மையிலேயே போராடி வருகின்றனர் என்றால், ஏன் இவ்விருவர் குறித்தும் எதுவும் பேசாமல் உள்ளனர்.
அவர்கள் வீடுகளில் நடந்த சோதனை குறித்து, பாபா ராம்தேவ் பதில் சொல்லியாக வேண்டும். அவர் களது வீடுகளில் இருந்து வருமான வரித்துறையினர், அரசு பைல்கள் உட்பட பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து மாநில முதல்வர் சவுகான் மவுனம் காத்து வருவது ஏன்? இதிலிருந்தே முதல்வரது உண்மையான முகம் தெரிந்து விட்டது.
யார் ஆட்சியை நடத்தி வருகின்றனர் என்பது பொதுமக்களுக்கு புரிந்து விட்டது. சரியான நேரம் வரும்போது, முதல்வர் சவுகான் அனைத்திற்கும் பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: