வியாழன், 28 ஜூன், 2012

சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லை!

வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுக! சங்கரராமன் குடும்பத்தினர் மனு


காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசா ரணை புதுவை நீதி மன்றத்தில் நடந்தால் நீதி கிடைக்காது. அத னால் வழக்கை சென்னை உயர் நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலை யில் நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கின் விசாரணை முடி வடைந்த நிலையில் சங் கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் சாட்சிகளிடம் மறு விசாரணை கோரி நீதி மன்றத்தில் மனு தாக் கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெறுவதாக இருந் தது. குற்றம் சாட்டப் பட்ட 24 பேர்களில் ரகு, சுந்தரேச அய்யர் உள் பட 9 பேர் ஆஜர் ஆயி னர். ஆனால் ஜெயேந் திரர், விஜயேந்திரர் உள்பட 15 பேர் ஆஜர் ஆகவில்லை. சங்கர ராமனின் மனைவி பத் மாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் சங்கர ராமனின் மகன் ஆனந்த்சர்மா நீதிபதி முருகனிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், புதுவை நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தால் நீதி கிடைக் காது. எனவே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் மனு அளித்துள் ளோம். இதில் முடிவு தெரியும் வரை புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற் றுக் கொண்ட நீதிபதி முருகன் வழக்கு விசா ரணையை ஜூன் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

கருத்துகள் இல்லை: