புதன், 27 அக்டோபர், 2010

குறை காண ஏங்கும் எதிர்க்கட்சிகள்: ி கலைஞர் வருத்தம்

சென்னை :"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கிராமப்புறங்களில் பெற்று வரும் பெரும் வரவேற்பை கண்டு ஒரு சில நாளேடுகளும், ஒரு சில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறை காண முடியாதா என ஏங்கித் தவிக்கின்றன' என, முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:தற்போது கலைஞர் வீட்டு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளிலும், ஒரே நேரத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீடும் 207 சதுரடி பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. வீடு கட்டத் தேவைப்படும் சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகளை, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் அரசே வழங்குகிறது.வெளிச்சந்தை விலையை விடக் குறைவாக, ஒரு மூட்டை சிமென்ட் 210 ரூபாய் வீதம் 60 மூட்டை சிமென்ட் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு தேவைப்படும் 155 கிலோ கம்பி, சராசரியாக கிலோ 36 ரூபாய் என்ற விலையில், கலெக்டர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக, வெளிச்சந்தையில் இவற்றின் விலை உயர்ந்தாலும், பயனாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.கலெக்டர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம் பேசி, வெளிச்சந்தை விலையை விட குறைவான விலைக்கு செங்கல் கிடைக்க செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.வரும் ஜனவரி மாதத்துக்குள் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, ஏழை எளியோர் நிரந்தரமான கான்கிரீட் வீடுகளுக்கு உரிமையாளர்கள் என்ற சமுதாய அந்தஸ்தை பெற்று, பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்வர்.கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கிராமப்புறங்களில் பெற்றுவரும் பெரும் வரவேற்பைக் கண்டு ஒரு சில நாளேடுகளும், ஒரு சில எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தில் ஏதாவது குறை காண முடியாதா என ஏங்கித் தவிக்கின்றன.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-27 10:51:33 IST
எது எப்படியோ, செங்கலின் விலையை 9 ரூபாய்க்கு உயர்த்திய முக வாழ்க..........................
Raji - Mannargudi,இந்தியா
2010-10-27 10:48:43 IST
அய்யா கலைஞர் அவர்களே, அவங்க உங்களை குறை சொல்லவில்லை உங்க வீடு பாதியிலேயே நின்னுட கூடாது என்கிற நல்லெண்ணம். உங்க வீடு வழங்கும் திட்டம் மக்களை வீடு இழக்க செய்யும் திட்டம்....
மதுரை காரன் - மதுரை,இந்தியா
2010-10-27 10:41:40 IST
கைப்புள்ள நீ கலக்கு சாமி !!!!...
ஷெல்டன் - அபுதாபி,இந்தியா
2010-10-27 10:34:32 IST
நம் நாட்டை முன்னேற்ற வேண்டும்மா அனைவரும் வோட்டு போடுவதை புறக்கணிப்போம். முடிந்தால் அப்படியாவது நாட்டை காபாற்றுவோம். எப்படியும் நம் நாட்டுக்கு விமோச்சனம் என்பது கிடையாது. இளைஞர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். நம் நாட்டின் எதிர்காலம் உங்களிடமே உள்ளது....
A.Pandi - Singapore,சிங்கப்பூர்
2010-10-27 10:27:22 IST
அய்யா பெருசு நெஞ்சு வலிக்கிறது, உங்கள் உண்மையான சுயரூபத்தை நினைத்து நினைத்து நான் மனசுக்குள்ளே அழுகிறேன். உங்களைவிட்டால் இந்த பாவப்பட்ட தமிழகத்தை யார் அழிக்க முடியம். உங்கள் அரசு கொடுக்கும் பணத்தில் பேசாமல் ஊருக்கு ஊர் கக்கூசு கட்டி கொடுங்கள். நாங்கள் கலைஞர் கக்கூசு! கலைஞர் கக்கூசு! என்று உங்கள் ஒவ்வொரு தடவையும் உங்களை நினைப்போம். வாழ்க கலைஞர் கக்கூசு....
க ச கார்த்திகேயன் - singapore,இந்தியா
2010-10-27 10:13:27 IST
திருக்குவளை தீய சக்தி குடும்பத்துல யாராவது சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் இரும்பு கம்பி தொழிற்சாலை வச்சி இருப்பாங்க போல. அவங்க தொழில் நல்லா இருக்கணும்ல. அதான் வீடு கட்டும் திட்டம். மக்கள் நலன் கருதி செய்யும் திட்டம் அல்ல இது....
வண்டுமுருகன் - மதுரை,இந்தியா
2010-10-27 09:58:58 IST
என்ன செய்தாலும் நொட்டை கண்டுபிடிப்பது தான் நம் கண்மணிகளின் உத்தி. எனவே இந்த வீணா போன, பாலா போன ஓட்டை உடைசலை மட்டும் காணும் நெடு நோக்கு பார்வை இல்லாத தி மு க வை எதிர்க்கும் எண்ணம் மட்டுமே உள்ள செல்ல கண்மணிகளை சிறு குழந்தைகளை பற்றி கவலை படாமல் உம பணியை தொடரும். எது செய்தாலும் இது நீர் அல்ல இனொரு கட்சி செய்தது என்பார்கள்...குடும்ப தாக்குதலை அரசியலில் குறைத்து கொண்டால் நம் ஆட்சிக்கு நல்லது.சினிமா மோகதிற்கான நேரத்தை குறைத்து அதற்கான சலுகைகள் இதில் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் இருப்பது நல்லது...மற்ற படி நீங்கள் கொடுக்கும் இலவசம் நம் தமிழ் நாடு மக்கள் வரி பணத்தில் இருந்து செலவிடபடுவதால் அதை சரியான முறையில் ஆள் கட்சி பேதமில்லாமல் தகுதியான நபரிடம் சென்று சேர மட்டும் வேண்டும் இந்த விஷயங்கள் தவிர நீர் மற்ற ஏனய தமிழ் தலைவர்களை விட மிக மிக மேல் .எனவே இதை கருத்தில் கொண்டு இது போன்ற சிறுபிள்ளைதனமாக தங்களை மஞ்சள் துண்டார் மற்றும் மைனாரிட்டி என்று புறமும் கேலி பேசி தி மு க விற்கு எதிராக மட்டுமே நினைக்கும் பிள்ளைகளின் வாய் ஐ பொத்துங்கள்..இவர்களிடம் எல்லாம் நமக்கு தேவையா?தகுதி வேண்டாமா நாம் யாரிடமெல்லாம் அநாகரீகமாக பேச்சு வாங்குவது என்று.....உங்களை பஜனை பாட விட்டால் தூக்கம் வரத்து இந்த சிறு பிள்ளைகளுக்கு.ஆனால் நீங்கள் எதற்கும் கலங்காமல் சிறப்பாக இன்னும் பட்டய கிளப்பவும்....2011 டு 2016 உமதே .........
siva - Guangzhou,சீனா
2010-10-27 09:44:51 IST
இவரோட அறிக்கையை படிக்கும் போது ரத்தம் கொதிக்குது ................தமிழ்நாட்டுல இருக்குற காங்கிரஸ் காரனுங்க எல்லாம் அரசியல விட்டுட்டு தங்கபாலு தலைமையில மாட்டு பண்ணை வச்சு ............"கலைஞ்சர் மசாலா பால்" வியாபாரம் பண்ணலாம் ...................
siva - Guangzhou,சீனா
2010-10-27 09:38:08 IST
நம்ம முதல்வர் அடிக்குற ஜோக்க பாக்கும்போது ........சமீபத்துல திரைக்கு வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட காமெடி தான் நினைவுக்கு வருது ..........சந்தானம் சொல்வாறு, ஊர்ல பத்து பதினஞ்சி பிரண்ட்ஸ் வசிருக்குரவனல்லாம் சந்தோசமா இருக்குறான், ஆனா ஒரே ஒரு பிரெண்ட வச்சிக்கிட்டு நான் படர அவஸ்தை ஐயையை யையோ .............அப்படின்னு ...........ஒரே ஒரு மு க வ வச்சிக்கிட்டு தமிழக மக்கள் படுற அவஸ்தை சந்தானம் படர அவஸ்தையை விட பல மடங்கு ...................
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-10-27 09:37:26 IST
இவரிடம் இருக்கும் நிறை: தம் மக்களுக்கு மிக சிறந்த அப்பாவாக இருப்பது. அதுவே இவரிடம் இருக்கும் மிக மோசமான குறையுமாகும்....
வேல் - பிட்சைகரநூர்,இந்தியா
2010-10-27 09:30:21 IST
வரும் பொங்கல் அன்று அதாவது மு க வீடு கட்டும் திட்டத்தில் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். ஆக வரும் பொங்கல் அன்று தமிழ்நாட்டு மக்கள் தொகையில் ஒரு குடுபத்திற்கு 3 பேர் விகிதம் 9 லட்சம் மக்கள் தொகை குறையும் என்பதை திமுக கட்சி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்....
நாராயணன் - சென்னை,இந்தியா
2010-10-27 08:14:32 IST
ஆமா தி.மு.க தான் நாத்திகவாதி கட்சி ஆயிற்றே .அப்புறம் சத்தியம் எல்லாம் சுண்டக்கா மாதிரி நாத்திகம் தொலைக்காட்சி சேனலில் மட்டும் தானோ சரஸ்வதி பூஜா-விடுமுறை தினத்தை முன்னிட்டு? திருந்தாத மக்கள் இருந்தென்ன? இப்படி தான் ஆட்சி நடக்கும்....
neutral and straightforward - chennai,இந்தியா
2010-10-27 08:08:42 IST
this fellow is the most selfish politician in the whole of the world.People have already decided to throw him out in the next elections....
சிவா - பெங்களூர்,இந்தியா
2010-10-27 08:01:46 IST
எல்லாமே குறை...எங்களால் எந்த குறையை சொல்ல... நீங்க தான் பெரிய குறை .....
நாதன் - Singapore,இந்தியா
2010-10-27 07:50:44 IST
இலவச வீடு கட்டிக்கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, அதனை இவ்வளவு அவசர கதியாய் கட்டுவதுதான் பிரச்சினை. இது போல பின் விளைவுகளை அறியாமல் எடுத்த முடிவுகளால்தான் விலைவாசி விண்ணை முட்டி நிற்கின்றது. உ.தா. ஒரு ரூபாய் அரிசி திட்டம். ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குவதன் பின்விளைவுகள்தான் பருப்பு மற்றும் எண்ணெய் விலைகள் விண்ணை முட்டி நிற்கின்றன. அமெரிக்காவில் ஒருசில நிறுவனங்கள் திவாலானதின் விளைவு உலகில் வுள்ள சாமானியனின் வாங்கும் சக்தியை கூட பாதித்ததை நாம் யாரும் மறந்திருக்க முடியாது! அது போல இந்த அவசர திட்டத்தின் பின் விளைவுகள் கொத்தனார் கூலி ரூபாய் 500 தொட்டுவிட்டது. வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை ரூபாய் 300. கொஞ்சம் கூட முதல்வர் பொறுப்புணர்ந்து பேசுவதாக தெரியவில்லை. அரசு மட்டும் நிச்சயித்த விலையில் கொள்முதல் செய்து கொள்கிறது, அதுவும் மிரட்டி!. ஆனால் தான் சம்பாதித்த சொந்த காசில் வீடு கட்டிகொண்டிருபவர்களை பற்றி இந்த அரசு கவலை பட்டதாக தெரியவில்லை! அவர்களும் இந்த நாட்டின் குடிமகன்கள்தான் என்பதை மறந்து விட்டர் போலும்! அரசு முதலில் கட்டுமான பொருட்கள் தாராளமாய் நியாய விலையில் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்திருக்க வேண்டும்! குறைந்த பட்சம் இந்த திட்டத்திற்காக ஆகும் பொருட்களை இறக்குமதி செய்து இருக்க வேண்டும்! ஒருவேளை அப்படி செய்திருந்தால் இங்கு உள்ள கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்தி இருக்கலாம் என்பது எனது கருத்து! இந்த அரசுக்கு ஆளுமை திறன் அறவே இல்லை! தனது ராஜதந்திரத்தை லாவகமாக பேசுவதற்கும்! எதிர் கட்சிகளை கையாள்வதற்கு மட்டுமே பயன்படுதிக்கொண்டிருக்கும் இது போல கையாலகாத அரசு ஒன்று மட்டும் உருப்படியாய் செய்யலாம்! அது என்னவெனில் எல்லா இலவச திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்துவிட்டு இந்த அரசு நிம்மதியாக உறங்கலாம்! இந்த நாடு தானாகவே முன்னேறி விடும்! வேறு எந்த ஆணியும் புடுங்க வேண்டியதில்லை என்பது என் கருத்து! இது எதுவும் நடக்காது என்கிற பட்சத்தில் ஒன்று மட்டும் சொல்ல தோ ன்றுகிறது! இந்த நாடும்! நாட்டு மக்களும்! நாசமாய் போகட்டும் என்று!...
சுதாகர் - திருப்பூர்,இந்தியா
2010-10-27 03:53:03 IST
வணக்கம் தினமலர் வாசகர்களே!!! ஏன் தான் தினமலர் இப்படி தினமும் கலைஞரிடம் குறை கண்டு குறையை மட்டுமே கூறுகிறிர்கள்? பின்னே நிறை இருந்தால் தானே கூற முடியும். ஒவ்வொரு பயனாளியும் ஒரு வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அதிகமாக அதாவது இவர் கூறும் 75000 க்கும் அதிகமாக கொடுத்தல் தான் முடிக்க முடியும் என்கின்றனர். இப்போதே ஒரு செங்கல் மூன்று ரூபாய் ஐம்பது காசிலிருந்து எட்டு ரூபாய் ஐம்பது காசுக்கு விற்கபடுகிறது. அது என்ன தலைவா கலைஞர் வீடு வழங்கும் திட்டம் இது என்ன நீங்கள் திருட்டு ரயில் ஏறி வந்ததிலிருந்து இன்று வரை உண்ணாமல் உறங்காமல் உழைத்து அதாவது ச்பெக்ட்ரும் வரை ௦சம்பாதித்த பணத்திலிருந்தா கொடுக்கிறீர்? என்னை போன்ற இளைஞர்கள் உறங்காமல் உழைத்து கட்டும் வரியில் இருந்தல்லவா செய்கிறிர்கள் பின் எதற்கு உங்கள் பெயர் கலைஞர் ( அட கருணாநிதி என்றாலும் பரவாஇல்லை) என்று? இந்த மாதிரி மானம் கெட்ட ஈனம் கெட்ட மாக்கள் (மக்கள் என்று கூற முடியவில்லை மக்களே) இருக்கும் வரை இவருக்கெல்லாம் (மரியாதை இவருடைய வயதிற்கு மட்டுமே செயலிற்கு அல்ல) கொண்டாட்டம் தான். நாமுடைய நாகரிக கோமாளி தாசின் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கும் இன்னுமோர் நண்பன்!!!...
ரங்கராஜன் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-10-27 03:14:48 IST
அதுதான் ஒபாமாவே இதைபற்றி இந்தியாவில் உள்ள அமெரிக்காதிகரியிடம் கேட்டு ,அவர் நம்ம ஜகத்ரட்சகனாரிடம் கேட்டு ,இப்படி அமெரிக்காவே வியக்கும் திட்டமாக இருக்கும் போது ,சுண்டைக்காய்பத்திரிக்கை களும் ஒன்றுமில்லாத எதிர்க்கட்சிகளும் கூறுவது குறித்து ஏன் கவலைப்பட வேண்டும் ?குடிசைகான்கிரீட் வீடு ஆகும் போது ,கான்கிரீட் வீடுகளுக்கு மாடி வீடு மேலே கட்டி தருவதன் மூலம் ஆஸ்திரேலிய நாட்டு பிரதமரும் கேட்பார் ;அமெரிக்காவில் குடிசை வீடுகள் அதிகம் என்று யார் இவர்களுக்கு கூறினார்கள் ?...
குமார் - chennai,இந்தியா
2010-10-27 02:47:56 IST
ஒன் of தி useles scheme...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-27 02:40:30 IST
அய்யாஆஆஆ.... அப்புறம் இதைய மறந்துட்டீங்களே, ஒபாமா... ஒபாமா... ம்ம்ச்... உள்ள கிரைண்டர் ஓடிக்கிட்டு இருக்கு. சத்தத்துல கேக்கல போல இருக்கு. இருங்கயா.... வரேன். ம்ம்ம் ஆப் பண்ணிட்டேன். ஒபாமா அய்யா, ஒபாமா. அமெரிக்க சனாதிபதி... அவருகூட மூக்குமேல வெரல வெச்சு எப்புடிடா இதெல்லாம் உங்கூர்ல பண்ணுறீங்கன்னு கேட்டாராமில்ல. அவருகூட எனக்கும் ரெண்டு ஊடு சேந்து கட்டி வைங்க. நான் எல்லாத்தியும் விட்டுட்டு உங்கூருக்கு வந்துடுறேன்னு சொன்னாரமில்ல. அதையும் சேத்தி சொல்லுங்க. இன்னும் கொஞ்சம் பெருமையா இருக்கும். ம்ம்... ம்ம்... சொல்லுங்க சொல்லுங்க.... நான் உள்ள போறேன். ஓ! ஆமா! ஒபாமா அவர்களே வியந்து பாராட்டிய இந்த திட்டத்தில் ஓட்டை கண்டுபிடிக்க எதிர்கட்சிகள் சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்காது. நிருபரே இதையும் சேத்து போட்டுகோங்க. தேங்க்ஸ் டா கைப்புள்ள, எடுத்து கொடுத்ததுக்கு. சரிங்கய்யா, பரவால்ல, ஏதோ நம்மனால முடிஞ்சுது. நீங்க அடிச்சு விடுங்க....
GB.ரிஸ்வான் - JEDDAH,சவுதி அரேபியா
2010-10-27 02:30:36 IST
மஞ்சள்துண்டார் பொய் சொல்கிறார்.. கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்பது இல்லவே இல்லை..மத்திய அரசின் திட்டமான இந்திர குடியிருப்பு திட்டத்தை,பெயர் மாற்றி கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என பெயர் சூட்டி,அதற்க்கு ஒரு பாராட்டு விழ நடத்தி திமுக மைனாரிட்டி அரசு பெருமை தேடிகொள்கிறது, ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ::: இந்திர நினைவு குடியிருப்பு திட்டம்:; என்னாயிற்று என கேட்டால் இது தான் என்பார்கள். அப்போ கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்பது என்ன என கேட்டால் அதுவும் இது தான் என்பார்கள்..கவுண்டமணி,செந்தில் வாழைபழ கதை தான் இந்த திட்டம்,ஆகா ஒரு பழமொழி இருக்கு அடுத்தவன் வீட்டு நெய்யே..என்.......என, முக என்னதான் மத்திய அரசில் கூட்டணி வைத்து இருந்தாலும் அவர்கள் தயவில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும்,இவரை தட்டி கேட்க்க..எந்த காங்கிரெஸ் கோஷ்டிக்கும்,வக்கு இல்லை..மொத்த தமிழகத்தை தன் குடும்ப நலத்திற்காக டெல்லியில் அடகு வைத்தவர் கருணாநிதி..தமிழக காங்கிரஸ்காரகள் தன் சுயமரியாதையை முக விடம் அடகு வைத்து விட்டார்கள்.. முகவின் சாதனைகள் என்பது மதுக்கடைகள் லஞ்சம்,ஊழல் வெட்டு,குத்து,வன்முறைகள்,மிரட்டல்கள் தான்,மற்றும் மானாட மயிலாட தான் என சொல்லாலம்.....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-27 01:45:19 IST
அய்யா புள்ளி விவர ராசா.. இந்த வீடு கட்டும் திட்டம் கூட உமது கட்சிக்காரங்களுக்குத்தான் என்பதை நாடு அறியும். ஏதோ தவறுதலாய் ஒன்றிரண்டு பொது சனம் தங்களது இருக்கும் குடிசை வீட்டையும் கொடுத்துவிட்டு இன்றைக்கு நீங்கள் சொன்ன விலையில் கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் புலம்புவது உமக்கு கேட்கவா போகின்றது? அதிலும் உமது கட்சியினர் "காசு" பார்க்காமல் போவார்களா? ஜனவரியில் இனி குடிசைகளே பார்க்கவே முடியாதோ?பார்ப்போமே!! ஏனென்றால் உமது "இலவச" இரண்டு ஏக்கர் நிலம் பெற்றோர் எல்லோரும் அந்த நிலத்திலே "விவசாயம்" செய்து மாதம்தோறும் அறுவடை செய்வதாய் நித்தமும் செய்திகள் தெரிவிக்கின்றனவே..அதனால்தான் சொல்கின்றேன் "சொல்லியதையும் செய்யாத நீர்.. சொல்லாததையும் செய்வதாய் சொல்லித்திரியும் உனது அல்லக்கைகள் வேண்டுமானால் உமது அறிக்கையை ஒரு பொருட்டாய் பேசி திரியலாம்..!! பொதுமக்களுக்கு உமது கட்சியினர் மீது உள்ள "மரியாதையை" கேட்டு பாருமே..ரேசன் அரிசி முதல், மணல் கடத்தல் வரை எல்லாவற்றிலும் ஊழல் ஊழலோ ஊழல் என்று நாரி "நாற்றமெடுக்கின்றது" அதே போன்றுதான் இந்த கான்கிரிட் வீட்டு ஊழலும் உமது கட்சியினர் சம்பாதிக்க இன்னுமோர் வழியை காண்பித்து விட்டீர்..அடியுங்கள் கொள்ளையை..நிறுத்தவே மாட்டீர்கள்..ஏனென்றால் இதுவே உனக்கும் உனது கட்சிக்கும் "இறுதி" யாய் சம்பாதிக்கும் சந்தர்பம் என்பது தெரிகின்றது. சிமென்ட் ஊழல்..கம்பி ஊழல் என்று இனி "பூதங்கள்" கிளம்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை வருங்கால நிகழ்வுகள் காட்டத்தான் போகின்றன..!! ஏன் என்றால் கடந்த கால உமது "திருப்பணி" பற்றி நாடே அறியும் !! அதனால்தான் சொல்கின்றேன் இந்த கான்கிரிட் வீடு கட்டும் திட்டத்திலும் "மாபெரும்" ஊழல் வெளிவரும்..சீக்கிரமாய்.!!!...
நேசமணி ராஜ் - வியன்னா,ஆஸ்திரியா
2010-10-27 01:26:46 IST
கல்லக்குடி கொண்டவரே! கள்ளைக் குடி என்று சொன்னவரே! கலக்கம் கொள்ளலாகுமா?...
M இந்தியன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-27 00:58:36 IST
தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஆறு கோடி. அதில் உங்க குடும்பத்தினர் வெறும் நூறு என்பது "குறை"தான். மொத்த மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை தோராயமாக நாற்பது இருக்கும் அதில் உங்க வாரிசுகளுக்கு வெறும் இரண்டு என்பது "குறை"தான். இந்திய எம்பி சீட்டுகளின் எண்ணிக்கை 543 அதில் உங்க வாரிசுகள் மூன்று என்பது "குறை"தான். தமிழ் நாட்டின் மொத்த சட்டமன்ற தொகுதி 234 அதில் உங்க குடுபதுக்கு வெறும் இரண்டு என்பது "குறை"தான். இந்த வீட்டு திட்டத்தில் வந்த ஊழல் பணத்தில் உங்க வாரிசுகளுக்கு சரியாக பிரித்து கொடுத்தும் அவங்க மனது நிறைவு பெறாதது "குறை"தான். உங்க ஊழல் பணத்தை மறைத்து வைக்க உலகத்தில் ஓரே ஒரு சுவீஸ் பேங்க் மட்டுமே உள்ளது "குறை"தான். இந்த வீடு திட்டத்தை நம்பி வீடு கட்ட நினைத்து இறங்கி இன்று அனைத்து கட்டுமான பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதை நினைத்து விழி பிதிங்கி நிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதது "குறை"தான். பாதி வீடு கட்டியவுடன் நீங்கள் கொடுத்த அரசு காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது "குறை"தான். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் குறைவு அதுவும் "குறை"தான். கங்கை, பிரமபுத்திரா, காவேரி. கோதாவரி, கிருஷ்ணா, சிந்து... நதிகள் தமிழ் நாட்டில் ஓடாததன் காரணமாக உங்களால் மணல் திருடாமல் போனதே அது "குறை"தான். ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை போல பல இலவச திட்டங்கள் ஒரு ரூபாயில் இல்லாமல் போனது "குறை"தான். மக்கள் படித்ததும் "குறை"தான். அவர்கள் உங்களை கேள்விகேட்பதும் "குறை"தான். உங்கள் குடும்ப தொல்லை தாங்க முடியாமல் வெளி நாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை நீங்கள் எதிர்பார்த்த அதிக அளவில் இல்லாதது "குறை"தான். காங்கிரசில் தங்கபாலு போன்ற ஆட்கள் அதிகம் இல்லாதது "குறை"தான். இலங்கை ஈழம் போல் தமிழர்கள் வாழும் அதிக ஈழம் இல்லாதது "குறை"தான். குறை...குறை...குறை..... இப்படி அனைத்திலும் உங்களுக்கு "குறை" இருக்கும் போது அதை மக்களிடம் எடுத்து சொல்லும் எதிர் கட்சிகள், பத்திரிகைகளின் எண்ணிக்கையும் குறைவு என்பதுதான் எங்களின் ஓரே ஒரு "குறை"....
கலைஞர் பிரியன் - டென்வர்,யூ.எஸ்.ஏ
2010-10-27 00:50:49 IST
இன்றைக்கு எந்த கோமாளித்தனமான அறிக்கையும் வெளியிடாத தமிழ் 'குடி'தாங்கியையும், அவரை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாத தினமலரையும் வெறி அன்புமணி ரசிகர் மன்ற சார்பாக நான் வன்மையாக கண்டிக்குறேன்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-27 00:45:45 IST
அய்யா... அய்யா... நான் வெச்ச பாவக்கா கூட்டு நல்லா இருந்திச்சா? சரிய்ய், அப்புறம் கான்கிரீட் வீடுங்கலாய்யா... நிரந்தரமான கான்கிரீட் வீடா? எப்புடிய்ய்ய்? நாம இந்த கோயம்புத்தூர் அம்மன் குளத்துல நைட் கட்டி காத்தால பொதஞ்சுதே, அது மாறியா? இல்ல அரசியல்ல நிரந்தர பகைவனும் இல்ல எதிரியும் இல்லன்னு ஒரு டைலாக் விடுவீங்களே அதுமாறியா? உம்... இல்ல இல்ல தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டேன். அப்புறங்கய்யா, மறக்காம அந்த சிமென்ட் மூட்டை சாக்குபை, இரும்பு கம்பி, செங்கல்லு, மண்ணு, மணலு, சட்டி, கடப்பாரை, அட இவளவு ஏன், அங்க மண் அள்ளி போடுறாளே சித்தாளு பட்டுகுஞ்சு அவ கொண்டைல கூட உங்க படத்த அச்சடிச்சு போட்டுடனும்யா. ஏன்னா, நாம நம்ம பெரிய அய்யா சம்பாரிச்சு வெச்சத தான எடுத்து இலவசமா நாட்டாமை மாறி கொடுக்கிறோம். அப்புறம் நம்ம பேர வெச்சு, நம்ம படத்த போடாம விட்டா எப்புடி? இல்ல இல்ல இந்தா போறேன் உள்ள. அதுக்கு முன்னாடி இதையும் சொல்லிட்டே போய்டுறேன். அய்யாஆஆ உங்களால ஏழைக்கு ஊடு கிடைக்குதோ இல்லியோ, ஒரு ஐ.எ.எஸ் படிச்ச கலெக்டரவே ஒரு சித்தாளு ரேஞ்சுக்கு ஊரு பூரா மணலு, செங்கல்லு, சல்லி கல்லு தேட வெச்ச பெருமை உங்களுக்குத்தான்யா. அவலவுதான்யா, நீங்க இந்த பால குடிச்சுட்டீங்களா, கிளாஸ கொடுங்க, நான் உள்ள போயி சின்ன அய்யாவுக்கு காராம்பாலு காச்சி கொண்டு போய் கொடுத்திட்டு வரேன். ஹய்யோ ஹய்யோ... நான் சொல்றதுக்கெல்லாம் அய்யாவுக்கு அப்புடியே விக்குது.... எங்கய்யா மாறி தற்பெருமை பேசுறதுக்கு யாருக்கு தில் இருக்கு... ஹ்ம்ம்ப்... கைப்புள்ள சமயகட்டுக்கு போய்ட்டான்....
ஜீவா - திருநெல்வேலி,இந்தியா
2010-10-27 00:29:21 IST

கருத்துகள் இல்லை: