வியாழன், 28 அக்டோபர், 2010

இயக்கங்கள் இல்லாமல் போவதே தமிழ்மக்களுக்கு மிகப்பெரிய சேவையாக இருக்கிற காலம் தம்பி

teavadai புளொட் இயக்கத்தின் சர்வதேச மாநாடு குறித்து புளொட் தோழருக்கு ஒரு பகிரங்க கடிதம்
அப்பு ராசா புளொட் தம்பி ஏனப்பு திடீரென்று மாநாடு நடாத்த வெளிக்கிட்டியள். ஏனிந்த விபரீத முடிவு எடுத்தியள். இப்போ என்ன அவசரம் தம்பி இயக்கத்திற்கு மாநாடு நடாத்த வேண்டி வந்துள்ளது. குளிர்காலம் வேற தொடங்கிட்டுது. இயக்கங்கள் இல்லாமல் போவதே தமிழ்மக்களுக்கு மிகப்பெரிய சேவையாக இருக்கிற காலம் தம்பி இப்ப.  30வருடமாக ஆட்சி செய்த புலி இயக்கத்தையே மக்கள் மெல்ல மெல்ல மறந்து போக வெளிக்கிட்டுதுகள். வெளிநாடுகளில்தான் புலியின் எச்ச சொச்சங்கள் இன்னும் அலம்பியபடி திரியுதுகள். வேறு ஒரு அரசியலுக்க தமிழர்கள் போகவேணும் தம்பி. இனியும் இயக்கம் மாநாடு என ரைமை வேஸ்ற் பண்ண வேணுமா தம்பி யோசிச்சுப்பார்க்க வேணாமா?
தன்னுடைய குடம்ப சொத்துக்களையெல்லாம் இயக்கத்திற்கு செலவழிச்சு ஒட்டாண்டியாக தலைவர் சித்தாத்தர் நிற்கிறார். இந்த நிலமைக்கு தலைவரைக் கொண்டு வந்த பின்னர் சர்வதேச மாநாட்டில் என்னத்தை வெட்டிக் கிழிக்க முடிவு செய்திருக்கிறியள். வெறும் செலவும் வெட்டி விவாதம் இது இரண்டையும் செய்யிறதை விட்டிட்டு உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்.
புலம்பெயர் தமிழ்மக்களுக்க செய்யிற அரசியல் வீண்வேலை என்றுதான் நான் சொல்லுவன். தமிழ்மக்களின் இன்றைய சீரழிவுகளுக்கு இந்த புலம்பெயர்தமிழர்கள்தான் முக்கிய காரணம். இன்றைக்கு நாட்டில் உள்ள மக்களுக்கதான் தம்பி அரசியல் வேலை செய்ய வேணும். போதிக்கிறது மட்டும் அரசியல் இல்லை தம்பி. செயற்பாடுகள் மிக முக்கியம். அதுக்கு நிறைய துட்டு வேணும். ஈ.பி.டி.பி தலைவர் இதை நல்லா தெரிஞ்சு வைச்சதினால்தான் அவர் அரசியல்ல நிற்கிறார். அவங்கள் மாநாடு நடாத்தவேண்டிய அவசியம் கிடையாது. காற்றுள்ளன போதே தூற்ற தெரிகிற தந்திரம் அவரிட்ட இருக்கு. ஆனா தலைவர் சித்தாத்தரிடம் அதில்ல தம்பி. பாவம் அந்த மனிசன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அல்லல்படுகிறார்.
சர்வதேச மாநாட்டில் என்ன கதைக்கப்போறியள். திட்டங்கள் போடலாம். ஆனா நிறைவேற்ற பொருளாதாரம் தேவை. புளொட்டிடம் அது இல்லாததால் நிறையப்பேர் அப்பவே புலிகளிடம் போய்ச் சேர்ந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்பிடம் இல்லாதாhல் அதிலிருந்து ஈ.பி.டிபியிடம் போய்ச்சேர்ந்தார்கள். உங்களிடம் என்ன இருக்கு தம்பி. யோசிக்க வேணாமா?
அரசியல் மாறவேண்டும் தம்பி. இன்னும் அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிய வேண்டும் என சுட்டியல் எடுத்து உருண்டையை உடைக்கிறது பார்க்கிறதுக்கு நல்லா இருக்கலாம் ஆனால் செயற்பாட்டிற்கு….?  யோசித்துப்பார்க்க வேணும் தம்பி.
சும்மா மேசையிலிருந்து ஆளையாள் கதைச்சுப்போட்டு மாநாடு முடிந்தபின் பழைய அலுவல்களை பார்க்கப்போயிருவியள். உங்களுக்கென ஒரிரு இணையத்தளங்களும் மாநாட்டைச் செய்தியாகப் போடுவினம். ஆனா மக்களுக்கு இதால என்ன பிரயோசனம் தம்பி.  ஒரு இணையத்தளத்தில் பார்த்தன். மாநாட்டுக்கு ஆட்கள் வந்தவண்ணம் இருக்கினம் என்று கிடந்தது. பார்த்து சிரிப்புத்தான் வந்தது. இன்னும் நீங்கள் 85ல் இருந்தமாதிரியே இருக்கிறியள். சின்ன சின்ன விஷயங்களில் கவனம் வேண்டாமா
ஏதொ சில விடயங்களை சொல்ல வேணும் என்றிருந்தபடியால் எழுதி விட்டன். சரி மாநாடுதான் நடாத்துகிறீர்கள் சில ஆக்கப+ர்வமான யோசனைகள் உங்கட கவனத்திற்காக சொல்லுறன்.
முதலில் நாட்டில் உங்களுடைய போராளிகள் குடம்ப வாழ்க்கைக்கு திரும்பி நீண்டகாலமாகி விட்டது. அவர்களைப்பற்றி தரவுகள் சேகரியுங்கள். அவர்களுக்கான சுயமாக தொழில்வாய்ப்புகள் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.   விவசாயம், கைத்தொழில், தையல், போக்குவரத்து என பல விடயங்கள் இருக்கிறது. சாத்தியமான விடயங்களை யோசியுங்கள். 50 ரூபா விடயத்திற்கு 500 ரூபா செலவழிக்க வேண்டாம். மக்கள் மத்தியில் செய்ய வேண்டிய விடயங்கள் பல இருக்கிறது. அவற்றைப்பற்றி விவாதியுங்கள். அலம்புவதை குறைத்து விட்டு செய்வதைபற்றி யோசியுங்கள். சர்வதேச பொறுப்பாளர் வானொலியில் அதிகமாகவே அலம்புகிறார். அதைக்குறைத்து ஆக்கப+ர்வமாக யோசித்து செயற்படுவது தமிழ்மக்களுக்கு நல்லது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை.  பணம் இல்லாத திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது.  40பேரைக் கூட்டிவைச்சு போதனைகள் செய்வது தற்காலத்திற்கு பொருத்தமானதல்ல. சின்ன சின்ன திட்டங்களை மக்கள் மத்தியில் செயற்படுத்தி செய்யிற அரசியல்தான் எடுபடும்.
இதை விட்டிட்டு மாநாடு கூட்டங்கள் என அடிக்கடி நடாத்துவது வளர்ந்த கட்சிகளுக்கு சரிப்பட்டு வரலாம் ஆனால் 85லிருந்து இன்னும் அப்படியே பழைய ஆட்களை வைத்துக்கொண்டு இப்படி அரசியல் செய்தீர்கள் என்றால் காணாமல் போய்விடுவீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருந்து யோசித்துப்பார் தம்பி உண்மைகள் புரியும்

கருத்துகள் இல்லை: