வெள்ளி, 29 அக்டோபர், 2010

வடக்கு மாகாண சபையின் அலுவலகங்கள் யாழில்! – இடங்களை தெரிவு செய்ய விசேடகுழு

வடக்கு மாகாண சபையின் அலுவலகங்களை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கு ஆளுநரின் செயலாளர் தலைமையில் விஷேட குழு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.
இக்குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரின் செயலகம், பிரதம செயலாளரின் செயலகம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் ஆகியவற்றை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்யவுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாண சபையின் ஆளுநர் செயலகம்,  பிரதம செயலாளர் செயலகம், அமைச்சுகளின் அலுவலகம், திணைக்களங்கள் என்பன தற்போது  திருகோணமலை  வரோதயா  நகரிலுள்ள கட்டிடத் தொகுதியில் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு அலுவலகங்களும் அதற்குட்பட்ட திணைக்களங்களின் அலுவலகங்களும் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, அதற்குட்பட்ட திணைக்களங்களின் அலுவலகங்கள் மருதனார்மடத்திலுள்ள வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தின் மேல் தளங்களில் அமைக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி, சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் சிறுவர் நன்நடத்தை அமைச்சு, அதற்குட்பட்ட திணைக்களங்களின் அலுவலகங்கள் கைதடியிலும் அமைக்கப்படுகின்றது.   இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலகம், பிரதம செயலாளரின் செயலகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு அலுவலகம் என்பன யாழ்ப்பாணத் தில் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான இடங்களைத் தெரிவு செய் வதற்கு வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் தலைமையில் விஷேட குழுவினர் யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: