வியாழன், 28 அக்டோபர், 2010

25 கிலோ கஞ்சா கலந்த பாபுல் ஆட்டுப்பட்டித் தெருவில் கண்டுபிடிப்பு

25 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கலந்த பாபுல் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் கஞ்சா கலந்த புகையிலை என்பன கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸ்   ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறினார். இது அண்மைக் காலத்தில் பிடிபட்ட அதிகூடுதலான பாபுல் தொகையாகும்.
ஆட்டுப்பட்டித் தெருவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போது கஞ்சா கலந்த பாபுல் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி ஆட்டிப்பட்டித் தெருவில் உள்ள இரு களஞ்சியங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த பாபுல்,    பாபுல் தயாரிப்பதற்காக  இந்தியாவில்      இருந்து தருவிக் கப்பட்ட 20 இலட்சம் பெறுமதி யான கஞ்சா கலந்து புகையிலை,    பல்வேறு போதை ஏற்படுத்தும் பொருட்கள் என்பனவும் மீட்கப் பட்டதாக பொலிஸார் கூறினர்
சந்தேக நபர்கள் நேற்று மாளி காகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: