சனி, 2 ஏப்ரல், 2022

மருத்துவத்துறையில் சீனியர்கள் - அஷிஸ்டன்ட்கள் என்ற முகமூடியில் உலவும் மனிதத்தன்மையற்ற மிருகங்களால் பறிபோன மருத்துவரின் உயிர்

 john Aaron Prabhu  :  Why I hate this profession.! It's not a noble one.! Anti Ragging Warning SoCalled Seniors
மருத்துவர்  அர்ச்சனா-விற்காக  கொதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களை நோக்கி சில கேள்விகள் …
இன்று வட இந்தியாவில் நடந்தது போல தமிழ்நாட்டில் அனுதினமும் இது போன்ற கொடுமைகள் இங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன …
நீங்கள் நாள்தோறும் உடன் பணிபுரியும் பெண் மருத்துவர்களை அல்லது ஜூனியர் மருத்துவர்களை சீனியர்கள் என்ற ஒரே காரணத்தால் கொடுமைப்படுத்தாமலா இருக்கிறீர்கள்…?
25/26 வயதில்  இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் படித்துக் கொண்டு 30 வயது அல்லது 25-க்கு குறைவான வயதுடைய முதலாமாண்டு மருத்துவர்களை நீங்கள் நடத்தும் விதம் என்ன..?
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மருத்துவக்கல்லூரிகளில் இருந்து தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது்...

இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் நீட்டும் உதவிக்கரம்

 

இராதா மனோகர் : தமிழ்நாடு முதலமைச்சர் திரு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
இலங்கையில் பொருளாதார சிக்கல்களால் இன்னல் படும் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒன்றிய அரசின் அனுமதியை கோரி இந்திய பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களிடம் தாங்கள்  கோரிக்கை விடுத்திருப்பதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இலங்கையின் தற்போதைய பொருளாதார இன்னல்கள் வெறுமனே தமிழர்களுக்கு மாத்திரம் உரியதல்ல.
இலங்கையின் மொத்த மக்களுமே இன்று பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்ததே.
இந்த இன்னல் காலங்களில் இலங்கை மக்களை சிங்களவர் தமிழர் என்று பிரித்து உதவி கோருவது அங்குள்ள மக்களுடையே  தேவையற்ற ஒரு கசப்புணர்வை மீண்டும் பரப்பி விடக்கூடும் என்ற அச்சம் உண்டாகிறது

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகள் சொத்து வரி உயர்வு!

மாலைமலர் : தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. முதல்-அமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - வில்சன் DMK - MP

dhinakaran -தினகரன் : உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: திமுக எம்.பி.வில்சன் கோரிக்கை
சென்னை: உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று திமுக எம்.பி.வில்சன் கோரிக்கை விடுத்தார். சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 4 இடங்களில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் தெரிவித்தார் 

டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயம்" : முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

 கலைஞர் செய்திகள் : டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

சீமான் மயங்கி விழுந்தார் .. திருவொற்றியூரில்

  நக்கீரன் செய்திப்பிரிவு : திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுவதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, இன்று (02/04/2022) காலை 11.00 மணியளவில், அப்பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இலங்கையில் போராட்டங்களை ஒடுக்க 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு

 மாலைமலர் : அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் போராட்டம் வலுத்துள்ள நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உத்தரவு

BBC : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்
அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது.
சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின் அதிரடி

 Rajkumar R -     Oneindia Tamil :  டெல்லி : காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும், தமிழகத்தில் திமுகவுடன் இருப்பது போல் அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் தலைநகர் டெல்லியில் வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

ஆளுநருக்கு எதிரான தனி நபர் மசோதா வில்சன் (DMK) தாக்கல் ராஜ்ய சபாவில்! மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க “டைமிங்”..

 Shyamsundar -   Oneindia Tamil :   சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை விமர்சித்து இன்று முரசொலியில் கட்டுரை எழுதப்பட்ட நிலையில்,
 மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா மீது ஆளுநர்கள் முடிவு எடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தி.மு.க எம்.பி. பி.வில்சன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் நலன் சார்ந்த சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் கிடப்பில் வைத்து விடுகிறார் கவர்னர்.
ஒப்புதல் அளிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்படாததால் தனக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கால தாமதம் செய்து வருகிறார் தமிழக கவர்னர் என்ற புகார் உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் செல்வாக்கு சரிகிறதா?

 மின்னம்பலம் : டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக உள்ளிட்ட பிற கட்சியினருடன் உரையாடிக் கொண்டிருக்கும் படங்களை அனுப்பியது.
அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு
வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
"டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவிற்காக சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டெல்லியில் உள்ள தமிழர்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்த பேச்சு வந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவாதமும் கொஞ்ச நேரம் நடந்திருக்கிறது.
அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி டிஜிட்டல் மெம்பர்ஷிப் என்ற வகையில் மின்னணு முறையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருவது பற்றி ஸ்டாலின் சீனியர் நிர்வாகிகளுடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்குரிய ஜி எஸ் டி 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாயை உடனே விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

 மாலைமலர் : சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாயை உடனே விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.
அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகு மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார்.

கொழும்பில் ஊரடங்குச் சட்டம்.. குடியரசு தலைவர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

colombo curfewவீரகேசரி : ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வீட்டிற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை போடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்,
இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ‘Press Meet’ நடத்திய முதலமைச்சர்... பிரதமர், அமைச்சர்கள் உடனான சந்திப்பு குறித்து விளக்கம்!

 கலைஞர் செய்திகள் : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் 14 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
மேலும், டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ரஷிய வெளியுறவு மந்திரி இந்தியா வருகை ... உக்ரைன் போர் சூழலில்

 தினத்தந்தி : புதுடெல்லி, உக்ரைன் நாடு மீது ரஷியா தொடுத்து வரும் போரானது 36வது நாளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்

 மின்னம்பலம் : வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானது என்றும், விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே உள்ளது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என்று வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இது பாமகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பு வன்னியர் சமூகத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்று கூறி மரக்காணம் இ.சி.ஆர் சாலையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், சாலை மறியல் செய்த பாமக கட்சியினரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வியாழன், 31 மார்ச், 2022

சென்னை ஆல்பெர்ட் திரையரங்கம் மீது பெருநகர மாநகராட்சி ஜப்தி நடவடிக்கை!

கலைஞர் செய்திகள் : வரி செலுத்த தவறியதால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.
சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்கில் சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை பெருநகர மாநகராட்சி.
2021 - 22ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.
வரி கட்டாததால் ஜப்தி.. சென்னையில் பிரபல தியேட்டர் மீது பெருநகர மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

கிளிநொச்சி 20 மாணவர்கள் தங்கள் கைகளை தாங்களே பிளேட்டினால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம்

வீரகேசரி :  கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால்  தங்களது கைகளை  தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு  முன்  தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.
பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி திரவத்தை (சானிடைசர்)  காயத்தின் மேல் தெளித்து கொண்டதாக நேரில் பார்த்த  சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி தருக!" பிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

 மாலைமலர் : டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:  
பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது.
அதன் அடிப்படையில் டெல்லியில் பிரமாண்டமாக தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று இந்த கட்டிடத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பார்ட்டிக்கு வந்த பெண்ணை நான்கு பேரோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நீச்சல் வீரர்.. பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

டின்னருக்கு நம்பி வந்த பெண்ணை நண்பர்களுக்கு இரையாக்கிய நீச்சல் வீரர்.. பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

கலைஞர் செயதிகள்  : பாதிக்கப்பட்ட பெண் மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் ஒருவரான ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார்.
டின்னருக்கு அழைத்து இளம் செவிலியரை நீச்சல் வீரர்கள் நால்வர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் ஒருவரான ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார்.
இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நியூ பெல் ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு பார்ட்டிக்காக ரஜத் நர்ஸை வர வைத்திருக்கிறார். அப்போது பெண்ணை ஒரு அறைக்கு அழைத்து சென்றிருக்கிறார் ரஜத்.

நியூ கலிடோனியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு

 தினத்தந்தி : நவுமியா,  தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூ கலிடோனியா பகுதியில் உள்ள டாடினில் 7.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.  
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

புதன், 30 மார்ச், 2022

“தமிழக முதலமைச்சர் எல்லா தொழில் முதலீடுகளையும் ஈர்த்துட்டாரு..” : கர்நாடக மேலவையில் புலம்பிய கொறடா!

பீட்டர் அல்போன்ஸ் : கர்நாடக மாநிலத்திற்கு வரவேண்டிய அநேக முதலீடுகள் தற்போது தமிழகத்திற்கு போவதாக கர்நாடக சட்ட மேலவையில் அரசு கொரடா வருத்தம்" தமிழக முதலமைச்சரின் திறமையான நிர்வாகத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? சகோதரர் அண்ணாமலை அறிதல் நலம்!@CMOTamilnadu @INCTamilNadu
Image

கலைஞர் செய்திகள் : கர்நாடக மாநிலத்திற்கு வரவேண்டிய ஏராளமான தொழில் முதலீடுகள் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கர்நாடக சட்ட மேலவையில் அரசு கொறடா பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 17,696 கோடியை எட்டியுள்ளது.

அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கடந்து வந்த பாதை

ss dmk

நக்கீரன் - வே.ராஜவேல்  : திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் வந்திருக்கிறது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாதி கூறி விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
தீவிர திராவிட இயக்க பற்றாளரும் கலைஞருக்கு பக்க பலமாக இருந்தவருமான மறைந்த எஸ். சிவசுப்ரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர். 1996 – 2001 அரியலூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 2001-2006 அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2006-ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011-ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினர், 2016 ல் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2021-ல் குன்னம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து..மேல்முறையீடு செய்த தமிழக அரசு, பாமக.. உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

  Rajkumar R -  Oneindia Tamil :  சென்னை : வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் பாமக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குல் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

ஹலால் என்பதே ஒரு பொருளாதார ஜிஹாத் தான்!" பாஜகவின் சி.டி.ரவி சர்ச்சை பேச்சு.. முழு பின்னணி

ஹலால் முறை

Vigneshkumar - Oneindia Tamil : பெங்களூர்: ஹலால் உணவு தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே ஹலால் இறைச்சி குறித்து தகவல் பரவி வருகிறது. இந்துக்கள் அனைவரும் ஹலால் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதில் கூறப்பட்டு வருகிறது.
உகாதி பண்டிகைக்கு மறுநாள், அசைவம் சாப்பிடும் இந்துக்கள் கடவுளுக்கு இறைச்சியைப் படையல் செய்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த சடங்கைத் தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.