சனி, 26 மார்ச், 2022

பணத்தோட்டம் ... தனிமனித நிதி மேலாண்மை பற்றிய புரிதலுக்கும், சமூக பொருளாதார சிந்தனைக்கும்

 Karthikeyan Fastura  : பணத்தோட்டம் சேனல் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய யோசனைகள் தயக்கங்கள் இருந்தன.
எதையும் professional ஆக செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆரம்பத்தில் வீடியோ எடிட்டிங் நன்றாக இருந்தாலும் வீடியோ பதிவு மிக சுமாராக லைட்டிங் சரியில்லாமல் இருக்கும்.
இருந்தபோதிலும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த சமயத்தில் வெளியிட்டோம்.
பிறகு அதனை நிறுத்தி வைத்தோம். ஏனென்றால் அதற்கென்று ஒரு தனியாக ஆள் கிடைக்கவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு இதில் நிபுணத்துவம் பெற்ற ராகேஷ் என்ற தொழில்முறை வீடியோ எடிட்டர் கிடைக்கவும் மீண்டும் பணத்தோட்டம் சேனலுக்கு உயிர் கொடுத்தோம்.
இம்முறை அதற்கென்று ஒரு தனி அறை ஒதுக்கி, அங்கு லைட்டிங் ஏற்பாடுகள் செய்து,

மூப்பில்லா தமிழே தாயே.... முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்

 மாலைமலர் : ஏ.ஆர்.ரஹ்மானின், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல்,
பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

அண்ணாமலை “24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர வேண்டும்! ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை! இல்லையேல் நூறு கோடி ரூபா அபராதம்!

 மின்னம்பலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் துபாய் எக்ஸ்போ-22ல் கலந்துகொண்டதை கொச்சைப்படுத்தி, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வேலூரில் எலக்ட்ரிக் பைக் விபத்து: அரசியல் தலைவர்கள் கோரிக்கை!

 மின்னம்பலம் : வேலூரில் நேற்றிரவு சார்ஜ் போட்டிருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலூர் அல்லாபுரத்தில் மின்சார இருசக்கர ஊர்தி வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

துபாய் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

 மாலைமலர் : துபாய் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு தொழில் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னலையில் 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளது. அதில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஸ்டாலினுக்கு BMW கார் துபாய் அரசு வழங்கியதா? உண்மை என்ன?

tamil.indianexpress.com  : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்று முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் தொடங்கிய துபாய் எக்ஸ்போ தொழிற்கண்காட்சியில் பங்கேற்க சென்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாதங்கள் நடைபெறும் இந்த தொழிற்கண்காட்சியில், 192 நாடுகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தமிழகத்திற்கான அரங்கு அமைப்பதற்காக தமிழகத்திற்கு அரங்கு அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியம் கலாச்சாரம், தமிழ் மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும்  வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் நேற்று மாலை துபாய் சென்றடைந்தார்.

வெள்ளி, 25 மார்ச், 2022

ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் தமிழ்நாடு வர மு.க.ஸ்டாலின் அழைப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு :   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (25/03/2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர்  அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, (H.E. Abdulla Bin Touq Al Marri) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி (H.E. Dr. Thani Bin ahmed Al Zeyoudi) ஆகியோரைச் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்திற்கு பட்ஜெட் தேவையில்லை: அண்ணாமலை

 மின்னம்பலம் : மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே போதும், தமிழகத்திற்கு பட்ஜெட் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்' என்ற தலைப்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் இன்று(மார்ச் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, திருப்பதி நாராயணன், கருநாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 'தாலி இங்கே தங்கம் எங்கே', 'ஆயிரம் ரூபாய் என்னாச்சி' போன்ற பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மகள் கண்ணெதிரில் இயற்கைக்கு மாறான உடலுறவு.. சைகோ .. மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு மேற்கொள்வது பலாத்காரம்

 tamil.asianetnews.co -  Ezhilarasan Babu  : மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளும் கணவன் விஷயத்தில் மட்டுமே இந்த உத்தரவுகளை வழங்குகிறோம் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த சமூகத்தில் ஒரு கணவரோ அல்லது வேறு யாரோ கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சட்டத்தின்முன் சமத்துவமின்மையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசியலமைப்பை மீறுவதாகும் என அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்தது.
தாலி கட்டிய கணவனாகவே இருந்தாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு மேற்கொள்வது பலாத்காரம் தான் என பெங்களூரு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தன் மீது மனைவி கொடுத்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கணவன் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

ஐயா இவரையும் விசாரிங்க.. இவருக்கு எல்லாம் தெரியும்” : எடப்பாடி பழனிசாமியை மாட்டிவிட்ட அதிமுக புகழேந்தி!

 கலைஞர் செய்திகள்  : எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் சொல்லி எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக சம்மன் அனுப்பியதையொட்டி நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

தோழர் மருதையன் :காஷ்மீர் பைல்ஸ் .. திராவிட நாடு பைல்ஸ் வந்தாலும் ஆச்சரியம் இல்லை

 Kandasamy Mariyappan  : எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..,
அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா என்ற நாடு கண்டிப்பாக இருக்காது.!
பல நாடுகளாக உடைந்து கிடக்கும்.!
அந்த கருமத்தை பார்க்க என் வயதுடையவர்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.!
elvakumar Ramasamy  உண்மை. அதற்கு முன்பாகவும் நடக்கலாம்.அதை தடுப்பதற்கு வழி மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. மதவாத RSS/ Islamic fundamentals ஐ தடை செய்ய வேண்டும்.
Kandasamy Kandasamy  : ஏன் அது நடக்காமல் தடுக்க வேண்டும்
Selvakumar Ramasamy :  ஐரோப்பிய ஒன்றியம் போல் இருக்கலாம். ஒரே military block. அதுவும் சரிப்படாவிட்டால் தென் இந்தியா. வட இந்தியா சங்கிகளால் பேரழைவை சந்திக்கும்.
Madhu Thovalai : வாய்ப்பில்லை... திராவிடநாடே உருவாகவில்லை.. அந்த கொள்கையே கைவிட்டாச்சு..
Madhu Thovalai : இந்திய நாடா? ஒன்றியமா?

வியாழன், 24 மார்ச், 2022

சுவிஸ் - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் ஏழாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

 இன்று வியாழன் காலை 7:00 மணியளவில்,  சுவிஸ் நாட்டில் Montreux என்னும் இடத்தில் அமைந்துள்ள 7வது அடுக்குமாடி குடியிருப்பின்  பால்கனியில் இருந்து ஐந்து பேர் விழுந்து விட்டதாக Vaud பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதில்  ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம் பெண் உயிரிழந்தனர். இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து பேரும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த  ஒரே குடும்பத்தவர்கள்  என்று  தெரியவருகிறது.
40 வயதான தந்தை, அவரது 41 -வயது மனைவி, அவரது சகோதரி  மற்றும்  அவர்களின்  8 வயது மகள் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர்.
15 வயது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

click link for details Switzerland

மாணவிகளை இப்படிதான் மயக்கி என்னுடைய காம வலையில் வீழ்த்தினேன்.. கைதான ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்.

 asianetnews.com  :  எனது வீட்டின் அருகே வசிக்க கூடிய 16 வயது மாணவி என்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்தார். அவர் கொஞ்சம் வசதி படைத்தவர். அவரிடம் பணம் இருப்பதை அறிந்த நான் மாணவியுடன் நெருங்கி பழக தொடங்கினேன். ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்த நான், சிறுமியை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டேன்.
 பாலியல் தொழிலுக்கு தள்ளிவிடுவதாக மிரட்டிஅடி பணிய வைத்தேன் என்று மாணவிகளை கடத்திய ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(40). இவர் கோவையில் தங்கியிருந்த போது, தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடமும் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றார். 

துபாயில் முதல்வர் ஸ்டாலின்.. நிகழ்ச்சி நிரல்

துபாயில் முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம் :   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 24ஆம் தேதி பிற்பகல் நான்கு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் உலகளாவிய தொழில் கண்காட்சி துபாய் எக்ஸ்போ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உள் அரங்கை முதல்வர் ஸ்டாலின் நாளை மார்ச் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இன்று பிற்பகல் 2.50 மணிக்கு தன் இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின்படி இன்று முதலமைச்சர் தனி விமானத்தில் புறப்பட்டார்.

இலங்கைத் தமிழர்களே.. கவலை வேண்டாய ம்” : நம்பிக்கை ஒளி பாய்ச்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : இலங்கை தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் பதிலுரைக்குப் பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நிதித் துறை அமைச்சர் அவர்களும், வேளாண் துறை அமைச்சர் அவர்களும் பதிலுரையாற்றி, இந்த அவையில் இருக்கக்கூடிய அனைவருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். 

ரஷிய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி சொத்து- 58 ஹெலிகாப்டர்கள், விமானங்களும் உள்ளன

 மாலைமலர் : ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் உலக அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
விளாடிமிர் புதின் 1952-ம் ஆண்டு ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். 1975-ம் ஆண்டு ரஷியாவின் உளவு நிறுவனமான கே.ஜி.பி.யில் பணியில் சேர்ந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் இதுவரை வெளிப்படையான தகவல்கள் எதையும் தேரிவித்ததில்லை.
இந்த நிலையில் ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துக்களை மதிப்பிடும் நிறுவனம் புதினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் இந்திய பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும்.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை சிறையில் கரம்பிடித்த காதலி ஸ்டெல்லா மோரிஸ் !

 Giridharan N  - Samayam Tamil  :  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தமது காதலி ஸ்டெல்லா மோரிசை, லண்டன் சிறைச்சாலையில் இன்று திருமணம் புரிந்து
தமது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 50 வயதான அவர், 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு முன்னர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக அவர் தங்கி இருந்தார். அப்போது 2011 ஆம் ஆண்டு அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

வைகோ தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் - புறக்கணித்த மதிமுக நிர்வாகிகள்

 நக்கீரன்  : மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று கூடியது.
 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தை மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஐந்து கட்சி கூட்டணி செய்த பச்சை துரோகம் .. வரலாறு


 LR Jagadheesan 
:  அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
தமிழ்நாடு இன்றைக்கு இப்படி நாசமாவதற்க்கு முழு முதல் காரணமே இந்த ஐந்து பேர் செய்த கூட்டுச்சதி தானே.
ஸ்டாலின் ஆணவத்துக்கு பழிதீர்ப்பதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சீரழித்த கும்பல் இந்த சதிகார கும்பல். நியாயமாய் இந்த ஐந்துபேரும் தமிழக வாக்காளர்களிடம் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
பிகு: அப்ப ஸ்டாலின் ஆணவத்துக்கு கண்டனமில்லையா என்று நீட்டிமுழக்க வரும் நடுநிலை நல்லவர்களுக்கு இரண்டு பதில்கள்.
அதை அப்போதே கண்டித்து எழுதியிருக்கிறேன் என்பது முதல் பதில்.
இரண்டாவது பதில் ஸ்டாலினைவிட ஆயிரம் மடங்கு ஆணவத்துடன் இவர்களை நடத்திய ஜெயலலிதாவிடம் இந்த ஐவரும் எப்படி பம்மிப்பதுங்கிக்கிடந்தார்கள் என்பதற்கு சம்பவரீதியாக சாட்சிகள் இருக்கின்றன/. ஜெயலலிதாவின் அதிமோசமான ஆணவத்தை பொறுத்துக்கொள்ள முடிவதும்.
அதைவிட குறைவான ஆணவம் ஸ்டாலினிடம் வெளிப்பட்டால் அதற்கு எதிராக பொங்கி எழுவதிலும்.

டி ராஜேந்தர் கார் மோதி பிச்சைக்காரர் பரிதாபமாக உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

 tamil.filmibeat.com -  Mari S  :  சென்னை: இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தரின் கார் மோதி பிச்சைக்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாற்றுத் திறனாளியான அந்த பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது டி ராஜேந்தரின் கார் எதிர்பாராத விதமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து நடந்ததை பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை, தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளியான பிச்சைக்காரர் ஒருவர் கடந்த மார்ச் 18-ம்தேதி சாலையை கடந்து சென்றார். அப்போது நடிகர் டி.ராஜேந்தர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 23 மார்ச், 2022

ஹிஜாப் - கர்நாடக திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை!

 மின்னம்பலம் : கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்து இருந்த திருவிழாவை இந்தாண்டு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மதிமுகவின் எதிர்காலம் - துரை வைகோ அரசியலில் பிரகாசிப்பார் என்று வைகோ நிச்சயம் ... ?

May be an image of 5 people, people sitting, people standing and wrist watch

Raj Dev :  மதிமுக....?   வைகோவுக்கு எதிராக மதிமுகவில் எழுந்துள்ள குரலை கவனியுங்கள். அது சற்று விநோதமாக உள்ளது. வழக்கமான அதிருப்தி குரல்கள் ‘கூட்டணி பிடிக்கவில்லை;
வெளியேறு’ என்பதாக இருக்கும்.
ஆனால் ஒரு  கூட்டணியில் இருக்கும் போதே கூட்டணி வேண்டாம்;
அதற்கு பதிலாக கட்சியையே இணைத்து விடலாம் என்று பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது?
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறும் சூழ்நிலை எளிதில் நிகழப் போவதில்லை.
திமுக கூட்டணியில் இருக்கும் வரை அந்த சிறு சதவீத தொகுதி ஒதுக்கீட்டில் தான் ஒட்டுமொத்த மதிமுகவினரின் அரசியல் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
கட்சியை திமுகவுடன் இணைத்து விட்டால் அப்போது மதிமுகவினர் முன்புள்ள வாய்ப்புகளும், தொடர்புகளும் அகலமாகின்றன என்பது ஒரு கணக்கு.

மேற்கு வங்கத்தில் 7 பேர்கள் உயிரோடு எரித்து கொலை

 விகடன் : மேற்கு வங்கம்: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கிராம மக்கள்! - மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் உள்துறை
மேற்கு வங்கத்தில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பிர்பூம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன. ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாக பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர்.

மலேசியாவில் அதிகரித்து வரும் ஜாதி மனோநிலை

 Subashini Thf :  மலேசியாவில் சாதி !  மலேசியா ரொம்பவே மாறிவிட்டது.
நான் பிறந்து வளர்ந்த காலத்தில் மலேசிய இந்தியர்களிடையே இன்றைக்கு இருப்பதுபோல சாதிப் பற்று இருந்ததை நான் சிறிதும் உணர்ந்ததில்லை. ஆனால் இன்றைக்குச் சாதி தொடர்பான ஆர்வம் என்பது மலேசிய தமிழ் மக்களிடையே மிக வேகமாக, அதேசமயம் ஆழமாக வேரூன்றி வருகிறது.
மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் மட்டுமே என்று எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுடன் கணிசமான தெலுங்கர்கள் மலையாளிகள் மற்றும் குஜராத்தியர் சீக்கியர் ஆகியோரைக் கூறலாம். ஆனால் பெரும்பான்மை தமிழர்கள்தான். ஆனால் இந்தத் தமிழ் மக்கள் சாதியால் இன்றைக்குத் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்று அறிகிறேன்.

இலங்கை - பட்டினிச் சாவுக்கு பயந்து ” நடுக்கடலில் 37 மணி நேரம் போராடி அகதிகளாக தனுஷ்கோடி வந்த தமிழர்கள்

BBC :  நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக  தமிழகத்தில்  தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டினிச் சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி சேர்ந்ததாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்ற இலங்கை தமிழர்கள்  கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான  பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான, குழந்தைகளுக்கான  பால் மா, அரிசி, பருப்பு, கோதுமை மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக படகுகள் மூலம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.