இன்று வியாழன் காலை 7:00 மணியளவில், சுவிஸ் நாட்டில் Montreux என்னும் இடத்தில் அமைந்துள்ள 7வது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து ஐந்து பேர் விழுந்து விட்டதாக Vaud பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம் பெண் உயிரிழந்தனர். இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து பேரும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என்று தெரியவருகிறது.
40 வயதான தந்தை, அவரது 41 -வயது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவர்களின் 8 வயது மகள் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர்.
15 வயது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
click link for details Switzerland
சம்பந்தப்பட்ட ஆணை தொடாபாக பொலிசார் கதவைத் தட்டியபோது, அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் 40 வயதான பிரெஞ்சுக்காரரான தந்தை, நீங்கள் யார் என்று குரல் எழுப்பிய சத்தம் கேட்டுள்ளது.
பொலிசார் தாங்கள் யார் என அறிவித்த பிறகு, குடியிருப்பிலிருந்து எந்தவித சத்தம் கேட்கவில்லை.
வீட்டிலிருந்தவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் பொலிசார் அந்த வளாகத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.
இதற்கிடையில், அந்த அடுக்குமாடி பால்கனியில் இருந்து சிலர் விழுந்துகிடப்பதாக ஒருவர் போலீசாரை அழைத்துள்ளர்.
இந்த சோகத்திற்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணங்களைத் தீர்மானிக்க, பாதுகாப்பு காவல்துறையின் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுவிஸ் நாட்டு பத்திரிகையில் இது தொடர்பாக வந்த செய்திகளை கீழே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக