Giridharan N - Samayam Tamil : விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தமது காதலி ஸ்டெல்லா மோரிசை, லண்டன் சிறைச்சாலையில் இன்று திருமணம் புரிந்து
தமது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 50 வயதான அவர், 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு முன்னர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக அவர் தங்கி இருந்தார். அப்போது 2011 ஆம் ஆண்டு அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
2015 ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அசாஞ்சே -மோரிஸ் தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும், .மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக