இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
புதன், 18 டிசம்பர், 2019
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் அனைத்து தலைவர்களும்.. கமலஹாசன் உட்பட
இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அரும்பாக்கம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியை தற்கொலை
மாலைமலர் : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இன்று காலை பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டி.ஜி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரி. இங்கு பேராசிரியையாக பணிபுரிந்தவர் ஹரிசாந்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நின்றுவிட்டார்.
ஆனால், அடிக்கடி கல்லூரிக்கு வந்து செல்வார். இன்று காலையிலும் எப்போதும் போல ஹரிசாந்தி கல்லூரிக்கு வந்தார். திடீரென தான் பாடம் நடத்திய முதல்மாடி வகுப்பறைக்கு சென்றார். தனது கைகளை பிளேடால் கிழித்த ஹரிசாந்தி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலையில் மாணவிகள் வந்த பிறகுதான் அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது. வகுப்பறைக்கு சென்ற மாணவிகள் பேராசிரியை ஹரிசாந்தி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - பெண்கள் சாலை மறியல்.. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு
தினத்தந்தி :
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. திருவனந்தபுரத்தில் பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த
சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து
வருகிறது. கேரளாவிலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து
வருகிறது.
முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று முன்தினம்
திருவனந்தபுரத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட
அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.CAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள் .. இப்போது இரண்டே இரண்டு பிரிவுகள் தான்.

சுமதி விஜயகுமார் :
Unity in diversity என்பதெல்லாம் இப்போது இல்லை. இரண்டே இரண்டு பிரிவுகள் தான்.
CAAவை எதிர்ப்பவர்கள் Vs CAAவை ஆதரிப்பவர்கள்.
ரத்தம் சிந்தி போராடும் மாணவர்களின் பக்கம் துணை நிற்பவர்கள் Vs மாணவர்களின் போராட்டத்தில் தீவிரவாதிகள் கலந்து விட்டார்கள் என்று கூறுபவர்கள்
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையையே மாற்றி
விட்டார்கள் என்று அறைகூவல் விடுபவர்கள் Vs இந்துக்களின் பாதுகாப்பிற்கு
தாங்கள் தான் காவலர்கள் என்று கூறுபவர்கள்இதுவரை அமைதியாய் இருந்தவர்கள் கூட இப்போது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்து தான் ஆக வேண்டும். அது எந்த பக்கம் என்பது அவரவர் விருப்பம். ஆனால் அப்படி எடுக்கப்படும் முடிவு இது எப்போதும் போல் காந்தி நாடாகவே இருக்க போகிறதா இல்லை சில நாடுகளை போல அடிப்படைவாத நாடாக மாறி நாட்டையே மத குழிக்குள் தள்ள போகிறதா என்பதை முடிவு செய்யும்.
6 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா அடைத்திருந்த வளர்ச்சி என்பது அவ்வளவு எளிதாக வந்ததில்லை. எத்தனை குறைகள் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் கட்டமைக்கப்பட்ட சாம்ராஜ்யம். அந்த ஊழல் கட்சி கட்டமைத்த பொதுத்துறை நிறுவனங்களைத்தான் இப்போது இந்த தேசபக்கத்தி பற்றி நமக்கு வகுப்பெடுப்பவர்கள் தனியார் நிறுவனத்திற்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன முதலில் இந்த துலுக்கர்களை நாடு கடத்த வேண்டும் அதுதானே அத்தியாவசியம்.
மீண்டும் போலீஸார் போராட்டக்காரர்கள் இடையே மோதல்! 66 அடி சாலை மூடல்!
நக்கீரன் : குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய
மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல
இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து
மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.
குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் 16ஆம் தேதி முதல் போராட்டங்கள் ஈடுபட்டனர். பின்னர் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஈழ அகதிகள் அனைவரும் இலங்கை திரும்ப வேண்டும் – சுமந்திரன்
வீரகேசரி : இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது நலன் கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள். இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அதனை சுயாதீனமாக தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு.
எங்களின் விருப்பம் என்னவெனில் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். குடியேற வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
நாங்கள் ஆதரவு தெரிவித்த அரசாங்கம் கூட அதனை செய்ய தவறி இருந்தது.
அதிமுக எம்பி முகமதுஜான் ஜமாத் கூட்டமைப்பிலிருந்து நீக்கம்... சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்தார்
தினகரன ;
ராணிப்பேட்டை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு
ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்த அதிமுக எம்பி முகமதுஜான், ராணிப்பேட்டை
அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பிலிருந்து நேற்று அதிரடியாக
நீக்கப்பட்டார்.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முஹம்மது ஜான். இவர் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளராக பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

கலைஞர் .. கட்டுமரம் கட்டிவைத்த கோட்டை.... டான் அசோக்

Don Ashok -Ashok.R :
கொஞ்சம்
படிக்கணும். கொஞ்சம் கஷ்டப்பட்டாதான் தெரியும். தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்களில், உட்கட்டமைப்புகளில், கல்வி, சுகாதார மேம்பாடுகளில், கம்ப்யூட்டர் துறையில் என அத்தனையிலும் கலைஞரின் பங்கு 95% மேல். ஆனாலும் ஒருமுறை கூட கலைஞருக்கு தொடர்ந்து இருமுறை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதும்போக திமுகவை விட அதிமுகதான் அதிக ஆண்டு ஆண்டிருக்கிறது. மக்கள் ஏன் இப்படி தீர்ப்பளித்தார்கள்? எதனால் இது நடந்தது என பலமுறை யோசித்திருக்கிறேன். நிற்க.
கலைஞர் திருவாரூரில் இருந்து நேரடியாக சென்னை வந்தவர் அல்ல. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மிக அதிக சம்பளத்தில் வசனகர்த்தாகாவ பணியாற்றிவர். மந்திரிகுமாரி உள்ளிட்ட அவரது சூப்பர் ஹிட் படங்களில் சிலவற்றை முடித்துவிட்டு, சினிமா உலகம் சென்னைக்கு மாறியபோது அவரும் இடம்பெயர்ந்தார். பின்னர் பராசக்தி எல்லாம் முடித்து சூப்பர்ஹிட் திரைக்கதை/வசன எழுத்தாளர் ஆனபின் கார், கோபாலபுரம் வீடு என பலவற்றை வாங்கினார். இதெல்லாம் பலரது பேட்டிகளில், வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட உண்மை. ஆனால் நம் ஊரில், "திருவாரூரில் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தார்," என ஒரு பார்ப்பான் கிளப்பிவிட்டால், நம் சூத்திரப்பயல் எல்லாம் அதை அப்படியே போகுமிடமெல்லாம் வாந்தி எடுப்பான். இன்றும் எடுக்கிறான்.
ஆனால் ஜெயலலிதாவைப் பாருங்கள். மகராசி!! ஒன்றுமே செய்யவில்லை என்றாலும்,
வாயிலேயே செருப்பால் அடித்தாலும் ஏபிள் அட்மினிஸ்ட்ரேட்டர் என்பான்.
வாய்தா மேல் வாய்தா வாங்கி ஓடி ஒளிந்த தொடை நடுங்கி என்றாலும் அயன் லேடி
என்பான். கரன் தப்பாரைப் பார்த்து தெறித்து ஓடினாலும், "எப்படி தெறிக்க
விட்டாங்க பாத்தியா?" என்பான்.
புலம் பெயர் புலி ஆதரவாளர்களும்... புதிய இந்திய குடியுரிமை சடடமும்
கருணை கொலைக்கு அனுமதி கேட்கும் தமிழ் அகதி மாணவன்
ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய சாபம் புலி அமைப்பு!
அதை விட கொடுமையான விடயம் அந்த புலி அமைப்பின் அத்தனை சகோதர படு கொலைகளையும் கண்டும் காணாதது போல இருந்து அவர்களை மேலும் மேலும் அந்த பாசிச வழியில் செல்ல திமுக தவிர்ந்த ஏனைய திராவிட இயக்கங்கள் ஆதரவு கொடுத்தமை ..!
புலிகளின் படுகொலை கலாச்சாரத்தை கலைஞர் மட்டுமே கடுமையாக கண்டித்தார் .எச்சரிக்கை விடுத்தார் .
திமுகவின் எதிரிகள் புலிகள் அமைப்பை கலைஞருக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே கொம்பு சீவி கொம்பு சீவி வளர்த்தனர் .
அதுதான் ஒட்டு மொத்த அழிவுக்கும் காரணமாகியது .
கலைஞர் கொஞ்சம் அசந்திருந்தால் கலைஞரையும் கொலை செய்திருப்பார்கள் . அது பற்றி இந்திய புலனாய்வு அமைப்பு கலைஞரை எச்சரித்தது உண்மையே!
இன்று அந்த புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கே சென்றால் தங்களுக்கு இழந்து போன சுமார் நான்கு அல்லது ஐந்து எம்பி தொகுதிகள் கிடைக்கும் என்பதால் அதையே விரும்புகிறார்கள் .
எனவேதான் கள்ள மௌனம் காக்கிறார்கள் .
இதுதான் ஆர் எஸ் எஸ் இன் விருப்பமும் கூட ..
புலிகளும் ஆர் எஸ் எஸ் சும் ஒரு கள்ள கூட்டில் உள்ளது ..
என்னதான் புலி ஆதரவாளர்கள் ஆர் எஸ் எஸ் க்கு பல்லாக்கு தூக்கினாலும் அவர்களுக்கு கிடைக்க போவது அர்ஜுன் சம்பத்துக்கு கிடைக்கும் சீட் தானே தவிர எச் ராஜாக்களுக்கு கிடைக்கும் சீட்டுக்கள் அல்ல
முழு ஈழ தமிழர்களையும் தாழ்ந்த ஜாதியாகத்தான் ஆர் எஸ் எஸ் / பாஜக கருதுகிறது ..
செவ்வாய், 17 டிசம்பர், 2019
ஆர் எஸ் எஸ் / பாஜக ஆட்சியில் / பிடியில் நாடு ......
Venkat Ramanujam :
கேரளம்,
பஞ்சாப்,
மே.வங்கம்
பீகார்
ஒடிசா
குடிகெடுக்கும் மசோதாவை அமல் படுத்த முடியாதென மறுப்பு ..
அதிமுகவின் 11 எம்பிக்கள் ஒரு ஐ எ எஸ் அரசு அதிகாரி போன் மூலம் ஆணையிட .
அதை தலைமேல் ஏற்று பாஜகவுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் வாக்கு போட்ட அடிமை அதிமுக!
இந்த மோசடிக்காரர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறது நாடு
அதிமுக முகமுடியில் ஒளிந்து திரியும் RSS ஆட்சி ஒழிந்தால் தான் தமிழகம் விமோசனம் பெறும் .. சத்தியம் உரைக்கின்றேன் ... சந்தேகம் வேண்டாம் ..
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு வீடியோ
மாலைமலர் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக
திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுடெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா தனது பலம் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் இந்த சட்டத்தை கொண்டு வந்தது.
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, திரிபுரா முன்னாள் மகாராஜா பிரத்யோத் கிஷோர் தேவ் வர்மன், சுப்ரீம்கோர்ட்டு வக்கீல் எம்.எல்.சர்மா ஆகியோர் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
குடியுரிமை சட்டத்தால் அஸ்ஸாம் பாஜக ஆட்சி கவிழ்கிறதா?
வெப்துனியா :
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த
குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று
கூடி போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் மாணவர்களும் இந்தியா முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பகுதிகளில் பதட்டமான
சூழ்நிலையில் உள்ளதுஇந்த நிலையில் குடியிருப்பு சட்டத்துக்கு எதிராக அசாமில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை நடத்தி வருவதால் அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலிஸ் மற்றும் இராணுவத்தினர் கலவரத்தை அடக்க தீவிர முயற்சியில் உள்ளனர்
இந்த நிலையில் அசாமில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு அசாம் கண பரிஷத் ஆதரவு அளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு அசாம் கண பரீஷித்தின் எம்பிக்கள் ஆதரவாக ஓட்டுப் போட்ட நிலையில் தற்போது கட்சிக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது
ஜாமியா வன்முறை: குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சிகள்!
மின்னம்பலம் :
டெல்லியில்
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகக் காங்கிரஸ் இடைக்கால
தலைவர் சோனியா காந்தி ![]() |
| புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி |
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. மாணவர்களுக்கு ஆதரவாகக் கேரள, மேற்கு வங்க மாநில முதல்வர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பல்கலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் போராட்டம் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் ஒன்று கூடி சீலம்பூர் பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாகப் பிரியும் அண்ணா பல்கலைக் கழகம்!
மின்னம்பலம் :
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவைத் தமிழக அரசு நியமித்துள்ளது.பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானோர் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே சேர விரும்புவர். இந்த பல்கலைக்குக் கீழ் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியல், தொழில்நுட்பம் என உயர் கல்விகளை வழங்குவதுடன் அண்ணா பல்கலை ஆராய்ச்சி பணிகளையும் செய்து வருகிறது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கு இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் என்ற சிறந்த அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இதன்மூலம் மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடருமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே பல்கலையை இரண்டாகப் பிரிக்க மாநில அரசு முடிவு செய்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை
மாலைமலர் :தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள்
அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப். 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை அவர் பாகிஸ்தானின் அதிபராக இருந்தார்.
76 வயதான முஷரப் பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்தபோது ஆட்சியை
பிடித்தார். 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் சர்வாதிகாரியானார். முஷரப்
2001-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி பாகிஸ்தானின் அதிபராக பொறுப்பு ஏற்றார்.
முஷரப் அதிபராக இருந்தபோது 2007-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி அவசர நிலையை கொண்டு வந்தார். சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் கைது செய்து அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டார்.
இது அந்நாட்டில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
முஷரப் மீது பதவி நீக்கம் கொண்டுவர முயன்றபோது அவர் 2008-ம் ஆண்டு பதவி விலகி தேர்தலை சந்தித்தார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
சர்தாரி தலைமையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது முஷரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ரயில்களை சேதப்படுத்தினால் சுடுங்கள்"- மத்திய ரயில்வே இணையமைச்சர் பேச்சு!

nakkheeran.in - பா. சந்தோஷ் :
குடியுரிமை
சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின்
ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய
மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல
இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து
மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.
குறிப்பாக
இந்திய தலைநகர் டெல்லியில் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஜமியா
மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் 16- ஆம் தேதி முதல் போராட்டங்கள்
ஈடுபட்டனர். பின்னர் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே
மோதல் ஏற்பட்டது. இதனையடுத்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் டெல்லி ஜாபர்பாத்
பகுதியில் போராட்டக்காரர்கள்- காவல்துறைக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை டெல்லி போலீசார் கலைத்தனர்.
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்கள் அமைதி
காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். சென்னை பல்கலை. மாணவர்கள் போராட்டம் நீடிப்பு- போலீஸ் குவிப்பால் பதற்றம்- விடுமுறை அறிவிப்பு
Mathivanan Maran
tamil.oneindia.com/ :
சென்னை: டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலைக்
கண்டித்தும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும் சென்னை பல்கலைக் கழக
மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து
அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும்
மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கல்லூரிகள்,
பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் லயோலா, நியூ கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள், சட்ட
கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக் கழக
மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெருப்பில் கைவைத்துவிட்டதா பாஜக.. குடியுரிமை சட்டத்துக்கு மட்டும்
இவ்வளவு போராட்டம் ஏன்!
இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர போலீசார் அப்பகுதியில்
குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 2 மாணவர்களை
போலீசார் கடத்தி வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் நீடிப்பதால் 6 நாட்களுக்கு சென்னை பல்கலைக்
கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிறிஸ்துமதஸ்,
புத்தாண்டுக்காக டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை பல்கலைக் கழகத்துக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
LIVE BREAKING NEWS: தமிழகத்தில் திமுக போராட்டம் .. வீடியோ .. குடியுரிமை சட்ட திருத்தம்
tamil.oneindia.com - shyamsundar :
சென்னை:
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து
வருகிறது. தமிழகத்தில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று
திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது. அசாம், டெல்லி, மேற்கு வங்கம், ஹைதராபாத், பீகார், உத்தர பிரதேசம், கேரளா என்று பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காஷ்மீர் பிரச்னையை ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க சீனா கோரிக்கை
UNSC to meet on J&K issue today at China’s request: report
REUTERS
The council would meet behind closed doors for the first time since a similar gathering in August.
In
a letter to the Security Council on December 12, Pakistan’s Foreign
Minister Shah Mehmood Qureshi expressed concern about a possible further
escalation of tensions. (Photo: PTI | File)
The council would meet behind closed doors for the first time since a similar gathering in August, which was also called by Pakistan ally China, after India removed the decades-old autonomy the area enjoyed under the Indian constitution. In a letter to the Security Council on December 12, Pakistan’s Foreign Minister Shah Mehmood Qureshi expressed concern about a possible further escalation of tensions.http://www.asianage.com/world/americas/171219/unsc-to-meet-on-jk-issue-today-at-chinas-requestreport.html
தமிழர்களுக்கு ஆப்படிக்க வருகிறது NRC.... CAA யை எதிர்த்து நிறுத்தாவிட்டால் பெரும் அழிவு காத்திருக்கிறது
மு சித்திக் : தமிழர்களுக்கு ஆப்படிக்க வருகிறது NRC..
இப்போ நடைமுறையில் நாம் எதிர்த்து கொண்டிருப்பது CAA.
இந்த சட்டதிருத்தின் மூலம் அடுத்து கொண்டுவர இருப்பது NRC..
அதாவது "குடிமக்கள் பதிவேடு". உள்துறை அமைச்சரே வாய்மொழிந்திருக்கிறார்..
இதன் சாராம்சம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள அனைவரும் தான் இந்தியர்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
எப்படி நிரூபிப்பது..?
கீழ்க்கண்ட ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்,
1. நீங்களோ, உங்கள் பெற்றோரோ, அவர்களைப் பெற்றவர்களோ 1947 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர்களா?
அதை நிரூபிக்க உங்கள் அப்பா/ தாத்தா ஆகியோரின் 1947 ஆம் ஆண்டிற்கு முன்னரான சொத்து ஆவணங்கள்,
அதில் உங்களுக்குரிய பங்கு / உரிமையை நிறுவ வேண்டும் ( 1987 ஆம் வருடத்திற்கு முன் மணமான பெண்களிற்கு பெரும்பாலும் சொத்துரிமை இல்லை )
2. 1950 க்கு பிறகு உங்கள் குடும்பத்தில் பிறந்த அனைவரது பிறப்பு சான்றிதழும் வேண்டும்.
அதாவது உங்கள் அப்பா, அம்மாவிற்கான அரசின் பிறப்புச் சான்றிதழ்,
உங்கள் பிறப்பு சான்றிதழ்
உங்கள் தாத்தா 1947 க்கு பின்னர் பிறந்தவராயின் அவரது சான்றிதழும் வேண்டும்

டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல்.. போலீசுக்கு எதிரான வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

tamil.oneindia.com - shyamsundar ;
டெல்லி:
டெல்லியில் போலீசால் நேற்று முதல்நாள் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு
எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கலவரம் முடிந்தால் மட்டுமே விசாரணை நடக்கும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ
போப்டே தெரிவித்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முதல்நாள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எல்லாம் கட்!’ - அமித் ஷா
metronews.lk :இந்தியாவில் ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் எல்லாம் கட்!’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இந்திய மக்கள் தொகைதான் இப்போது அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணிகளில் மக்கள்தொகை பெருக்கமும் ஒன்றாக இருக்கிறது என அமித் ஷா நினைக்கிறார். இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பி.ஜே.பி அரசு, தங்களது அனைத்து அஜெண்டாக்களையும் அதிரடியாக நிறைவேற்றிவருகிறது. இந்நிலையில், இன்னும் சில நாள்களில் அடுத்த அதிரடி மசோதாவை நிறைவேற்றி, நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கத் திட்டமிட்டுள்ளார், அமித் ஷா. 2019ஆம் ஆண்டு மே மாதம், இரண்டாவது முறையாக அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது பி.ஜே.பி. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன், தங்களது நீண்டகாலத் திட்டங்கள் அனைத்திற்கும் உயிர்கொடுக்கும் முடிவுக்கு அப்போதே வந்தது. குறிப்பாக, பி.ஜே.பி அரசின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பல ஆண்டுகளாகத் தங்கள் கொள்கையாக வைத்திருந்த சில திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றிட வேண்டும் என்று பி.ஜே.பி அரசுக்கு மறைமுக அழுத்தமும் கொடுத்தது.
அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே முத்தலாக் மசோதாவைக் கொண்டுவந்து, அதைச் சட்டமாக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதைச் செயல்படுத்தியது பி.ஜே.பி.
இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதிக்க வேண்டும்.. அமெரிக்க அரசு அதிரடி அறிக்கை
https://www.japantimes.co.jp/news/2019/12/15/asia-pacific/modi-advances-nationalist-agenda-india-finds-rare-criticism-u-s/#.XfhQdM57kdU After the citizenship law’s approval, a State Department spokesperson said, “The United States urges India to protect the rights of its religious minorities in keeping with India’s constitution and democratic values.”
Sam Brownback, the U.S. envoy on religious freedom, voiced respect for India’s institutions. However he said the United States was “concerned” with the citizenship bill, and called on India to “abide by its constitutional commitments.”
Criticism has been more strongly worded from outside the administration

tamil.oneindia.com: நியூயார்க்: இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுக்க பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இன்னொரு பக்கம் டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே என்று பெரு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இதில் ஏற்படும் மாற்றம் கூர்மையாக கவனித்து வருகிறோம்.மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு அரசு அனுமதி தர வேண்டும்.

tamil.oneindia.com: நியூயார்க்: இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுக்க பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இன்னொரு பக்கம் டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே என்று பெரு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இதில் ஏற்படும் மாற்றம் கூர்மையாக கவனித்து வருகிறோம்.மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு அரசு அனுமதி தர வேண்டும்.
வட்டெழுத்து பயிற்சி .. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில்
Subashini Thf :
இன்று நாம் எழுதும் அல்லது வாசிக்கும் தமிழ் எழுத்துக்கள் பல்வேறு படிநிலைகளில் மாற்றமும் வளர்ச்சியும் கொண்டு வளர்ந்தவை.
ஆரம்பகால தமிழ் எழுத்துக்களை தமிழி என பெயரிட்டு அழைக்கிறோம். இந்தத் தமிழி எழுத்துருக்களின் படிப்படியான வளர்ச்சியாக வட்டெழுத்துக்கள் உருவாக்கம் அமைந்தது. அதிலிருந்து இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களின் வடிவம் படிப்படியான மாற்றங்களை கொண்டு வளர்ந்துள்ளது.
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை அறிந்து கொள்வது மிக அவசியம். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை இரண்டு நாள் வட்டெழுத்து பயிற்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
வருகின்ற 28 29 இரண்டு நாட்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு வட்டெழுத்து என்பது யாது? அதை எப்படி அறிந்து கொள்வது? எப்படி வாசிப்பது? எப்படி எழுதுவது? கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை எவ்வகையில் வாசித்து அறிந்து கொள்வது? ஆகிய பயிற்சிகளைத் தேர்ந்த கல்வெட்டியல் துறை அறிஞர்கள் வாயிலாக நீங்கள் பெறலாம்.
இப்பயிற்சி மதுரையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.
நாளை உண்மையை அம்பலப்படுத்துவோம்.. போராட்டத்திற்கு ஸ்டாலின் அழைப்பு.
Shyamsundar - tamil.oneindia.com :
சென்னை:
ஸ்டாலின் பேட்டி
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சட்டம் வந்தால் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்.
சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையில் அதிமுக இரட்டை வேடம் – மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் பேட்டி இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)