
savukkuonline.com :திருச்செந்தூரில் முருகனின்
தங்க
வேல் காணாமல் போய் விட்டது என்று எதிர்க்கட்சியில் இருந்த கலைஞர்
பிரச்சினை எழுப்பினார். அந்த விவகாரத்தை விசாரிக்க, சுப்ரமணியப் பிள்ளை
என்ற அறநிலையத் துறை அதிகாரியை நியமித்தார் எம்ஜிஆர். அந்த அதிகாரி
விசாரித்துக் கொண்டிருந்தபோதே, திருநெல்வேலி அரசினர் விருந்தினர்
மாளிகையில் 26 நவம்பர் 1980 அன்று தூக்கில் தொங்கினார்.
அதை
விசாரிக்க நீதிபதி ஜேசிஆர் பால் என்பவர் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம்
அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு எதிராக
இருந்ததால், அந்த அறிக்கையை வாங்கிய எம்ஜிஆர் அறிக்கையை பேரவையில் தாக்கல்
செய்யவேயில்லை.
திடீரென்று ஒரு நாள் பத்திரிக்கையாளர்களை அழைத்த
கலைஞர் கருணாநிதி, நீதிபதி பால் கமிஷனின் அறிக்கையின் நகலை வெளியிட்டார்.
எம்ஜிஆர் அதிர்ந்து போனார். பின்னர் ஒரு நாள் அப்போது ஐஜியாக இருந்த
கி.ராதாகிருஷ்ணன் என்ற கிராகியை அழைத்து, கருணாநிதியை கைது பண்ணுங்கள்
என்று உத்தரவிடுகிறார். கிராகி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்,
கலவரம் உருவாகும் என்று கூறுகிறார்.
உடனே
எம்ஜிஆர், கலைஞரை கைது செய்தாயிற்று. நீங்கள் சட்டம் ஒழுங்கை
மட்டும் பாருங்கள் என்று அனுப்பி விடுகிறார். சிறைக்கு சென்ற கருணாநிதியை
பார்க்க வந்த, திமுக மூத்த தலைவர்கள், தமிழகம் பற்றி எரிகிறது. எங்கே
பார்த்தாலும் கலவரம். பேருந்துகள் ஓடவில்லை என்று அள்ளி விடுகின்றனர்.
கலைஞர் கருணாநிதியும் குஷியாக இருக்கிறார்.
அப்போதெல்லாம் விசாரணை
கைதிகளுக்கும் சிறை யூனிபார்ம்தான். அதுவும் கட்டம் போட்ட அரைக்கால்
டவுசர். எம்ஜிஆருக்கு கருணாநிதியை சிறை உடையில் பார்க்க வேண்டும் என்று
ஆசை.