வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

2G .. நீதிமன்றத்தில் ஆ.ராசா பதிலடி .. சி பி ஐ வழக்கறிஞர் திணறல்!


ராஜா, ''ஆவணங் களையும், சட்டத்தையும் மட்டும்தான் நான் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல  ;
இதை கேட்டதும் கடும் கோபமடைந்த நீதிபதி, சைனி கூறியதாவது: ; தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலர், கூடு தல் செயலர், சிறப்பு செயலர், உரிமங்கள் வழங்கும் இயக்குனர், துணை இயக்குனர் என அனைவருமே பதிவு செய்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளனர்; அதைதான், ராஜா ஏற்றுள்ளார். அப்படியானால், இந்த கோர்ட், ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்த பின், கோர்ட்டிற்கு வந்து, 'நான் உடன்படவில்லை; வெறும் கையெழுத்துதான் போட்டேன்' என்ற வாய்மொழி சாட்சியை, நம்ப வேண்டுமா?   அரசு செயலர், அமைச்சரவை செயலருக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமைச்சருக்குஅடிமை அல்ல. மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால், அதையாவது, தன் குறிப்பில் பதிவு செய்திருக்க லாமே; அதை, யாரும் தடுக்க போவதில்லையே. நிர்வாக சட்டத்தை நன்கு படித்துவிட்டு இந்த கோர்ட்டிற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், வாதங்களை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நீதிபதியின் கிடுக்கிப் பிடி கேள்விகளால் ஆடிப் போன, சி.பி.ஐ., வழக்கறிஞர், குரோவர் சிறிது நேரம் அமைதி காத்தார். இதன்பின் அவர் கூறியதாவது:

வியாழன், 23 பிப்ரவரி, 2017

நெடுவாசல் ஹைட்ரோ காபன் .. அனுமதி கொடுத்தது மோடி அரசுதான் . இரகசியம் அம்பலம்!


trolljaya2. நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எனப்படும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதை மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தான் அனுமதி தந்தது என்று இன்று காலை முதல் தொடர்ந்து கூறி வருகிறோம்.. ஆனால் செவி சாய்க்க யாருக்கும் மனமில்லை..
இது முற்றிலும் 56 இன்ச் மார்பு கொண்ட மோடி மஸ்தான் வேலை தான் என்பதற்கான ஆதாரம் இது..
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம், அக்டோபர் 15,2015 அன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
Resolution No. O - 190198/22-95-ONG.III
1. On 2nd September, 2015, the Cabinet has approved the Marginal Field Policy (MFP) with the objective to bring marginal fields to the production at the earliest so as to augment the domestic production of oil and gas.

நடிகை பாவனாவுக்கு நடந்தது என்ன? அந்த இரண்டரை மணி நேர நரகம்!


கொச்சி: காரில் தன்னைக் கடத்தியவர்கள் இரண்டரை மணி நேரம் செய்த கொடுமை குறித்து நடிகை பாவனா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த பாவனாவை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளது.   இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை போட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில்,
பாவனாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்கு இரவு 7 மணிக்குக் கிளம்பினார். அவருக்கு காரை வழங்கியது லால் கிரியேஷன்ஸ்.
கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். பயணத்தின்போது கார் ஓட்டுநர் மார்ட்டின் பல எஸ்எம்எஸ்களை யாருக்கோ அனுப்பியுள்ளார். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு உணவு வழங்கும் வேன் ஒன்று பாவனாவின் காரைப் பின்தொடர்ந்துள்ளது.

ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி :அதிமுக தலைவர் (Defacto) டி.டி.வி.தினகரன்!

சட்டமன்றத்தில் கலவரம் செய்து ஆட்சியைக் கலைக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக  பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றதையடுத்து, கட்சியின் துணை பொதுச்செயலாளராக அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை நியமித்தார். அதையொட்டி, டி.டி.வி.தினகரன் இன்று அதிமுக தலைமைக் கழகத்துக்கு பகல் 12 மணிக்கு வந்தபோது அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர்.
பின்னர் அவர், தனது அறைக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அவைத் தலைவர் செங்கோட்டையன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஜெயக்குமார், காமராஜ், திருத்தணி அரி எம்.பி., வேணுகோபால் எம்.பி., மற்றும் மாவட்டச் செயலாளர் கலைராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், கமலகண்ணன், திருச்சி மனோகரன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்.. சிவசேனா, பாஜக வெற்றி!


மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் சிவசேனாவும், பாஜக-வும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. நாட்டிலேயே மிகப் பெரியதும் பொருளாதார வளம் கொண்டதுமான மும்பை நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் சிவசேனா கட்சி முன்னணி பெற்று வெற்றியடைந்துள்ளது. மொத்தமுள்ள 227 இடங்களில் சிவசேனா கட்சி 94 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை 60 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 22 இடங்களில் வென்றுள்ளது. தொடர்ந்து, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி 10 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும், அகில இந்திய மஜ்லிஸ் ஈ இத்தாகதுல் முஸ்லிமீன் கட்சி 4 இடங்களிலும் வென்றுள்ளது.

முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. ஜக்கி வாசுதேவையே.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் என்பது இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முந்தையது. அதாவது பார்ப்பனியப் படையெடுப்புக்கு முந்தையது. பார்ப்பனியப் படையெடுப்பு கிமு 1க்கும் கிபி 1க்கும் இடைப்பட்டதே. சிவன் தான் அந்த மக்கள் வழிபட்ட தெய்வம் என்பது ஆய்வாளர் ஜான் மார்சல் கருத்து. பார்ப்பனிய இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு அது உருவாக்கியதே மும்மூர்த்தி கொள்கை. இந்த மும்மூர்த்திக் கொள்கைப்படி பிரம்மா படைப்பவராகவும், விஷ்ணு காப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் முன்னிறுத்தப்பட்டனர். படைத்தல் காத்தல் போன்ற நல்ல வேலை அவர்களுக்கு. அழித்தல் மட்டும் சிவனுக்கு.
மொகஞ்சதாரோ, ஹரப்பா மக்கள் உருவாக்கிய அணையை உடைத்தே பார்ப்பனியம் அழித்தது என்பது ஆய்வு முடிவு. பார்ப்பனிய சம்பிரதாயங்கள் படி வருண பகவானைத் தடுக்ககூடாது என்பதையும் கவனத்தில் கொள்க.
வடநாட்டு சிவனை அழிப்பவராக மட்டுமே முன்னிறுத்திய பார்ப்பனிய அரசியலுக்கு எதிராக உருவானதே தென்னாட்டு சைவ மரபு. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதிலிருந்து வடநாட்டு சிவனோடு தென்னாட்டவருக்கு தொடர்பில்லை.

யானைகளின் பாதையை ஆக்கிரமித்த ஜக்கி; விரட்டியடிக்கும் அடியாட்கள்!

elepமேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் வலசை பாதையை ஆக்கிரமித்து ஜக்கிவாசுதேவின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது என தொடர்ந்து ஆதாரங்கள் வெளிவந்தபடியே உள்ளன. அதைப் பற்றிய எவ்வித அக்கறையும் கொள்ளாமல் ஜக்கியின் ஆதியோகி சிலை திறப்புக்கு வரவிருக்கிறார் பிரதமர் மோடி. மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் சூழலியலாளர் ராமமூர்த்தி தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்கி ஆக்கிரமித்திருக்கும் கட்டடப் பகுதிகளை கடந்துசெல்கிறது ஒரு யானைக்கூட்டம். எட்டுக்கும் அதிகமான யானைகள் அந்தக் கூட்டத்தில் உள்ளன. அந்த யானைகளை ஜக்கியின் ஆட்கள் விரட்டியடிக்கிறார். உயிர்பயத்தில் அவை வேகமாகக் கடந்து செல்கின்றன.

சூழலியலாளர் ராமமூர்த்தியின் முழுபதிவும் இங்கே:
நமக்கு(மனிதர்களுக்கு)முன்பாகவே இந்த மண்ணில் தோன்றியவை மற்ற உயிரினங்கள் தார்மீக ரீதியில் பார்த்தால் நம்மைவிட அவற்றிற்குதான் இந்தபூமியின் மீதான உரிமை மிக அதிகம் இதை மனித மனம் ஒத்துக்கொள்ளுமா ?…மற்ற உயிரினங்கள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரிந்திருந்தால் இந்த பூமியில் மனித இனம் பூண்டோடு என்றோ அழிக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை….

ஜெயலலிதாவின் உயில் நாளை வெளியாகிறது? சொத்துக்கள் உரியமுறையில் உறவினர்களிடம்?

அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதாவிற்கு தன் உடன் இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினா்களை பற்றி நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான், ஜெயலலிதா கடந்த பல வருடங்களுக்கு முன்னரே உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த உயில் பத்திரிக்கையாளா் சோ.ராமசாமியிடம் இருந்தது. அவா் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த உயில் ஆடிட்டா் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் சசியின் கூட்டத்தின் ஆட்டத்திற்கு பயந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத்ததாகக்கூறப்படுகிறது. ஜெயலலிதா பிறந்தநாளான நாளை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலா் அந்த உயிலை பத்திரிக்கையாளா்கள் முன்னிலையில் டெல்லியில் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி உயில் வெளியே வரும் பட்சத்தில் போயஸ் கார்டன், கொடாநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவின் பல சொத்துக்கள், அவரது அண்ணன் மகன்தீபக், மற்றும் தீபாவிடம் வந்து சேர உள்ளது. அண்ணா திமுகவினரின் புனிதஸ்தலமாக பார்க்கப்படும் இடம் போயஸ் கார்டன். அந்த புனிதஸ்தலம் தீபா மற்றும் தீபக்கிற்கு கைமாறும்போது அதில் இருந்து சசி மற்றும் அவரது குடும்பத்தினா் தாங்களாகவே வெளியேறுவார்கள்.

நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்!

முன்னாள் முதலமைச்சரான ஒ.பன்னீர் செல்வம் வகித்து வந்த மிக முக்கியமான துறையான நிதித்துறை மற்றும் திட்டம் நிர்வாக சீர்த்திருத்த துறை ஆகியவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒ. பன்னீர் செல்வத்திடத்திடமிருந்து, ஆட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற ஒரு வாரகாலமாக நிதித்துறை அமைச்சகத்தை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் நிதியமைச்சகம் ஜெயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் , நடைபெறும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும் என்பது குறிபிடத்தக்கது.

தீபக் : தினகரனுக்கு தகுதியில்லை; சசிகலா குடும்பத்தினரின் தலைமையை ஏற்கமாட்டேன் !


தீபக்கு என்னப்பா ஆச்சு? உனக்கு என்னப்பா..
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது துணை பொதுச்செயலாளராக அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். அதன்படி இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் தினகரன் துணை பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், ‘’ தினகரனுக்கு தலைமை பொறுப்பு வகிக்க தகுதியில்லை. தினகரன் பொறுப்பேற்கும்போது கட்சியில் மூத்த தலைவர்கள் இல்லை. தினகரன் தலைமையை ஏற்க மாட்டேன். அவரது தலைமையை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். அதிமுக உடையாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதிமுகவுக்கு தலைமை ஏற்க பன்னீர்செல்வத்திற்கு தகுதி உண்டு. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். ஓபிஎஸ் தலைமை ஏற்க தினகரன் ஒத்துக்கொள்வார். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டதுதான் வருத்தம். சகோதரி தீபாவிடம் எந்தவிதமாக கருத்து வேறுபாடும் கிடையாது. அதே சமயம் தீபாவின் அரசியல் ஆர்வத்திற்கு நான் ஆதரவு கிடையாது. சசிகலா என் அம்மா மாதிரி. அவர்களுடன் தான் என்றைக்கும் இருப்பேன். ஆனால், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களின் தலைமையை ஏற்கமாட்டேன்’’என்று தெரிவிதுள்ளார்.

நெடுவாசல் நோக்கி .. ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டதை எதிர்க்கும் பேரணி!

Add caption
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள காவேரி கரையோரக் கிராமம் நெடுவாசல். இங்கு காவரி பாசனத்திலும் ஆழ்குழாய் பாசனத்திலும் நெல், வாழை, கரும்பு, கடலை, தென்னை, பலா போன்ற விவசாயம் செழித்துள்ள கிராமம். இந்த கிராமத்தில் தான் விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கர்நாடக மாஜி பாஜக எம்பியின் ஜெம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பால் கொதிப்படைந்த நெடுவாசல் சுற்றுவட்டார கிராம மக்கள் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மக்கள் போராட்டம், மாணவர் போராட்டம், ஐடி ஊழியர்கள் போராட்டம் என்று தமிழகம் முழுவதும் கிளம்பியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிக்கை கொடுத்ததுடன் நெடுவாசல் கிராமம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். புதன் கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வானக்கன்காடு கிராமத்தில் பாதுகாப்பின்றி எண்ணெய் வெள்யேறும் இடத்தை பார்த்துவிட்டு நெடுவாசல் சென்று கட்சி பாகுபாடின்றி போராடினார்.

கோவையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. Ex கஞ்சாவுக்கு Ex சாயாவுக்கும் வரலாற்று உறவு

டீக்கடை பெஞ்ச் - 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் ஒரு லோக்கல் கிரிமினல் மீது வழக்கு பதியப்படுகிறது...
பின்னர், அவனது மனைவியை அவனே கொலை செய்ததாக ஒரு புகார் மனைவியின் தந்தையால் கொடுக்கப்பட்டு, அது விசாரிக்காமலே நிலுவையில் வைக்கபடுகிறது.. அப்படியே ஒரு 20 வருடம் கழித்து...அதே கிரிமினல் காட்டை அழித்து, யானையின் வழிதடங்களை அழித்து உருவாக்கி இருக்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை தொடங்கி வைக்க நாட்டின் பிரதமரே நேரில் வருகை தருகிறார்... இதுவல்லவோ ஜனநாயகம்...

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) கோவை வருகிறார். தமிழக (பொறுப்பு) கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மனிதர்கள் வசிக்கக்கூடிய 3 கோளங்கள் உட்பட 7 கோளங்கள் கொண்ட புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது


NASA just announced that not one, but seven Earth-sized planets have been found orbiting the habitable or 'temperate zone' of a star just 39 light-years away.
வாஷிங்டன்: நாசா அறிவிக்கும் புதிய தகவல் எதைப்பற்றி என்ற விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலித்த நிலையில், அதற்கான விடையை நீங்களும் தெரிந்து கொள்ளலாம். விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா இன்று ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த நாசா விஞ்ஞானிகள். சூரிய குடும்பத்தில் புதிய 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர். ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளதாகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாசாவின் புதிய அறிவிப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை. இதை பல கோடி பேர் நேரலையில் பார்த்தனர். tamil.oneindia.com/

மாஸ் நடிகர்களுக்கு ரெட் ? மார்க்கெட்டை ஏற்றுவதற்கு பொய்யாக வசூல் கதை விடும் மாஸ் நடிகர்களுக்கு....

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் ரஜினி, விஜய், சூர்யா. இவர்கள் படங்கள் என்றாலே வசூல் பட்டையை கிளப்பும். சமீப காலமாக இவர்களுடைய படங்கள் அனைத்தும் ரூ 100 கோடி, ரூ 200 கோடி என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், உண்மையாகவே கபாலி, பைரவா, சிங்கம்3 ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்திருக்கலாம். படத்தை எடுத்த விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் தானாம், இதனால் இப்படங்களின் நஷ்ட ஈடு சரியாக கொடுக்கவில்லை என்றால் இவர்களுடைய படங்களை இனி புறக்கணிப்போம் என சில விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்களாம். இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. மேலும், ஹீரோக்களின் மார்க்கெட்டை ஏற்றுவதற்காகவே ரூ. 100 கோடி வசூல் எல்லாம் கிளப்பிவிடுவதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்களாம்.

கள்ள ஓட்டு போட செயற்கை விரல் விற்பனை ஜோர்! வடமாநில தேர்தல்களில் செயற்கை விரல்?

fake certificate fake fingers
திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது போல கள்ள ஓட்டு போடுவோர்கள் அவர்களாகவே திருந்தா விட்டால் கள்ள ஓட்டுகளை தவிர்க்க முடியாது. கள்ள ஓட்டுகள் போடுவோரை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கிறது. ஓட்டு போடுவோர்களை அடையாளம் காண விரல்களில் அழியாத மை வைக்கும் நடை முறை ஆண்டு ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இதன் மூலம் ஒருமுறை ஓட்டு போட்டவர்கள் திரும்ப ஓட்டு போட முடியாதபடி கள்ள ஓட்டு போடுவோர்களுக்கு தேர்தல் கமிஷன் செக் வைத்தது. அதையும் முறியடிக்கும் விதமாக சமீபத்தில் வடமாநிலங்களில் நடந்த தேர்தலில்செயற்கை விரல் விற்பனை ஜோராக நடந்துள்ளது. இந்த விரல் ஒரிஜினல் விரல் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விரல் மேல் உறை போன்று அணிந்து கொண்டு திருட்டு ஓட்டு போட்டுள்ளனர். தமிழகம் உட்பட தென் இந்தியாவில் நடக்கவுள்ள தேர்தல் சமயங்களில் இது போன்ற செயற்கை விரல் விற்பனை ஜோராக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. லைவ்டே

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

  லூதியானா மற்றும் நோய்டா, இந்தியா – கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று நள்ளிரவுக்குச் சில மணிநேரங்கள் முன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்காக தொலைக்காட்சியின் தோன்றினார். உயர்மதிப்புக் கொண்ட பணத்தாள்களான 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்பதை அவர் அறிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கும் ”கருப்புப் பணம்” அல்லது கணக்கில் வராத வருமானத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை இது என அவர் தெரிவித்தார். ஆனால், பெரும்பான்மையாக பணப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகமோ திடீரென நின்று போனது. குறிப்பாக தினக்கூலிகளும் ஏழை இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புதன், 22 பிப்ரவரி, 2017

சுப்ரமணியன் சாமி : திமுகதான் முதல் எதிரி ... பாஜக வளரும்வரை அதிமுக...

பாடி லாங்குவேஜ் : அங்கே குனிவு !இங்கே துணிவு!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி இன்று தன் ட்விட்ட கணக்கில், பாஜக தமிழ்நாட்டில் வளரும்வரை அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவு தரும் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த நடிகர் கமல் ஹாஸனை 'முட்டாள்' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்தார். அதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 'பொறுக்கிகள்' என குறிப்பிட்டார். இன்று, சுப்ரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில், திமுகவுக்கு மாற்றாக பாஜக இருக்க வேண்டும். அப்படி சூழ்நிலை ஏற்படும்வரை இந்துத்துவா போராளிகள் அதிமுகவைத்தான் வேறுவழியின்றி ஆதரித்தாக வேண்டும். அதற்கு முன்பாக பாஜக தன்னை மறுசீரமைப்பு செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக வழியாக பாஜக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது என்று பல தரப்பினரும் கூறிவருவதை, சுவாமியின் இந்த ட்வீட் உறுதி செய்வது போல் இருக்கிறது.  tamiloneindia

ஜாக்கி வாசுதேவுக்கு ... விகடன் குமுதம் மற்றும் விபசார ஊடகங்கள்

உனக்கு காடு .. எனக்கு நாடு .. ஊரை அடிச்சு உலைல... 
Karundhel Rajesh ஜக்கி வாசுதேவின் மேல் உள்ள வழக்குகள் பற்றி, அவர் காட்டை அழித்துகொண்டிருப்பது பற்றி, யானைகளின் பாதையை அடியோடு மறித்து ஆசிரமம் கட்டிக்கொண்டிருப்பது பற்றி விகடன், குமுதம் ஆகிய பத்திரிக்கைகளில் விரிவான கட்டுரைகள் வரவேண்டும். இந்தப் பத்திரிக்கைகள்தான் ஜக்கியை வளர்த்துவிட்டன. எழுத்தாளர்கள் சுபா, ஜக்கியை மானே தேனே பொன்மானே என்றெல்லாம் போற்றிப்பாடி இவற்றில்தான் பில்டப் கொடுத்தனர்.
இப்போது இணையமெங்கும் ஜக்கியை எதிர்த்து ஏராளமான நண்பர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர் மேல் உள்ள வழக்குகள் பட்டியலே ஆதாரபூர்வமாக இங்கு உள்ளது. இவற்றையெல்லாம் விகடனும் குமுதமும் விரிவாக அலசி ஆராய்ந்து, ஜக்கியின் விளம்பரங்களை வெளியிடுவதை அடியோடு நிறுத்திவிட்டு, புலனாய்வுக் கட்டுரைகள் வெளியிடவேண்டும். சவுக்கு ஷங்கரின் கட்டுரைகளையேகூட மறுபதிப்பு செய்யலாம். அதேபோல் விஜய்டிவி ஜக்கி பற்றிப் புலனாய்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். ஜக்கியை வளர்த்ததில் விஜய்டிவிக்கும் பெரும்பங்கு உண்டு.

ஜாக்கியிடம் மோடி வருவதால் காடுகள் அழிப்பு .. யானைகள் ஊருக்குள் !கோவை சாடிவயல் முகாமில் அஞ்சி நடுங்கும் கும்கி யானைகள்



ஊருக்குள் புகும் காட்டு யானைகளை காட்டுக்குள் துரத்தவும், அவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் பழக்கப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுபவை கும்கி யானைகள். கோவை சாடிவயல் முகாமில் உள்ள கும்கி யானைகள் காட்டு யானைகளை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக தற்போது பிரதமர் வருகையை முன்னிட்டு பக்கத்தில் உள்ள காடுகள் சுத்தப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்படுவதால் அங்குள்ள காட்டு யானைகள் இங்குள்ள கும்கி யானைகளை கடுமையாகவே மிரட்டிக் கொண்டிருப்பதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான வாளையாறு தொடங்கி, வடமேற்கு எல்லையான சிறுமுகை வரை உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளன. எனவே அந்த மலைக்காடுகளில் இருந்து புறப்படும் யானைகள் இந்த கிராமங்களை ஒரு வழி ஆக்கி விடுகின்றன. இதனால் யானை மனித மோதல்கள் தொடர்ந்து எழுந்தபடி இருக்கின்றன. இதில் மனிதர்கள் உயிரிழப்பு, யானைகள் அழிப்பு தொடர்கிறது.

சசிகலாவை தமிழகத்துக்கு (போயசுக்கு ) கொண்டுவரும் முயற்சியில் சுபிரமணியன் சாமி

எந்த சாமியா இருந்தா என்ன ராசா ? இரண்டுமே ஒண்ணுதாய்ன் 
அ.தி.மு.க.,வின் புதிய கொ.ப.செ.,வாக மாறி இருக்கும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியிடம், இப்போது, சட்ட ஆலோசனைகளைக் கேட்கத் துவங்கி இருக்கிறது, சசிகலா தரப்பு. சிறை மாற்றும் ஆலோசனை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கடும் இம்சைகளை அனுபவித்து வருவதாகவும்; தங்களை அந்த சிறையில் இருந்து மாற்றி தமிழகத்துக்கு கொண்டு செல்லுமாறும், குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து வருகின்றனர். சாமி ஆலோசனை: இந்நிலையில், சசிகலாவை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில், அ.தி.மு.க.,வினர் இறங்கி உள்ளனர்.

திருமாவளவன் : திமுகவின் போராட்டம் நியாயமானது

திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன் பேட்டிபேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன் பேட்டி சேலம்: சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த கருத்தினை அவர் தெரிவித்தார். மேலும் அப்போது திருமாவளவன் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக அல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது.மாலைமலர்

எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று கொலை வழக்குகள் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னையில் திமுக உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளன என அவர் குற்றம்சாட்டினார்.
 திருநாவுக்கரசு காங்கிரசையே கொல்றாரே
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க.,வினர் தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட சட்டசபை தலைவர்கள் பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன. இதனைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை வள்ளலார் நகரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.

அமேரிக்கா .. 3 லட்சம் இந்தியர்கள் வெளியேற்றம்! Donald Trump உத்தரவால் ஒரு கோடி அறுபது லட்சம் வெளிநாட்டவர் ..


வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்குள் வருபவர்களை வெறுக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் 2 புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். விசா காலம் முடிந்தவர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய அமெரிக்கர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்யவும் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. லைவ்டே

அமைச்சருக்கு எதிரான செயலால் கைது நடவடிக்கை - கமல்ஹாசன் ஆவேசம்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்றது. அப்போது மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஏற்று தமிழக அரசு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்க முற்பட்டது. புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.   நிரந்தர சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று புதுக்கோட்டையில் கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்டவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த சம்பவத்தால் அமைச்சர் தரப்பினர் அதிருப்தியில் இருந்தனர்.<இந்நிலையில், கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசு அமைந்ததை ஏற்கமுடியாமல் உள்ள மன உளச்சலை ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள் என்கிற அர்த்தத்தில் கமல்ஹாசல் டுவிட்டரில் பதிவிட்டார்.

திராவிட மொழி ... பிராகி மொழி பலோசிஸ்தான் .. இசையும் திராவிடம்தான்?


பாகிஸ்தானில், குறிப்பாக பலோசிஸ்தானில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்கள் பேசும் திராவிட மொழி ப்ராக்வி. பாகிஸ்தானை தவிர, இரானி பலோசிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும், ட்ர்க்மெனிஸ்தானில் இருக்கும் மார்வ் ஒயாசிஸ் பகுதியிலும் ப்ராக்வி மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர்.
இப்பகுதியில் பேசப்படும் வேறு எந்த மொழியோடும் இந்த ப்ராக்விக்கு தொடர்பு கிடையாது. ஆனால், தென்னிந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளோடு ப்ராக்வி மொழிக்கு தொடர்பு இருக்கிறது. இதைப் போலவே, அண்டை மொழிகளோடு சிறிதும் தொடர்பில்லாத இன்னொரு மொழி, மக்யார். மத்திய ஐரோப்பாவின் ஹங்கேரியில் இந்த மொழி பேசப்படுகிறது. இந்த மக்யார் மொழி, ஹங்கேரியில் இருந்து வெகு தொலையில் இருக்கும் ஃபின்லாந்து நாட்டின் ஃபின்னிஷ் மொழியோடு தொடர்புடையதாக இருக்கிறது.
‘கனாதே ஆஃப் கலத்’ இளவரசு ஆட்சிப்பகுதியாக மாறிய 17 ஆவது நூற்றாண்டின் போதுதான் ப்ராக்வி- மக்கள் இனமாக முதல்முறையாக வரலாற்றில் தோன்றுகிறது.