""ஜெ. உடல்நலன் பற்றிய அறிவிப்பினால் சென்னைக்கு அவசரமாக திரும்பிய கவர்னரை, தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், ஷீலாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்தனர். அந்த சந்திப்பிலேயே, நடந்த வற்றைத் தெரிந்துகொண்டுதான் அப்பல்லோவுக்கே சென்றிருக்கிறார் கவர்னர்.
இந்த நிலையில், 5-ந்தேதி காலையில் ராமமோகனராவை வரவழைத்து விவாதித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், ""ஆளும் கட்சியின் சட்டமன்ற தலைவரை புதிதாக தேர்ந்தெடுத்து இன்றைக்குள் தெரிவிக்க வலியுறுத்துங்கள்'' என தெரிவித்துள்ளார் கவர்னர். இதனையடுத்து 8 மணிக்கு அப்பல்லோ வுக்கு வந்தார் தலைமைச்செயலாளர். அப்போது மருத்துவமனையில் இருந்த டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர், ராமமோகனராவோடு இணைந்துகொள்ள, அவர்கள் சசிகலாவை சந்தித்தனர். அதேசமயம், அமைச்சர்கள் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கவர்னர் அழுத்தமாக சொல்லியனுப்பிய தகவலை சசிகலாவிடம் தெரிவித் தார் தலைமைச்செயலாளர்.










