இந்து நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... நிறுவனத்தின் தலைவர் என் ராம்..
1991 முதல் 2003 வரை இந்துவின் ஆசிரியராக இருந்தவர் என் ரவி என்பது
குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் 2003லிருந்து 2012 வரை முதன்மை
ஆசிரியராகப் பதவி வகித்தார் என் ராம்.
2011-ம் ஆண்டு கஸ்தூரி அண்ட் சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு மற்றும் பதிப்பாளர் என் முரளி மற்றும் நிர்வாக ஆசிரியராக இருந்த
மாலினி பார்த்தசாரதி போன்றோரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கஸ்தூரி
குடும்பத்துக்கு வெளியிலிருந்து முதல் முறையாக ஆசிரியராக சித்தார்த்
வரதராஜனை 2012-ல் நியமித்தார் என் ராம்.
மதிப்பீடுகளைச் சிதைத்தார் சித்தார்த்
ஆனால் ஆசிரியராக சித்தார்த் வரதராஜனின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள்
இந்துவின் பாரம்பரிய மதிப்பீடுகளை குறுகிய காலத்தில் சிதைத்துவிட்டதாகவும்,
அதை மீட்டு மீண்டும் இந்துவை அதன் உயர்ந்த பாரம்பர்ய மதிப்பில் வைக்கவே
இந்த முடிவுகள் என்றும் என் ராம் தெரிவித்துள்ளார்.
Sidhard Varadarajan
சி இ ஓ வாக இருந்த அருண் ஆனந்த்தால், தொழில் முறை உறவுகள்
பாதிக்கப்பட்டதாகவும் என் ராம் குற்றம்சாட்டியுள்ளார்.
செவ்வாய், 22 அக்டோபர், 2013
The Hindu நிறுவனத்தின் தலைவர் என் ராம்.. ஆசிரியர் ரவி! வரதராஜனால் பாரம்பரியங்கள் பாதிக்கப்பட்டதாம் ராம் தெரிவிப்பு
இந்து நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்... நிறுவனத்தின் தலைவர் என் ராம்..
1991 முதல் 2003 வரை இந்துவின் ஆசிரியராக இருந்தவர் என் ரவி என்பது
குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் 2003லிருந்து 2012 வரை முதன்மை
ஆசிரியராகப் பதவி வகித்தார் என் ராம்.
2011-ம் ஆண்டு கஸ்தூரி அண்ட் சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு மற்றும் பதிப்பாளர் என் முரளி மற்றும் நிர்வாக ஆசிரியராக இருந்த
மாலினி பார்த்தசாரதி போன்றோரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கஸ்தூரி
குடும்பத்துக்கு வெளியிலிருந்து முதல் முறையாக ஆசிரியராக சித்தார்த்
வரதராஜனை 2012-ல் நியமித்தார் என் ராம்.
மதிப்பீடுகளைச் சிதைத்தார் சித்தார்த்
ஆனால் ஆசிரியராக சித்தார்த் வரதராஜனின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள்
இந்துவின் பாரம்பரிய மதிப்பீடுகளை குறுகிய காலத்தில் சிதைத்துவிட்டதாகவும்,
அதை மீட்டு மீண்டும் இந்துவை அதன் உயர்ந்த பாரம்பர்ய மதிப்பில் வைக்கவே
இந்த முடிவுகள் என்றும் என் ராம் தெரிவித்துள்ளார்.
Sidhard Varadarajan
சி இ ஓ வாக இருந்த அருண் ஆனந்த்தால், தொழில் முறை உறவுகள்
பாதிக்கப்பட்டதாகவும் என் ராம் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமணம் செய்துகொண்ட தோழிகள் ! பீகாரின் முதல் ஓரின திருமணம் !
PATNA: In probably the first case of same sex marriage in Bihar, two girls ran away from their homes here to get married to each other, a police official said on Monday
இளம்பெண்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பற்றிய
விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். ஆனால், தோழிகள் இருவரும் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு பெண்ணின் தந்தை தனது மகளை அவளது தோழி வீட்டார் கடத்தியதாக அளித்த புகாரைத் தொடர்ந்து தோழிகள் வீட்டை விட்டு வெளியேறியது வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களின் செல்போன் பேச்சுக்களின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்தைப் போலீசார் கண்டறிந்தனர். பீகாரின் முதல் ஓரினச்சேர்க்கைத் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி தம்பதிகளான தோழிகள் பீகாரிலுள்ள ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் எனும் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்பெண்கள் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே சென்று பார்த்த போது, இளம்பெண்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப் பட உள்ள இந்த இளம்பெண்கள், சிறு வயது முதலே தோழிகளாம். ஒன்றாகவே கல்வியும் கற்கச் சென்றுள்ளார்கள். அப்போது உண்டான தீவிர நட்பே அவர்களைத் திருமணம் வரை கொண்டு போய் விட்டுள்ளது.
tamil.oneindia.in
விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். ஆனால், தோழிகள் இருவரும் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு பெண்ணின் தந்தை தனது மகளை அவளது தோழி வீட்டார் கடத்தியதாக அளித்த புகாரைத் தொடர்ந்து தோழிகள் வீட்டை விட்டு வெளியேறியது வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களின் செல்போன் பேச்சுக்களின் அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடத்தைப் போலீசார் கண்டறிந்தனர். பீகாரின் முதல் ஓரினச்சேர்க்கைத் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி தம்பதிகளான தோழிகள் பீகாரிலுள்ள ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் எனும் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்பெண்கள் தங்கி இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே சென்று பார்த்த போது, இளம்பெண்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப் பட உள்ள இந்த இளம்பெண்கள், சிறு வயது முதலே தோழிகளாம். ஒன்றாகவே கல்வியும் கற்கச் சென்றுள்ளார்கள். அப்போது உண்டான தீவிர நட்பே அவர்களைத் திருமணம் வரை கொண்டு போய் விட்டுள்ளது.
tamil.oneindia.in
கலகக்குரல்:தி இந்து எந்தக் கேவலமான எல்லைக்கும் செல்லத் தயங்காது!
மவுண்ட் ரோடு மகா விஷ்ணு ஹிந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து இன்று முதல் (16-09-2013) 'தி இந்து' வெளிவந்திருக்கிறது.44 பக்கங்கள் 4 ரூபாய்.
அதன் ஆங்கிலப் பெயரில் இருந்து,ஜூனியர் விகடன்,ஆனந்த விகடனின் நகலாக இருப்பது வரை விமர்சிக்க எண்ணற்ற செய்திகள் இருக்கிறது.சிறு விமர்சனம் மட்டும் இன்று செய்கிறோம்.
முதல் பக்கத்தில் அதி முக்கியத்துவத்துடன் வெளிவந்த செய்தி இது தான்.
தமிழக சிறைகளில் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தப்படுவதோ கைதிகளிடமிருந்து
செல்போன்,சிம்கார்டுகள் முதலானவை பறிமுதல் செய்யப்படுவதோ புதிதல்ல.எத்தனையோ
முறை நடந்திருக்கிறது.நாளிதழ்களிலும் அது உரிய முறையில் அதற்கான செய்தி
முக்கியத்துவத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.<
ஆனால் இன்று 'தி இந்து' நாளிதழிலும் அப்படியான ஒரு செய்தி புகைப்படங்களுடன்
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் செய்தி என்பதைத் தாண்டி அதி
முக்கியத்துவத்துடன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு அருகில் இரண்டாவது தலைப்புச் செய்தி சிறைத்துறை குறித்த ஒரு செய்தியை,44 பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியிட வேண்டிய அளவுக்கு செய்திக்கான த்குதி உள்ள ஒன்றை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு நிகராக வெளியிட வேண்டிய அவசியம் என்ன..? முருகன் தொடர்புடைய செய்தி என்பதாலும்,கோவை சிறையில் இருக்கும் இஸ்லாமியர் தொடர்புடைய செய்தி என்பதாலும் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் இலாகா இச்செய்தியை வெளியிட்டுத் தன் வன்மத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது. 'தி இந்து' நிருபர் வ.செந்தில்குமார் இதனை ரிப்போர்ட் செய்திருக்கிறார். இன்னும் ஆராய்ந்தால் கீழ்க்கண்ட விஷயம் கூட நிருபருக்குக் கிடைத்திருக்கலாம். காஞ்சி சங்கரராமனை வரதராஜப்பெருமாள் கோவிலின் உள்ளேயே >கொலை செய்த குற்றத்திற்காக அப்புவும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது,சிறையில் இருந்த படியே,அந்தக் கொலையில் நெம்பர் 1 அக்யூஸ்டான சுப்பிரமணி (ஜெயேந்திரன்) உடன் அதிக நேரம் செல்போனில் பேசினார்களா ?
நந்திதா தாஸ் :நான் நடித்த பல படங்கள் இன்னும் வெளிவர முடியல்லையே ?
சென்னை:நான் நடித்த பல படங்கள்
ரிலீஸ் ஆகவில்லை என்றார் நந்திதா
தாஸ்.‘அழகி, ‘கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை
நந்திதா தாஸ். அவர் கூறியதாவது:இந்தி, தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள்
வருகிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்வு
செய்கிறேன். அதனால்தான் நான் நடித்த படங்களின் எண்ணிக்கை மொத்தமே 30
பிளஸ்தான். இதில் சில படங்களின் டிவிடி மட்டுமே என்னிடம் உள்ளது. பல
படங்களின் டிவிடி என்னிடம் கிடையாது, ஏனென்றால் அந்த படங்கள் ரிலீஸ்
செய்யவே முடியவில்லை.
ரிலீஸ் செய்வதற்கான வசதி சம்பந்தப்பட்டவர்களிடம் இல்லையென்ற ஒரு பிரச்னை இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளும் இல்லாமல்போனது.
சினிமாவுலகின்
மார்க்கெட் பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இயக்கிய
‘ஃபிராக் படத்துக்குகூட இந்த பிரச்னையை சந்தித்தேன். இதற்கெல்லாம் ஒரு
தீர்வாகத்தான் திரைப்பட விழாக்கள் அமைந்திருக்கிறது. இதுபோன்ற விழாக்கள்
நடக்கும்போது வெளிவர முடியாமல் முடங்கிகிடக்கும் படங்களை வெளியிட
முடிகிறது. இதுபோன்று நிறைய விழாக்கள் நடத்த வேண்டும். இது இளம்
படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
.tamilmurasu.orgதயாளு அம்மையாரின் சாட்சியத்தை அவரது வீட்டில் வைத்து மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார்
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி
தயாளு அம்மாள் உட்பட 17 பேர் சென்னை பெருநகர நீதிமன்றத்தில் வரும் 28-ந்
தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சரியில்லை என்பதால்
அவரது வீட்டுக்கே சென்று சாட்சியத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய
இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் தொலைக்காட்சி மீது
சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக
கலைஞர் டிவி பங்குதாரரான தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவரை சாட்சியமளிக்க டெல்லி வருமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால் தமது உடல்நிலை சரியில்லை.. கூறி தம்மால் நேரில் ஆஜராக முடியாது என
உச்சநீதிமன்றம் வரை போனார் தயாளு அம்மாள். இதைத் தொடர்ந்து அவரது
உடல்நிலையை பரிசீலிக்க டெல்லி மருத்துவர் குழுவை உச்சநீதிமன்றம்
நியமித்தது.
அக்குழுவும் சென்னை வந்து தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசீலித்து சென்றது.
விரைவில் ஏர்போர்ட்கள் தனியார்வசம்? லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே ,,,,
புதுடில்லி: சென்னை, கோல்கட்டா, ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்திஆகிய விமானங்களை இதுவரை இந்திய விமான நிலைய ஆணையகம் நிர்வகித்து வந்தது. இந்த நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஒப்பந்தம் கோருவது, ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பது, ஒப்படைப்பது ஆகியவற்றுக்கான நடைமுறைகளை உருவாக்கும் பணிகள் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டது. விரைவில், லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், இன்னும் இரண்டொரு மாதத்தில் அமைச்சகம் முடித்து, முறையான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. dinamalar.com
யுக்தா முகி தன் கணவர் மீதே பாலியல் வன்கொடுமை வழக்கு
முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், கணவர் பிரின்ஸ் டுலிக்கும் இடையே
குடும்ப தகராறில் தீர்வு காண மத்தியஸ்தர் ஒருவரை மும்பை ஐகோர்ட்டு நியமித்து உத்தரவிட்டது.
கணவர் மீது புகார்
முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் 2008–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது தம்பதியினர் பிரிந்து வாழ்கிறார்கள்.இந்த நிலையில் கணவர் பிரின்ஸ் டுலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது யுக்தா முகி மும்பை போலீசில் குடும்ப வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் செய்தார். மேலும் பிரின்ஸ் டுலி தன்னை இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நீரா ராடியாவின் டெலிபோன் பேச்சு டேப்புக்கள் சுப்ரமணியம் சுவாமிக்கு தேவையாம் !
ஜெட்
ஏர்வேஸ், எத்தியாட் விமான நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்
குறித்து சுப்ரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து்ளளார். இந்த
வழக்கு விசாரணைக்கு, நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்கள்
தேவைப்படுகின்றன என்று கேட்டு, அதற்கான பதிவுகளை தருமாறு சுப்ரமணியசாமி
சி.பி.ஐ.,க்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், 'இந்த ஆதாரம் வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதால், அதை எனக்கு வழங்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளார்<
கர்நாடகம் :லாரியில் இருந்த 300 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின
கர்நாடக
மாநிலம் மங்களூரில் இருந்து சிமோகாவுக்கு 300 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மங்களூர்–சிமோகா
சாலையில் ஹுலிக்கால் என்ற வனப்பகுதியில் ஹேஸ்கோட் என்ற கிராமம் அருகே
சென்ற போது, லாரியில் இருந்த சிலிண்டர்களில் தீப்பொறி ஏற்பட்டு ஒன்றன் பின்
ஒன்றாக வெடிக்க தொடங்கியது.உடனே
லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் லாரியை நிறுத்தி விட்டு
மலைப்பகுதிக்கு சென்று தப்பி ஒடினர். லாரியில் இருந்த 300 சிலிண்டர்கள்
ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெடித்து சிதறியது, இது அந்த பகுதியில் தொடர்
குண்டு வெடித்தது போன்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதி
மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.இதுபற்றி
தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு
வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் மழையும்
கொட்டியதால் தீவிபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக மங்களூர்–சிமோகா சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது
திங்கள், 21 அக்டோபர், 2013
தமிழகத்தில் மணப்பெண்கள் கிடைப்பதில்லை ! ஆண்கள் கடும் அவஸ்தை ! முதிர் காளைகள் தொகை கூடிவிட்டது !
திருமணம் ஆகாதவனின் அவஸ்தைகள்
இப்பொழுதெல்லாம் ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கல்யாணம் ஆகாத இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான கவுண்ட பெண்களும் படித்து தொலைத்துவிடுகிறார்கள். இந்தப் பெண்களை பெங்களூரிலும், அமெரிக்காவிலும், சென்னையிலும் கம்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருக்கும் சாப்ட்வேர்க்காரர்கள் கட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். மிச்சம் மீதி இருக்கும் பெண்களை இருபது ஏக்கர் தோட்டக்காரன், சொந்தமாக சுல்சர் தறி வைத்திருப்பவன் என்று பணக்காரப் பையன்கள் கட்டிக் கொள்கிறார்கள்.
ஆடவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது. நாற்பது
வயதிலும் தனியாகப் படுத்து பாயை பிறாண்டிக் கொண்டிருக்கும் கவுண்டப்
பையன்களைக் கணக்கெடுத்தால் ஒரு தனி சாதிப்பிரிவே உருவாக்கலாம். அத்தனை
பேச்சிலர்கள். கடந்த இருபது முப்பது வருடங்களாக கவுண்டர் சமுதாயத்தில்
பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. குறையாமல் என்ன செய்யும்?
திருமணம் ஆனவுடன் முதல் குழந்தை பையனாக பிறந்துவிட்டால் போதும். ‘ஒன்றே
போதும்’ என நரம்பைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தப்பித்தவறி முதலில் பெண்
குழந்தை பிறந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்திற்கு பெண் வாரிசு.&
இப்படி ஒவ்வொரு குடும்பமும் அளவோடு நிறுத்திக் கொண்டால் முப்பது
வருடங்களுக்கு முன்பாக பிறந்த ஆண்களுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்?
அதுவும் பத்தாவது படிக்கும் போது காலில் ஆணி விழுந்துவிட்டது,
பன்னிரெண்டாவது பரீட்சை சமயத்தில் அம்மை வந்துவிட்டது என்ற
நொண்டிச்சாக்குகளோடு படிப்பை கைவிட்டவர்கள், ரிக் வண்டிக்கு வேலைக்கு
போனவர்கள், திருப்பூர் பனியன் கம்பெனிக்கு டிரைவராக போனவர்கள் என்ற
வகையறாக்களின் கல்யாணக் கனவெல்லாம் தவிடு பொடிதான். ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் யோக்கியமானவர்களா ?
பிர்லா குழுமத்தின் சேர்மன் குமார மங்கலம் பிர்லா.
நிலக்கரி துறை செயலராக இருந்த பிசி பராக்கைச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து இந்திய ஆட்சிப் பணித்துறை (ஐஏஎஸ்), இந்திய காவல் பணித் துறை (ஐபிஎஸ்), மற்றும் இந்திய வனப் பணித் துறை (ஐஎஃப்-ஒ-எஸ்) பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் சங்கங்கள் போர்க் கொடி தூக்கியிருக்கின்றன.
நேர்மையான அதிகாரிகள், “ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்ற தற்போதைய விதி திருத்தப்பட வேண்டும் என்று மத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஆர் பூஸ் ரெட்டி கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர், மத்திய ஊழியர் மற்றும் பயிற்சித் துறை செயலர், மத்திய அமைச்சரவை செயலர் தேவைப்பட்டால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை கூட சந்தித்து பேசப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு குள்ளநரிக் கொடியவனின் வெளி வராத இரகசியங்கள்-4
இப்படி புலம் பெயந்த தமிழர்களின் மத்தியிலும்.. இலங்கை தமிழர்கள்
மத்தியிலும் அவர் ஏற்படுந்தியிருந்த இந்த நெருக்கமான தொடர்பு பிரபாகரனின்
சந்தேகத்தை கிளறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. மேலும் பிரபாகரனை
தமிழர்களின் தனிப் பெரும் தலைவர் என்றோ.. அல்லது அவரது சொல்லுக்குத்தான்
அனைவரும் கீழ்ப்படிய வேண்டுமென்றோ குமார் பொன்னம்பலம் எந்த
சந்தர்ப்பங்களிலும் கூறியிருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது..
ஒரு உண்மைக்கு ஒரு முகம் மட்டுமே!.. ஆனால் ஒரு பொய்மைக்கோ பல முகங்கள்!..
ஒரு உண்மையை எந்த காலத்தில் எழுதினாலும் அது தன் நிலையை மாற்றிக்
கொள்வதில்லை!.. ஆனால் ஒரு பொய்மையோ காலத்திற்கு காலம் மாறுபட்டு
விடுகிறது!..
ஒரு உண்மை என்றும் தன் நிலை தவறாமல் நிலைத்திருப்பதற்கு காரணம் அது நடந்து
முடிந்த ஒரு காரியத்தை அப்படியே மீண்டும் பிரதிபலிக்கும் ஒரே காரணத்தை
கொண்டிருப்பதால்தான்!..
ஆனால் ஒரு பொய்மையோ அதை முன்னொரு காலத்தில் சொன்னதை போல.. இன்னொரு
காலத்தில் சொல்ல முடியாது.. அதை எப்படியோ மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம்
அதற்கு ஏற்பட்டு விடுகிறது..
இதற்கு காரணம்.. ஒரு உண்மையை மூடி மறைத்து ஒரு பொய்யை சொல்லும் போது.. அது
பொய்யென்று மற்றவர்கள் சந்தேகிக்க முற்படும் சமயங்களில்.. அதை மறைக்க
இன்னொரு பொய்யை சொல்லி நிலைமையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு
விடுகிறது..
அப்படித்தான் புலிகளின் தலைவரால் திட்டமிட்டு செய்யப்பட்ட செல்லக்கிளி
அம்மானின் படுகொலையும் இதே பாணியில்தான் இன்றைய காலம்வரை மூடி
மறைக்கப்பட்டு வந்திருக்கிறது.. ஆனால் எப்படித்தான் செல்லக்கிளி அம்மானின்
படுகொலையை மூடி மறைத்து பல பொய்களை புலிகள் கூறினாலும்.. அந்த பொய்களின்
ஊடாக சில உண்மைகள் கசியத்தான் செய்கிறது..
டெல்லி சட்ட சபைக்கு காங்கிரஸ் ,பாஜக மற்றும் ஆத்மி கட்சியால் மும்முனை போட்டி ! We are no longer spoilers: Kejriwal
ஆம் ஆத்மி கட்சியின் வருகையால் பாஜக தனது வெற்றி வாய்ப்பை இழக்கபோவதாக இப்போதே புலம்ப தொடங்கி விட்டது
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர்
4-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது.>
டெல்லி மாநிலம் உருவான பின்னர் இப்போதுதான் அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா,
ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. எனவே இப்போதே
டெல்லியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா பிரசார குழு கூட்டம் டெல்லியில் கட்சித்தலைவர்
ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி,
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முன்னாள் தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி,
நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு மற்றும் டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர்
விஜய் கோயல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி வேட்பாளராக யாரை முன்னிலைப்படுத்துவது
என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, எந்த
சர்ச்சையிலும் சிக்காத டாக்டர் ஹர்ஷ் வர்தனை முன்னிலைப்படுத்த
விரும்புவதாக தெரிகிறது. அவருக்கே பாரதீய ஜனதா மூத்த தலைவர்களும் ஆதரவாக
உள்ளதாக கூறப்படுகிறது.சேலத்தில் மாபெரும் யோகா திருவிழா!
சேலம்
காந்தி மைதானத்தில் மாபெரும் யோகா திருவிழா நடந்தது. தமிழ்நாடு யோகா
ஸ்போர்ட்ஸ் சாம்பியன்சிப்-2013 போட்டிகளும் நடந்தது. சேலம் மாவட்ட யோகா
வளர்ச்சி கழக மாவட்ட தலைவர் கணபதி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில்
பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளும் ஆர்வமாக யோகா செய்து அனைவரின் புருவத்தையும்
உயர்த்த செய்தனர்.
இளங்கோவன் nakkheeran.in
வேலூர் ஜூ.வி. நிருபர் இறந்தது விபத்தா? சவுக்கு இணையதள எடிட்டர் இப்போது எங்கே?
தமிழக பத்திரிகை உலக சகோதரர் சகோதரி நிருபர்களே,
காணொளி ஊடக சகோதர சகோதரிகளே,
ஜனநாயகத்தின் நான்காவது தூண் நண்பர்களே,
இன்று உங்களிடம் ஒரு துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டு வரும் காலங்களில் பத்திரிகை மற்றும் ஊடக உலகம் மீது கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் விடும் ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு ஜனநாயக அமைப்புக்கள் மூலம் குரல் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்.
கடந்த சில வாரங்களாக பல்வேறு துயர சம்பவங்கள், கொலை முயற்சிகள் பத்திரிகை உலகில் பணியாற்றுபவர்களை குறி வைத்து ஆளும் கட்சி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கூட்டணியுடன் நடை பெறுகிறது என தீவிர சந்தேகம் எழுந்துள்ளது. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்.
கீழ் கண்ட சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவை இல்லை. திட்டமிட்டு அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்திய நிருபர்கள் மீது தாக்குதல் ஏவப்பட்டுள்ளது.
காணொளி ஊடக சகோதர சகோதரிகளே,
ஜனநாயகத்தின் நான்காவது தூண் நண்பர்களே,
இன்று உங்களிடம் ஒரு துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டு வரும் காலங்களில் பத்திரிகை மற்றும் ஊடக உலகம் மீது கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் விடும் ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு ஜனநாயக அமைப்புக்கள் மூலம் குரல் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்.
கடந்த சில வாரங்களாக பல்வேறு துயர சம்பவங்கள், கொலை முயற்சிகள் பத்திரிகை உலகில் பணியாற்றுபவர்களை குறி வைத்து ஆளும் கட்சி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கூட்டணியுடன் நடை பெறுகிறது என தீவிர சந்தேகம் எழுந்துள்ளது. இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும்.
கீழ் கண்ட சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவை இல்லை. திட்டமிட்டு அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்திய நிருபர்கள் மீது தாக்குதல் ஏவப்பட்டுள்ளது.
சம்பவம் #1: வேலூர் ஜூனியர் விகடன் நிருபர் விபத்தில் இறந்தது குறித்து சந்தேகம்
வேலூரில் சனிக்கிழமை மாலை நடந்த சாலை விபத்தில் வாரஇதழ் நிருபராக பணிபுரிந்து வந்த சசிக்குமார் (30) உயிரிழந்தார். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த இவர் ஜூனியர் விகடன் இதழின் வேலூர் மாவட்ட நிருபராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலூர் மாநகராட்சியில் நடந்த ஊழல்களை பற்றி தகவல் கொடுப்பதால் இவருக்கு ஏற்கனவே மிரட்டல்கள் இருந்தன என்று அவர் நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.மிளகாயின் காரத்தன்மை காமத்தை தூண்டுகிறது ! ஒயின் பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது
காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்.மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது. ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொரு ளாகக் கருதப்படுகிறது. ஒயினா னது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.
புரட்சித்தலைவி அம்மா பாலங்கள் பற்றிய அறிவிப்பு: மறு அறிவிப்பு மீண்டும் அறிவிப்பு ! அறிவிப்புகள் மட்டுமே ?
சென்னை: நேற்றையதினம் 181 கோடியில் 16 சாலை மேம்பாலங்களை முதல்வர் ஜெயலலிதா
அறிவித்திருக்கிறார். தற்போது முதல்வர் செய்துள்ள அறிவிப்பு,
இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த அறிவிப்பின் நகலா? புதிய அறிவிப்பா?
என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை...
'புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு என்று அறிக்கை வந்துள்ளதே'.. கருணாநிதி
பதில்!
கேள்வி: ரூ. 181 கோடியில் 16 சாலை மேம் பாலங்கள்: முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு என்று அனைத்து நாளேடுகளிலும் செய்தி
வெளிவந்துள்ளதே?
கருணாநிதி: ஆமாம், இதே முதலமைச்சர் 7-9-2011 அன்று தமிழகச் சட்டப்பேரவையில்
விதி 110ன் கீழ் படித்த அறிக்கையில் ஒரு பத்தி வருமாறு :-
"ரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலங்கள்/கீழ்பாலங்கள் கட்டுவதால் தடையில்லாப்
போக்கு வரத்து உறுதி செய்யப்படுவதுடன், விபத்துகளும் தவிர்க்கப் படும்.
இதனால் பயண நேரமும் வெகுவாகக் குறையும். London: பாலாவின் பரதேசி Vagabond இரண்டு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது
One more feather to the director Bala’s hat. Congratulations Bala and
team. Bala’s Paradesi awarded two by London Film Festival committee. One
award for the Best Cinematography – Vagabond (Paradesi) and another
for Best Costume – Vagabond (Paradesi). Director Bala’s Paradesi film
was created the most expectations among the critics and fans when it is
released. Based on their predictions of the film critics, paradesi film
was nominated in the London Film Festival in 8 categories and paradesi
is the only film from India which nominated in the film festival.சென்னை:லண்டன் திரைப்பட விழாவில், பாலாவின், "பரதேசி' படம், இரண்டு
விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.தேயிலை தொழிலாளர்களின் வாழ்கையை மையமாக வைத்து, தமிழில், இயக்குனர் பாலா இயக்கிய படம் "பரதேசி'. லண்டனில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு, இந்தியாவிலிருந்து, "பரதேசி' படம் மட்டுமே தேர்வாகியிருந்தது. இப்படம், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில், 9 பிரிவுகளில் விருது பெறுவதற்கு, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில், "பரதேசி' படத்திற்கு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது செழியனுக்கும், சிறந்த உடையலங்கார நிபுணர் விருது பூர்ணிமா ராமசாமிக்கும் வழங்க, தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்தகவல், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவின், அதிகாரபூர்வ, "டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது
உலகிலேயே முதல் முறையாக லிங்குசாமி சந்தோஷ் சிவன் சூர்யா will be the first in world to use Red Dragon Camera
Tamil industry becomes the first to shoot a film with ‘Red Dragon
Digital’ Camera in the world. The test shoot of Suriya-Lingusamy’s
untitled project happened at Prasad Studio that was thronged by the most
fascinating engineers of ‘Red Camera’ and ‘Angenieux Lens’. Creating a trenchant mark of technical bonanza in the world of
cinematography, Santhosh Sivan holds a prominent position on the global
maps for being the first Indian Cinematographer to have his name in
American Society of Cinematography. Santosh Sivan, the first cameraman from India to be listed in the prestigious ASC (American Society of Cinematographers)
துப்பாக்கி திரைப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா-லிங்குசாமி ஆகியோரின் திரைப்படத்தில் பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். துப்பாக்கி திரைபப்டத்தின் போது விஜய் சொன்னதால் தான் நடக்கிறதோ என்னவோ, எப்போதாவது தமிழ்த் திரையுலகத்தின் பக்கம் தலைகாட்டும் சந்தோஷ் சிவன் வருடத்திற்கு ஒரு படம் தமிழில் பணியாற்றும் கணக்கில் இந்த வருடம் சூர்யா படத்தில் பணியாற்றுகிறார்.சந்தோஷ் சிவன், சூர்யா, லிங்குசாமி, சமந்தா என பெரிய புள்ளிகள் இணையும் இத்த்ரிஐப்படத்தின் மேலும் ஒரு சிறப்பாக உலகிலேயே முதல் முறையாக ரெட் டிராகன் கேகரா த்ரிஐப்படத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.சமீபத்தில் இந்த கேமராவில் டெஸ்ட் ஷூட் முடித்த சந்தோஷ் சிவன் இந்த கேமரா பற்றிபேசிய போது “ ரெட் டிராகன் கேமரா உலகிலுள்ள நவீன கேமராக்களில் முன்மாதிரியானது.
தர்மகர்த்தாக்கள் மோதலால் பூட்டிய கோவில் ! பூட்டுக்கு மாலை அபிஷேகம் ...
அன்னூர் : கோஷ்டி மோதல் காரணமாக கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் கேட்டின் மீது மாலை அணிவித்து பக்தர்கள் சாமி கும்பிட்டார்கள். கோவை மாவட்டம் அன்னூர் அருகே அ.மேட்டுபாளையத்தில் 150 ஆண்டு பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நடூரை சேர்ந்த ராஜப்பன் தலைமையில் ஒரு பிரிவினரும், மணி பூசாரி தலைமையில் ஒரு பிரிவினரும் செயல்பட்டு வந்தனர்.
கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் ! ரஷ்யாவில் ஒப்பந்தம் ! விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தரவேண்டியதில்லை ?
ராதாபுரம் : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ஏற்கெனவே 2 அணுஉலைகள் உள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 2 அணு உலைகள் அமைக¢கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளார். இதனை கண்டித்து நேற்று இடிந்தகரையில் அணுசக்திக¢கு எதிரான மக¢கள் இயக¢கத்தின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார் பேசுகையில், ‘அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பற்றி எதுவும் இதுவரை எந்த ஒப்பந்தங்களிலும் தெரிவிக¢கப்படவில்லை. ஆனால், விபத்து ஏற்பட்டால் எந்த ஒரு இழப்பீடும் தரவேண்டியதில்லை என்ற ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கையெழுத்திட சென்றுள்ளார். இதனை கண்டிக்கிறோம். மேலும் அணு உலைகள் அமைப் பது தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல, பிரதமரின் ரஷ்ய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உவரி பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.. dinakaran.com
ஷோபன் சாமியார் : இந்தியாவை வல்லரசாக்கவே புதையலை பற்றி கூறினேன் ! அட கருமமே ஏற்கனவே பத்மநாப சாமி கோவிலில் உள்ள தங்கம் போதுமே ! அது மட்டுமா ?
புதுடில்லி : ''தங்கப் புதையலை தேடும் பணியையும், அதற்கான நடவடிக்கையை
எடுத்த என்னையும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர
மோடி, இந்த புதையல் வேட்டையை, சென்னையில் கிண்டலடித்திருந்தார். 'சுவிஸ்
வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு
வருவதற்கு பதிலாக, புதையல் வேட்டையை மத்திய அரசு நடத்துகிறது' என,
கூறியிருந்தார்.மோடி, அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவை, 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, நான், முயற்சிக்கிறேன். இதில், அரசியல் பின்னணி இல்லை,'' என, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறி உள்ளார். 1,000 டன் தங்கம்: உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த சாமியார், சோபன் சர்க்கார். இவர், தற்போதைய உன்னாவ் மாவட்டத்தில் உள்ள, தாண்டியா கெரா உள்ளிட்ட பகுதியை ஆண்ட மன்னர், தன் கனவில் தோன்றியதாகவும், கோட்டைக்கு அருகில், 1,000 டன் தங்கத்தை, புதைத்து வைத்துள்ளதாக, மன்னர், தன் கனவில் கூறியதாகவும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.இவர் தமிழக சட்டசபை கட்டிடத்துக்கு பக்கத்தில் புதையல் இருக்கிறது என்று சொன்னால் கூட அதையும் கூட அப்புறப்படுத்த தயங்கமாட்டார்கள் நம் அறிவாளி அரசியல் வாதிகள்...
குழந்தைகளை அடமானம் வைக்கும் பரிதாபம்! பிழைப்பு தேடி குடும்பத்துடன் வெளிமாநிலம் செல்வோர் !
சேலம் மாவட்டத்தில் இருந்து, பிழைப்பு தேடி, ஆந்திரா மற்றும்
கேரளாவுக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை, பாதுகாப்புக்காகவும், பணத்துக்காகவும் மளிகை கடை, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில், அடமானம் வைப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிற மாநிலங்களுக்கு...:
செல்கின்றனர். முதலில் இங்கிருந்து வெளி மாநிலம் செல்லும் ஏழை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள்,பிறகு ஏன் அவர்கள் குழந்தைகளை அடமானம் வைக்க போகிறார்கள் நீங்களும் ஏன் குழந்தைகளை மீட்க போகிறீர்கள்.
ஞாயிறு, 20 அக்டோபர், 2013
கிளிநொச்சி குழந்தைகள் : எந்தவொரு காரியத்தையும் விமர்சிப்பது சுலபம். அதை நடத்திக் காட்டுவதுதான் கடினம்.
இசைவாணி செல்வகுமார் என்ற 5 வயது சிறுமி, “அப்பா, அப்பா” என்று அழைக்க, குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறார், அந்த 58 வயது மனிதர். இவர், இசைவாணிக்கு மட்டும் அப்பா அல்ல… சுமார் 300 குழந்தைகள் இவரை அப்பா என்று அழைக்கின்றன.
இந்த 300 குழந்தைகளும், இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் பிறந்தவர்கள்தான். ஆனால் அந்த யுத்தத்தின் பின்னணி பற்றிய பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியாது.
யுத்தம் நடந்துகொண்டிருந்த ஒருகாலத்தில், ‘அப்பா’ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுச் செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார் என்பதும் தெரியாது.
அந்த அப்பாதான், விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த பல ராணுவ வெற்றிகளுக்காக பின்னணியில் இயங்கியவர். ஆம், கே.பி. என அறியப்பட்ட செல்வராசா பத்மநாதன்தான் அவர்.
மும்பையில் கடத்தப்பட்ட காதலியின் வாயில் ஆசிட் ! ஆபத்தான கட்டத்தில் பெண் ! காதலன் கைது
In a one-sided love affair, an 18-year old girl became the victim of a brutal acid attack on Saturday,
A resident of Kajupada area, the girl was abducted by Jitendra while she was on her way to college.
Jitendra took the girl to Malad’s Gorai beach where he first assaulted her and then poured acid on her face.
மும்பை தாஹஷர் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரா சக்பால் (வயது 20).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை அவர் காதலிக்க தொடங்கினார். ஆனால், அந்த பெண் ஜிதேந்திராவை காதலிக்க மறுத்து விட்டார்.
இதனால் அவர் அந்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து தொந்தரவு செய்தார். அவரையும், அவரது தந்தைதையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜிதேந்திராவை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் மும்பை புறநகர் பகுதியான கோரை கடற்கரை பகுதியில் அந்த பெண்ணின் வாயில் ஜிதேந்திரா ஆசிட்டை ஊற்றி கடலில் தள்ளினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜிதேந்திராவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
A resident of Kajupada area, the girl was abducted by Jitendra while she was on her way to college.
Jitendra took the girl to Malad’s Gorai beach where he first assaulted her and then poured acid on her face.
மும்பை தாஹஷர் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரா சக்பால் (வயது 20).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை அவர் காதலிக்க தொடங்கினார். ஆனால், அந்த பெண் ஜிதேந்திராவை காதலிக்க மறுத்து விட்டார்.
இதனால் அவர் அந்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து தொந்தரவு செய்தார். அவரையும், அவரது தந்தைதையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜிதேந்திராவை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் மும்பை புறநகர் பகுதியான கோரை கடற்கரை பகுதியில் அந்த பெண்ணின் வாயில் ஜிதேந்திரா ஆசிட்டை ஊற்றி கடலில் தள்ளினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜிதேந்திராவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

