
விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.தேயிலை தொழிலாளர்களின் வாழ்கையை மையமாக வைத்து, தமிழில், இயக்குனர் பாலா இயக்கிய படம் "பரதேசி'. லண்டனில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு, இந்தியாவிலிருந்து, "பரதேசி' படம் மட்டுமே தேர்வாகியிருந்தது. இப்படம், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில், 9 பிரிவுகளில் விருது பெறுவதற்கு, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில், "பரதேசி' படத்திற்கு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது செழியனுக்கும், சிறந்த உடையலங்கார நிபுணர் விருது பூர்ணிமா ராமசாமிக்கும் வழங்க, தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்தகவல், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவின், அதிகாரபூர்வ, "டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக