செவ்வாய், 22 அக்டோபர், 2013

தயாளு அம்மையாரின் சாட்சியத்தை அவரது வீட்டில் வைத்து மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட 17 பேர் சென்னை பெருநகர நீதிமன்றத்தில் வரும் 28-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சரியில்லை என்பதால் அவரது வீட்டுக்கே சென்று சாட்சியத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் கலைஞர் தொலைக்காட்சி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக கலைஞர் டிவி பங்குதாரரான தயாளு அம்மாள் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை சாட்சியமளிக்க டெல்லி வருமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் தமது உடல்நிலை சரியில்லை.. கூறி தம்மால் நேரில் ஆஜராக முடியாது என உச்சநீதிமன்றம் வரை போனார் தயாளு அம்மாள். இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசீலிக்க டெல்லி மருத்துவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. அக்குழுவும் சென்னை வந்து தயாளு அம்மாள் உடல்நிலையை பரிசீலித்து சென்றது. இந்த வழக்கில் சென்னை பெருநகர நீதிமன்ற நீதிபதியிடம் தயாளு சாட்சியம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இதைத் தொடந்து இன்று தயாளு அம்மாள் உட்பட 17 பேர் வரும் 28-ந் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை பெருநகர நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும் தயாளு அம்மாள் உடல்நிலை சரியில்லை என்றும் அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 28-ந் தேதியன்று தயாளுவின் வீட்டு நேரில் சென்று அவரது சாட்சியத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய இருக்கிறார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: