திங்கள், 21 அக்டோபர், 2013

ஷோபன் சாமியார் : இந்தியாவை வல்லரசாக்கவே புதையலை பற்றி கூறினேன் ! அட கருமமே ஏற்கனவே பத்மநாப சாமி கோவிலில் உள்ள தங்கம் போதுமே ! அது மட்டுமா ?

புதுடில்லி : ''தங்கப் புதையலை தேடும் பணியையும், அதற்கான நடவடிக்கையை எடுத்த என்னையும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, இந்த புதையல் வேட்டையை, சென்னையில் கிண்டலடித்திருந்தார். 'சுவிஸ் வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதற்கு பதிலாக, புதையல் வேட்டையை மத்திய அரசு நடத்துகிறது' என, கூறியிருந்தார்.
மோடி, அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவை, 'சூப்பர் பவர்' நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, நான், முயற்சிக்கிறேன். இதில், அரசியல் பின்னணி இல்லை,'' என, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறி உள்ளார். 1,000 டன் தங்கம்: உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த சாமியார், சோபன் சர்க்கார். இவர், தற்போதைய உன்னாவ் மாவட்டத்தில் உள்ள, தாண்டியா கெரா உள்ளிட்ட பகுதியை ஆண்ட மன்னர், தன் கனவில் தோன்றியதாகவும், கோட்டைக்கு அருகில், 1,000 டன் தங்கத்தை, புதைத்து வைத்துள்ளதாக, மன்னர், தன் கனவில் கூறியதாகவும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.இவர் தமிழக சட்டசபை கட்டிடத்துக்கு பக்கத்தில் புதையல் இருக்கிறது என்று சொன்னால் கூட அதையும் கூட அப்புறப்படுத்த தயங்கமாட்டார்கள் நம் அறிவாளி அரசியல் வாதிகள்...
இதையடுத்து, அந்த கோட்டையில் இருப்பதாக கூறப்படும் தங்கப் புதையலை தேடும் வேட்டையை, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர், கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக, சாமியார் ஷோபன் சர்க்கார், மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:புதையல் வேட்டையை அவமதிக்கும் வகையில், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், புதையலை தோண்டுவதற்காக நடவடிக்கையை மேற்கொண்ட என்னையும், அவர் அவமதித்துள்ளார்.


எங்கிருந்து வந்தது பணம்:

சுவிஸ் வங்கிகளில், கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறும் நரேந்திர மோடி, மத்தியில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தபோது, அந்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்காதது ஏன்?நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்காகவும், அதை மக்களிடம் அதிக அளவில் விளம்பரம் செய்வதற்காகவும், பல கோடி ரூபாயை, பா.ஜ., செலவிடுகிறது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இது, கறுப்பு பணமா, வௌளை பணமா என்பதை, மோடி விளக்க வேண்டும். அரசு துறைகளில், கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டும் என, சாம் பிட்ராடோ கூறினார். ஆனால், பா.ஜ.,வும், அப்போதைய தலைவர் வாஜ்பாயும், அதை கடுமையாக எதிர்த்தனர். அது தவறு என, இப்போது, பா.ஜ., ஏற்றுக் கொள்கிறதா?


ஆசிரமத்திற்கு வரலாம்:

புதையலை தேடும் பணியில், எந்த அரசியல் பின்னணியும் இல்லை. இந்தியாவை, பொருளாதார ரீதியாக, சூப்பர் பவர் நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, புதையல் தேடும் பணிக்கான நடவடிக்கையை எடுத்தேன். நரேந்திர மோடிக்கு, அவரின் வாழ்க்கையில், ஏதாவது பிரச்னை இருந்தால், அதை தீர்ப்பதற்காக, என் ஆசிரமத்துக்கு அவர் வரலாம்.இவ்வாறு, அந்த கடிதத்தில் ஷோபன் சர்க்கார் தெரிவித்து உள்ளார். dinamalar.com 

கருத்துகள் இல்லை: