
Santosh Sivan, the first cameraman from India to be listed in the prestigious ASC (American Society of Cinematographers)
துப்பாக்கி திரைப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா-லிங்குசாமி ஆகியோரின் திரைப்படத்தில் பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். துப்பாக்கி திரைபப்டத்தின் போது விஜய் சொன்னதால் தான் நடக்கிறதோ என்னவோ, எப்போதாவது தமிழ்த் திரையுலகத்தின் பக்கம் தலைகாட்டும் சந்தோஷ் சிவன் வருடத்திற்கு ஒரு படம் தமிழில் பணியாற்றும் கணக்கில் இந்த வருடம் சூர்யா படத்தில் பணியாற்றுகிறார்.சந்தோஷ் சிவன், சூர்யா, லிங்குசாமி, சமந்தா என பெரிய புள்ளிகள் இணையும் இத்த்ரிஐப்படத்தின் மேலும் ஒரு சிறப்பாக உலகிலேயே முதல் முறையாக ரெட் டிராகன் கேகரா த்ரிஐப்படத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.சமீபத்தில் இந்த கேமராவில் டெஸ்ட் ஷூட் முடித்த சந்தோஷ் சிவன் இந்த கேமரா பற்றிபேசிய போது “ ரெட் டிராகன் கேமரா உலகிலுள்ள நவீன கேமராக்களில் முன்மாதிரியானது.
நாங்கள் இந்த கேமராவை முதல்முறையாக சூர்யாவை வைத்தும், மாளவிகா ராம்பிரதீப் என்ற பரதநாட்டிய நடன கலைஞரை வைத்தும் நடத்தினோம். படப்பிடிப்பு நவம்பர் 15-ஆம் தேத்நி மும்பையில் துவங்கவிருக்கிறது. இந்திய சினிமா என்றால் பாலிவுட் என்று பலரும் நினைத்து வரும் நிலையில் தென்னிந்திய சினிமா தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பாலிவுட்டை மிஞ்சுகிறது” என்று கூறியிருக்கிறாராம். cinema.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக