சென்னை:நான் நடித்த பல படங்கள்
ரிலீஸ் ஆகவில்லை என்றார் நந்திதா

தாஸ்.‘அழகி, ‘கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை
நந்திதா தாஸ். அவர் கூறியதாவது:இந்தி, தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள்
வருகிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்வு
செய்கிறேன். அதனால்தான் நான் நடித்த படங்களின் எண்ணிக்கை மொத்தமே 30
பிளஸ்தான். இதில் சில படங்களின் டிவிடி மட்டுமே என்னிடம் உள்ளது. பல
படங்களின் டிவிடி என்னிடம் கிடையாது, ஏனென்றால் அந்த படங்கள் ரிலீஸ்
செய்யவே முடியவில்லை.
ரிலீஸ் செய்வதற்கான வசதி சம்பந்தப்பட்டவர்களிடம் இல்லையென்ற ஒரு பிரச்னை இருந்தாலும் அதற்கான வாய்ப்புகளும் இல்லாமல்போனது.
சினிமாவுலகின்
மார்க்கெட் பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் இயக்கிய
‘ஃபிராக் படத்துக்குகூட இந்த பிரச்னையை சந்தித்தேன். இதற்கெல்லாம் ஒரு
தீர்வாகத்தான் திரைப்பட விழாக்கள் அமைந்திருக்கிறது. இதுபோன்ற விழாக்கள்
நடக்கும்போது வெளிவர முடியாமல் முடங்கிகிடக்கும் படங்களை வெளியிட
முடிகிறது. இதுபோன்று நிறைய விழாக்கள் நடத்த வேண்டும். இது இளம்
படைப்பாளிகளுக்கும், ரசிகர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக