தன் வீட்டுத் திருமண அழைப்பிதழில் சாதி பெயர் இருந்தால் ேராசிரியர் சுப.வீரபாண்டியன் சவால் விடுத்துள்ளார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் பற்றிய சில
தகவல்கள், சமூக வலைதளங்களில் இரு நாள்களுக்கு முன் பரவியது. `பெரியார்
கொள்கை, சாதி மறுப்பு பற்றியெல்லாம் பேசிவரும் சுப.வீரபாண்டியன், தன் சொந்த
பிள்ளைகளைத் தன் சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொடுத்தார். அவரின் அண்ணன்
வீட்டுத் திருமண அழைப்பிதழில், சுப.வீரபாண்டியன் பெயருடன் சாதிப் பெயரும்
சேர்த்து அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சாதி சார்ந்த சங்கத்தில் இவர்
உறுப்பினராக இருந்தார்' எனச் சரமாரியான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில்
வைக்கப்பட்டிருந்தன.
சுப.வீரபாண்டியன் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியதன் பின்னைி என்ன
இந்த வீடியோவுக்கு
பதிலளிக்கும் வகையில், எஸ்.வி.சேகருக்கு சுப.வீரபாண்டியன் கடிதம்
எழுதியிருக்கிறார். அதில், `விவாத நிகழ்ச்சியில் உங்கள் சாதியைப் பற்றி
மதிமாறன் இழிவுபடுத்திப் பேசியது என்னவென விளக்க முடியுமா?' எனக்
கேட்டுள்ளார்.
புதன், 5 ஜூலை, 2017
கொடுமையான சர்வாதிகாரம்.தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது...
Damodaran:
ஏமாளி தமிழ் மக்களே !....
கச்சத்தீவை தானம் கொடுத்தது.. காவேரியை பறித்துக்கொண்டது... முல்லை பெரியார்..பாலாறு...கொசஸ்தலை ஆறுகலை பாலைவனம் ஆக்குவது
அணுமின் நிலையங்கள் போன்ற உயிர் அழிப்பு தொழிற்சாலைகளை இங்கே தொடங்குவது...
மீனவர்களை சிறைபிடித்து கொடுமைப்படுத்துவது
நீட் தேர்வு...சி பி எஸ் சி பாடத்திட்டம்...போன்ற செயல்களின் ...
நோக்கம் என்ன ? அதன் பின்புல இரகசியம் என்ன ? ஒரே ஒரு நோக்கம் தான்.. தமிழர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டு...
தமிழ் நாட்டின் காடுகள்..மண்ணுக்கடியில் உள்ள விலை மதிப்பற்ற பலப்பல கனிமங்கள் முதலான இயற்கை செல்வங்களை...
அம்பானி அதானி போன்றோருக்கும் அந்நிய நாட்டு கார்போரேட்டுகளுக்கும் விற்று பல கோடி கோடிபணத்தை அள்ளுவதே பாஜக அரசின் நோக்கம் ...
அதோடு தமிழர்களை நிலமற்ற ஏழை கூலித்தொழிலாகளாக்கி ...
படிக்கவும் விடாமல் அடிமைப்படுத்துவது ... அவர்களது மொழி இன அடையாளங்களை அழிப்பது ஒன்றே மத்திய அரசின் நோக்கம்..
வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வாழலாம்...
ஏழை தமிழர்கள் இந்தியாவில் கடைநிலை கொத்தடிமைகளாக காலம் தள்ளலாம்.

செவ்வாய், 4 ஜூலை, 2017
பசுமை தீர்ப்பாயம் மீது மத்திய அரசின் அடுத்த தாக்குதல்
Gajalakshmi : டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து வரும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர், தலைவர் நியமனத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம், 2010 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை அமர்வு டில்லியிலும் மண்டல அமர்வுகள் சென்னை உட்பட நாட்டின் நான்கு இடங்களிலும் உள்ளன. இத்துடன் சிம்லா, ஷில்லாங், ஜோத்பூர் மற்றும் கொச்சியிலும் சர்க்கியூட் அமர்வுகள் உள்ளன. இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவைகளை நிறுத்தி வைப்பது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை இந்த தீர்ப்பாயத்தால மேற்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
உச்ச நீதிமன்றம்... உரிமைகள் மறுப்பு நீதிமன்றம்.....
எந்த வழக்கைப் போட்டாலும் முதல் விசாரணையிலேயே தள்ளுபடி மட்டும் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று எதற்கு?
மக்களின் உழைப்பு, பணம், நேரம் மட்டுமில்லாது நீதிபதிகளாகிய உங்களின் நேரத்தையும், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களின் உழைப்பையும், அரசு நிதியையும் இங்ஙனம் வீண்டிப்பதற்கு பதிலாக, அதனை 'உரிமைகள் மறுப்பு மன்றம்' என்று அறிவித்து விட்டால், மக்கள் வெட்டியாக நீதிமன்றங்களை நம்பிக் கொண்டு வாழ்க்கையை விரயமாக்காமல் அவரவர் வேலையை பார்ப்பார்கள் அல்லவா?
இதில் வழக்கறிஞர்களாக வழக்கைத் தொடுத்து, அது தள்ளுபடியாகி கட்சிக்காரர்களிடம் திட்டுவாங்காமல், சோற்றிற்கு திண்டாடாமல், நாங்களாவது கூலி வேலைப் பார்த்து சுயமரியாதையுடன் வாழ்வோம்!

ரஜினி மகள் சவுந்தர்யா மணமுறிவு ... நீதிமன்றம் வழங்கியது
நடிகர் ரஜினிகாந்தின் மகள்
சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து விவாகரத்து பெற முடிவு செய்தனர். இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு கடந்த ஜூன் 23-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
துரைமுருகன்: விட்டால் அதிமுக வேட்டி கட்டிட்டு வந்துடுவீங்க போல இருக்கு...

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம்.வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “திமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் தரப்பில் இருந்து விழுந்து விழுந்து கவனிப்பதை பற்றி நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன் அல்லவா?இதுவும் கூட அதன் ஃபாலோ அப்தான்.
சட்டமன்றத்தில் மதுராந்தகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசும் போது, ‘மாண்புமிகு அம்மா அவர்களின்... என்று தன் பேச்சைத் தொடங்கி இருக்கிறார். இதைக் கேட்டு திமுகவினர் அதிர்ந்துவிட்டார்களாம். அதிமுகவினரும் இதை வியப்போடு பார்த்திருக்கிறார்கள்.
பேரவை முடிந்ததும் புகழேந்தியை அழைத்த துரைமுருகன், ‘என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. அம்மான்னு பேசுறீங்க? விட்டால் அதிமுக வேட்டி கட்டிட்டு வந்துடுவீங்க போல இருக்கு...’ என கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு புகழேந்தி, ‘நான் எங்க அம்மாவை சொன்னேன் அண்ணே.. நீங்க ஏன் தப்பா நினைச்சீங்க..?’ என கேட்டாராம். டென்ஷன் ஆன துரைமுருகன், ‘ஆமாய்யா.. உங்க அம்மா இந்திய நாட்டு ஜனாதிபதி…. நீ அம்மான்னு சொன்னால் எல்லோரும் உங்க அம்மாவைத்தான் நினைப்பாங்க பாரு...’ என்று கடுப்படித்திருக்கிறார்.
ராஜீவ் கொலையை வைத்து 25 ஆண்டுகள் அரசியல் செய்த அதிமுக ..
ராஜீவ் காந்தியை கொல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப் பயல்களே!!அதெல்லாம் யாரால்? .
எதிரொலி :யாரு தமிழன் ? யாரு "இனத்துரோகி " ?
கலைஞரை அப்படி சொல்ல உனக்கென்னடா யோக்கியதை இருக்கு?
பெரியாரியவாதியாக சொல்லிக்கொண்டு, கலைஞரை "இனத்துரோகி" என்று சொல்லிக்கொண்டு திரியும் சூத்திர முண்டங்களுக்கே இந்த பதிவு.
ஊரான் பிள்ளையை பெற்றவர்கள் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பிடித்துப்போய் போரில் கொன்று குவித்தாரே பிரபாகரன் அவரை "பிள்ளை பிடி பிரபாகரன்" என்று ஈழத்தமிழர்கள் சொல்வதுபோல நாமும் சொல்லலாமா?
அதென்னடா "இனத்துரோகி"? இதில் இருக்கும் இனம் என்கிற சொல் யாரைக் குறிக்கிறது என்று உங்களால் தெளிவாக சொல்ல முடியுமா?
உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களா, அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களும் அவர்களுக்கு ஏவல் செய்த ரவுடிகளும் மட்டுமே உங்கள் பார்வையின்படி தமிழ் இனமா?
இலங்கையில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தமிழனான மலையகத் தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தெரியுமா?
அந்த மலையகத்தமிழன் என்றாவது பிரபாகரனை ஏற்றானா?
2009இல் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது பிரதான மலையகத் தமிழ் கட்சிகள் இலங்கை அரசில், அமைச்சரவையில் இருந்தன என்று உங்களுக்குத்தெரியுமா?

BJP இல கணேசன், ஹெச் ராஜா, பொன் ராதா, நிர்மலா சீதாராமன், தமிழிசை உளறுவது..
ravichandaran.rathinavelu:
இல
கணேசன், ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், தமிழிசை
இவர்கள் தினம் ஒன்று உளறுவதும் பின்பு வாங்கிக் கட்டிக் கொள்வதும்
வாடிக்கையாகி விட்டது...
பதவிக்காகவவும் பணத்துக்காகவும் கோமாளி தலைமையை அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்வது இவர்களின் வேலையாகி விட்டது...
இவர்கள் ஒன்றும் மனதுக்கு பிடித்து அந்த கமெண்ட்களை வீசுவதாக தெரியவில்லை..(ராஜாவைத்தவிர).< குழப்பமான மற்றும் அவசரபுத்தி கொண்ட தலைமையின் கருத்துகளின் மொழி பெயர்ப்பாளர்கள்தான் இவர்கள்..
பதவிக்காக, அழுது நடித்த அதிமுக அமைச்சர்களைப்போன்ற சராசரி மனிதர்கள்தான்...
நான் இவர்களுக்கு குடை பிடிக்கவில்லை. அதே சமயம் அவர்கள் நீங்க திட்டுற அளவு ஒர்த் இல்லாத மனிதர்கள்..
ஒரு சேம்பிளுக்கு நிர்மலா சீதாராமன் கூறியதை எடுப்போம்.."வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை".. ஆக இவருக்கு தெரிந்திருக்கிறது... தங்கள் தலைமை வீட்டில் சாப்பிடுவதைதவிர அனைத்து விஷயங்களிலும் இந்திய மனிதர்களின் வாழ்க்கையை இறுக்கி இருக்கிறது என்று. . அங்கு எதிர்வினைகாட்டினால் ஓசியில அமைச்சர் பதவி கிடைக்குமா??
அதான் இங்க வந்து சொல்லுது...
இல கணேசன் மீத்தேன் பிரச்சனையில் "தேசத்திற்காக ஒரு மாநிலத்தை விட்டுகொடுக்கலாம்" என்று கூறியதிலும் தங்களது தலைமையின் சாடிஸ்ட் குணமான உண்மை வெளிப்பட்டிருக்கிறது.

நடராஜன் :ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை வீட்டுக்காவலில் வைத்திருந்தார் ....மறுக்கிறார் பன்னீர்
Kalai Mathi
சென்னை: ஜெயலலிதா தன்னை வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியிருப்பது வடிகட்டிய பொய் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் நடராஜன் கூறியிருப்பது வடிகட்டிய பொய் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, பூனாட்சி, மருத ராஜா எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினவேலு உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
மஞ்சள் : சாதிய சமூகம் தான் மலம் அள்ளும் தொழிலை மனிதர்களைக் கொண்டு இன்னும் ..
Meena Somu : மஞ்சள்.
வெள்ளியன்று காமராஜர் அரங்கம் நிரம்பி வழிந்தது, அதில் 80 % மேல் இளைஞர்கள் கூட்டம்.
நான் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து... இத்தனை கூட்டமா என ஆச்சர்யத்துடன் கேட்டேன். திருமா வருவதால் இருக்கலாம் என தோழி விளக்கம் சொன்னார். இருந்தாலும் நீலம் அமைப்பும், ஜெய்பீம் அமைப்பும் செய்த விளம்பரமும் காரணம் என்றார். கூட்டம் கூடியிருந்தது பெரிதில்லை, ஆனால் இப்படியொரு சமூக நாடகத்தினை முழுமையாக 2.30மணி நேரம் பார்த்ததோடு விசில், கைத்தட்டல், கோஷம் என அதிர வைத்தது பார்த்து மனசு சந்தோசப்பட்டது. ஆமாம் கையால் மலமள்ளும் கேடுகெட்ட சமூகத்தை விமர்சிக்கும் நாடகத்தில், ஜாதி கட்டமைப்பை காட்டமாக விமர்சிக்கும் இடமெல்லாம் ஆமோதிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது... இளைய தலைமுறையில் மாற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கை வந்தது.
கையால் மலம் அள்ளும் நிலையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டு அரசாங்கம், அப்படிப்பட்ட நிலையே இல்லை என உச்சநீதிமன்றத்தில் பொய் சொல்கிறது.
ஸ்டாலின் மருத்துவ மனையில் ... கண் புரை சிகிச்சை!
மின்னம்பலம் : திமுக
செயல்தலைவர் ஸ்டாலினுக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சென்னை
நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கண் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, சட்டமன்றக் கூட்டத்தொடர், ஏரி தூர்வாருதல் என்று பரபரப்பாக இயங்கி வருகிறார். கடந்த சில நாட்களாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த ஸ்டாலின் இன்று ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த சில நாட்களாக ஸ்டாலினுக்கு கண்ணில் பிரச்னை இருந்து வந்துள்ளது.

திங்கள், 3 ஜூலை, 2017
கோடநாடு எஸ்டேட் ஊழியர் திடீர் தற்கொலை!
கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்பரேட்டராக இருந்த தினேஷ்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினேஷ்குமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தவர். இவர் கடந்த வாரம் தனது இரு கண்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதன் காரணமாக கடந்த மூன்று தினங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மனம் நொந்து அவர் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில், தனது லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோத்தகிரி காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா, “தற்கொலை செய்துகொண்ட தினேஷ்குமார் என்பவருக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனவும், கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
ஜி எஸ் டி.. தமிழகத்தின் 1050 திரையரங்குகளும் வெறிச்சோடின...
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது சினிமாவுக்கு மட்டும் இரட்டை வரி. மொத்தம் 58 சதவீதம் வரி. இதனால் சினிமா கட்டணம் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
காங்கேயம் மாடுகள் ரூ.48 லட்சத்துக்கு விற்பனை!

மின்னம்பலம் :காங்கேயம் தாலுகாவில் நடைபெற்ற சந்தையில் காங்கேயம் மாடுகள் ரூ. 48 லட்சத்திற்கு விற்பனையாகின.
தமிழகத்தின் காங்கேயம் மாடுகள் விவசாயம் மற்றும் பாரம் இழுக்கப் பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகள் இந்த மாட்டினம் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கேயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளைக் கொண்டு வந்தனர்.

கதிரமங்கலத்தில் பொதுமக்கள் மீது தடியடி
மின்னம்பலம் : கதிராமங்கலத்தில் பொதுமக்கள் வன்முறையில்
ஈடுபட்டதால் அவர்கள்மீது தடியடி தாக்குதல் நடைபெற்றது என்று இன்று நடைபெற்ற
சட்டசபை கூட்டத்தில் முதல்வர் விளக்கம் கூறினார்.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று ஜூலை 3ஆம் தேதி மீண்டும் கூடியது. இன்று காலை கேள்வி நேரத்தின்போது, கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாக இன்று சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்ப பெற வேண்டும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோவி. செழியன் கூறினார்.
அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறுகையில், கதிராமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக ஓ.என்.ஜி.சி. பணியாளர்கள் கொண்டுவந்த உபகரணங்களைப் பார்த்து எண்ணெய் எடுப்பதற்காகத்தான் அவர்கள் வந்ததாக பொதுமக்கள் நினைத்து அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மீது வன்முறை தாக்குதலை பொதுமக்களே நடத்தினர். வைக்கோல்களைத் தீ வைத்து எரித்தும், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் கூட்டத்தை கலைப்பதற்காக மென்மையான தடியடி மட்டுமே நடத்தப்பட்டது. அதையடுத்து, கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி நிலவி வருகிறது என்று கூறினார்.

ஞாயிறு, 2 ஜூலை, 2017
அடாவடி ராணி நிர்மலா சீதாராமன் ! ஜெனிடிக்கல் மிஸ்டேக். ஜீன்களில் எப்போதும் இருக்கிற திமிர்.
trollmafia2
நாச்சியாள் சுகந்திநிர்மலா சீத்தாராமன் எப்போதும் ஒரு அதீத ஆணவத்துடனும் திமிருடனும் தான் மக்களை அணுகியிருக்கிறார். தந்தி டிவி பேட்டியில் ரங்கராஜ் பாண்டேவை நீ வாயை மூடு என்று சொல்லாத குறையாக பேசியிருப்பார். பாண்டே அங்கு கொஞ்சமடக்கித்தான் வாசித்திருப்பார். எப்போதும் முகத்தில் அடித்தற்போல் தான் பதில்சொல்கிறார்.
அவர் ஒரு அரசனின் மகளாகப் பிறந்து, அரசவைக்கு அலங்கரித்து வரும் ராணியின் மனோபாவத்திலேயே வருகிறார் என்பதை விட, எனக்கு எல்லாம் தெரியும். ஏனென்றால் நாங்கள் தான் இந்த தேசத்தை, அகண்ட பாரதத்தை ஆண்டுகொண்டு இருக்கிறோம் என்கிற இறுமாப்பு அவரிடம் நன்கு தெரியும். இந்த திமிரெல்லாம் ஒரே இரவில் வருவது அல்ல. அது ஜெனிடிக்கல் மிஸ்டேக். ஜீன்களில் எப்போதும் இருக்கிற திமிர்.
அவர் மக்களாட்சி நடப்பதாகவே நினைப்பதில்லை. அதனால் அவர் பதிலில்
எப்போதும் பயங்கர அடாவடித்தனம் தெரியும். எதிரே இருப்பவனிடம் உனக்கு என்ன
தெரியும் என்கிற மனோபாவம் அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரியும்.
இதற்கு முன்பு அரசியலில் இருந்த பெண் தலைவர்கள் யாரும் நிர்மலா அளவுக்கு எப்போதும் திமிருடனும்அடாவடித்தனத்துடனும் இருந்தது இல்லை. இவருடைய பேச்சு ஜெ. மம்தா எல்லாருக்கும் சவால் விடுவது போல் இருக்கிறது.
இதற்கு முன்பு அரசியலில் இருந்த பெண் தலைவர்கள் யாரும் நிர்மலா அளவுக்கு எப்போதும் திமிருடனும்அடாவடித்தனத்துடனும் இருந்தது இல்லை. இவருடைய பேச்சு ஜெ. மம்தா எல்லாருக்கும் சவால் விடுவது போல் இருக்கிறது.
கதிராமங்கலம் போராட்ட குழு சென்னையில் முற்றுகை? போலீஸ் குவிப்பு
சென்னை: கதிராமங்கலம் மக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக வெளியான தகவலையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பழனிசாமி இல்லம் மற்றும் ஆளுநர் மாளிகையிலும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் இயற்கை மற்றும் எரிவாயுக் கழகம், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்துள்ளது. விளை நிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து கதிராமங்கலம் கிராமத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கதிராமங்கலம் மக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக வெளியான தகவல் காரணமாக தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் வீடு, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தினமணி
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், வசதியானவர்களுக்காகவும் பாஜகவினர் போராடுகின்றனர்: மீராகுமார் பேச்சு
பாஜகவினர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், வசதியானவர்களுக்காகவும் போராடுகின்றனர் என்று குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் கூறியுள்ளார். காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களை சந்தித்து புதுச்சேரியில் மீரா குமார் இன்று ஆதரவு திரட்டினார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காகவும், மதச் சார்பின்மை, மற்றும் கருத்து சுதந்திரத்திற்காகவும் எனக்கு வாக்களிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கும் , எனக்கும் இடையிலான மோதல் கொள்கை ரீதியான போராட்டமாக கருதுகிறேன்.
உபி.. அத்திமரங்கள் சகுனத்தடையாம் உடனே வெட்ட முதல்வர் ஆணை!
உத்தரப்பிரதேசத்தில்
இருக்கும் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை அகற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிவ பக்தர்களால் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை நடத்தப்படும். அதையடுத்து, நடப்பாண்டு யாத்திரைக்கான ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு செய்து வருகிறது. இந்நிலையில், இந்த யாத்திரையின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் கடந்த ஜூன் 30ஆம் தேதி பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தார்.
அந்த அறிக்கையில், ‘கன்வார் யாத்திரைக்குச் செல்லும் வழியெங்கும் அத்தி மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. விரதம் இருந்து புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுனமாகும்.
மூவாயிரம் தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த இலங்கை! நேற்று நடந்த சம்பவம்!

மின்னம்பலம் : கச்சத்தீவு
அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்
பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் நேற்று ஜூலை 1ஆம்
தேதி இரவு நடைபெற்றுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட படகுகளில் 3,000 தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்த விசைப் படகுகள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, அங்கே 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களைப் போகச் சொல்லியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், சில இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களைத் தாக்கியதோடு அவர்களுடைய வலைகளை அறுத்துள்ளனர். மேலும், கற்களைக்கொண்டு மீனவர்களைத் தாக்கியுள்ளனர்.

ஜி.எஸ்.டி.: தோசைக்கு பதிலாக, பீட்சாவை உண்ணச்சொல்கிறது அரசு!
சங்கர் குமார்:
ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி இன்று நிறைய எனக்கு எழுந்த
சந்தேகம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது மறைமுகமாக கார்ப்பரேட் கம்பெனிகளை
வாழவைப்பது.சிறு தொழில்களை,சிறு வணிகத்தை அழிப்பது.வெளிநாட்டினரின்
பார்வைக்கு இந்தியா ஏழை தேசமல்ல, அது ஒரு வளர்ந்து வரும் கார்ப்பரேட் தேசம்
என காண்பிக்க நினைக்கும் பொய் தோற்றம். எனக்கு எழுந்த கேள்விகள் இவை.படித்தேன்.தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறையில் விவரமாக ஜிஎஸ்டி பற்றி பேசியதைக் கேட்டேன்.ஒரு சாமானியனாக
BBC: தமிழகத்தில் 1,000 திரையரங்குகள் மூடப்படுகின்றன.. GST இரட்டை வரி'க்கு எதிர்ப்பு!
ஜுலை மாதம் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியுடன் தமிழக அரசு விதித்துள்ள மாநில வரி என இரட்டை வரிகளை செலுத்தமுடியாத காரணத்தால் தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 3) முதல் 1,000 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும் என்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இரட்டை வரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பை சென்னையில் நடத்திய தமிழ் திரைப்பட வர்த்தக சபையினர், தங்களது அமைப்பு ஜி எஸ் டி வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர். தமிழக அரசின் புதிய வரியின் கீழ், உள்ளூர் நகராட்சிகள் திரையரங்குகளுக்கு வரியை விதிக்க முடியும் என்று முறையை உருவாகியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கதிராமங்கலத்தில் மணியரசன் கைது!
மின்னம்பலம் : கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் அதிரடிப்படை போலீஸார் பொதுமக்கள்மீது தடியடி நடத்தினர். இதனால், கதிராமங்கலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கே சென்ற தமிழ்த் தேதிய பேரியக்கத் தலைவரும் காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெயைப் பூமியில் குழாய் புதைத்து அதன்மூலம் குத்தாலத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எண்ணெய்க் கிணறுகளால் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீரும் விளைநிலங்களும் பாழாகிவிட்டதாக அந்தக் கிராம மக்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
Dr.K.Subashini :பிரான்சில் 578 தமிழ் ஓலைச் சுவடிகள்.. பிரான்சு தேசிய நூலகம் Bibliothèque nationale de France
14 மில்லியன் ஆவணங்களைத் தன்னகத்தே கொண்ட மாபெரும் நூலகம் பிரான்சு தேசிய
நூலகம். உலக மொழிகள் பலவற்றின் பழம் நூல்களும் ஆவணங்களும் இங்கே
பாதுகாக்கப்படுகின்றன. இந்திய மொழிகளில் தமிழ் மொழிகளில் எண்ணிக்கையில்
அதிகம் கொண்ட சேகரத்தைக் கொண்டுள்ளது இந்த நூலகம். இதன் அரிய ஆவணச்
சேகரங்கள் பகுதியில் 578 தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த
தமிழ்ச்சுவடிகளையும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து குறிப்பிட்ட
சில ஓலைச்சுவடிகளையும் கையெழுத்து ஆவணங்களையும் மின்னாக்கம் செய்து வர,
கடந்த வாரம் அதாவது ஜூன் மாதம் 15ம் தேதி பிரான்சின் தலைநகரமான பாரீசுக்கு
நான்கு நாட்கள் சென்றிருந்தேன்.
பிரான்சு தேசிய நூலகம் Bibliothèque nationale de France என்று பிரஞ்சு
மொழியில் அழைக்கப்படுகின்றது. இந்த நூலகத்தின் நான்கு தனிப்பகுதிகள்
பாரீசின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன. நான் தமிழ் மரபு
அறக்கட்டளைக்காக மின்னாக்கம் செய்யச் சென்றிருந்த பகுதி அரிய சுவடிகள்
ஆவணப்பாதுகாப்பகம் அமைந்திருக்கும் ஐந்து மாடிக் கட்டிடம். இங்கு மூன்றாம்
தளத்தில் தான் அரிய ஆவணங்களின் சேகரங்கள் ஆய்வாளர்களின் பார்வைக்கு
வைக்கப்பட்டிருக்கின்றன.
திருமதி. மீரா குமார் ... கலைஞர் சந்திப்பு ... தலையசைத்து ஆதரவை தெரியப்படுத்தினார்
சென்னை: சென்னையில் திமுக, காங்கிரஸ் எம்பி,
எம்எல்ஏக்களை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார் நேற்று
சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளதால்
நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் என்று கூறினார்.
குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் 17 கட்சிகள் ஒருங்கிணைந்து
முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எம்பி, எம்எல்ஏக்களிடம் ஆதரவு
திரட்டி வருகிறார். தமிழகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு கேட்டு
நேற்று சென்னைக்கு வருகை தந்தார். மாலை 5.30மணிக்கு டெல்லியில் இருந்து
விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்
சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், மாலை 7.05 மணிக்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள
ஓட்டலுக்கு வந்தார். அவரை திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி
தலைவருமான மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர்
திருநாவுக்கரசர், கனிமொழி எம்பி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட
பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தங்கபாலு, குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட்
தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோர் பூங்கொத்து
கொடுத்து வரவேற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)