திங்கள், 27 பிப்ரவரி, 2017

பொன்னையன் : ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை வேண்டும் .. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை தாக்கி இருக்கிறார்கள்


ஜெயலலிதவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரை தாக்கியுள்ளனர் என்றும், ஜெயலலிதா சாவு மர்மம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஆதரவாளர்களிடம் பேசிய பொன்னையன், "அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 73 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க எங்களைப் போன்ற முன்னணி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் யாரும் பார்க்க கூடாது என்றார்கள். முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கூட வார்டுக்குள் அனுதிக்கவில்லை.

நெடுவாசல் ... ஜல்லிகட்டு போராட்டத்தை விட வலிமையான போராட்டம் வெடிக்கப்போகிறது?


மின்னம்பலம் :மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் இளைஞர்களின் போராட்டமாக உருமாறியிருக்கிறது. நெடுவாசல் கிராம மக்கள் ஒரு நாள் அடையான உண்ணா விரத போராட்டத்தை நேற்று மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்த 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் யாவரும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர், வியாபாரம் செய்வோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உ.பி தேர்தல் : இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு!


மின்னம்பலம் :உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 11ஆம் துவங்கி வரும் மார்ச் 8ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஏற்கனவே, நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று 52 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தியாவின் மிக பெரிய மாநிலம் என்பதால் உத்தரப்பிரதேச தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் கட்சியான சமாஜ்வாதி மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், இழந்த செல்வாக்கை மீட்க பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒவ்வெரு கட்ட தேர்தல் பிரச்சாரங்களும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முடிந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் கணிசமான வாக்குள் பதிவாகி இருப்பதால். இன்று நடைபெறும் வாக்குப்பதிவிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க....3 நாள் டெல்லி பயணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, 'வர்தா' புயல் மற்றும் வறட்சி நிவாரண நிதி, மின் திட்டங்களுக்கான சிறப்பு நிதி உட்பட, மாநிலத்திற்கான பல்வகை நிதியுதவிகளை உடனே வழங்க வேண்டும் என, வலியுறுத்துவார் என, தெரிகிறது. மேலும், நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, கேட்டுக் கொள்வார் என்று, தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் இரண்டவது முறையக பிரதமரை சந்திக்கிறார். நக்கீரன்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மார்கண்டேய கட்ஜு போர்க்கொடி!

எடப்பாடி பழனிச்சாமி குறித்து கட்ஜூ கருத்து சிறைக் கைதியின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த தமிழர்களே, சிறைக் கைதியாக இருப்பவரின் தலையாட்டி பொம்மை உங்கள் முதல்வராக இருக்கின்றாரே, நீங்கள் எதுவும் செய்ய மாட்டீர்களா? நீங்கள் வீழ்ந்தால் உங்களுடைய மூதாதையருக்கு அவமானம். இப்படி ஒரு முதல்வரை ஏற்றுக்கொண்டது உங்களுக்கு அவமானம் இல்லை? நானும் தமிழன் என்று கர்வமாக கூறி வந்தேனே. இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படி சொல்வேன்.

பன்னீருக்கு கட்சி .. பழனிசாமிக்கு ஆட்சி .. தீபாவுக்கு போயஸ் ...சசிகலாவுக்கு மிடாஸ் ... மக்களுக்கு சாராயம் ?

அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்ற னர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி பதவியில் நியமிக்கப்பட்டது கிடையாது. ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, சிறை செல்லும் நிலை வந்ததும், தன் அக்கா மகன் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்தார்; மறுநாளே, அவரை துணை பொதுச் செயலராக்கினார்.

மீதேன் /ஹைட்ரோகார்பன் பற்றி கமல்ஹாசன் : இயற்கை வளத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைக்கும்!

நடிகர் கமல்ஹாசன்  ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து தன்னுடைய கருத்தை , ஹைட்ரோகார்பன் என்ற மீத்தேன் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.
தமிழகத்தின் பொன் விளையும் பூமியில் மீத்தேன் வாயுவை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து கமல் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘பூமியின் இயற்கை வளத்தையும் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களின் வெற்றிக்கு பின்னால் இயற்கை அழிவு இருப்பதாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இதுபோன்ற திட்டம் தவறானது என்றும், தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். மேலும் இன்றைய மாணவர்கள் விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கு அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மீத்தேன் திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்த புதுச்சேரி முதல்வருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.  லைவ்டே

லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன் மாமி காமிராவும் கையுமாக பெண் போராளி வேஷம்! அதுவும் புரமோஷனாம்..

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. நடிப்பு, இயக்கம், தொகுப்பாளர் என பல துறையிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதிலும் அவர் தொகுத்து வழங்கி வரும் பிரபல நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால் சில இளைஞர்கள் சமூக தளங்களில் இவரை கிண்டல் செய்து வருகின்றனர் அதற்கு காரணமும் அவர் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சிதான். தன்னை எப்போதும் பெண் போராளியாக காட்டிக்கொள்வார். அவர் சமீப காலமாக எது செய்தாலும் தான் நடத்தும் நிகழ்ச்சியின் புரோமோசன் நிகழ்ச்சியாகதான் செய்கிறார்.
தற்போது அவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். No Bail, No Appeal For Rapist என்ற இயக்கத்தில் பல பெண்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்தியா நல்லா இருக்க தமிழ்நாட்டை நாம் தியாகம் செய்ய வேண்டுமாம். ... இல கணேசன் சுத்தி வளைக்காமல் நேரடியாக சொல்கிறார்


கண்ணை விற்று சித்திரம் வாங்க எத்தனிக்கும் பிஜேபி கூட்டம் : இந்தியா நல்லா இருக்க தமிழ்நாட்டை நாம் தியாகம் செய்ய வேண்டுமாம். ஏனெனில் இவர்கள் செய்வது நலத்திட்டமாம். ஏனய்யா எது நலத்திட்டம்? விவசாய நிலங்களை மலடாக்கிடும் இம்முயற்சியா நலத்திட்டம்? உன்னையெல்லாம் இப்படி பேசியபின்னும் சட்டை, வேட்டி கிழியாமல் தமிழகத்தில் உலாவர அனுமதிக்கிறானே தமிழன் அதனால் நீ இதுவும் பேசுவாய் இதற்கு மேலும் பேசுவாய் முகநூல் பதிவு

மீத்தேன் திட்டம் என்றால் என்ன? மிகபெரும் ஆபத்து வருகிறது மக்களே!

மீத்தேன் திட்டம் என்றால் என்ன? மக்களே  நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள்.  அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.
2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் கர்நாடகா மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வரப்பா + மோடி கும்பல் கொள்ளையேதான்

vaa.manikandan நெடுவாசல் கிராமத்தில் (அவருக்கு முன் கனரக தொழில்துறையின் அமைச்சர் பொன்னர் என்பதுவும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.) இவரது சகோதரர்கள்தான் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல.கணேசன் நெடுவாசல்காரர்களைப் பார்த்து ‘தியாகம் செய்’ என்று சொல்வதை இதனோடு இணைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கர்நாடகக்காரரின் நிறுவனம் பிழைக்க, பாஜகக்காரன் சம்பாதிக்க ‘நெடுவாசல்காரன் தியாகம் பண்ணினா தப்பில்லை’ என்று இல.கணேசன் பேசியிருக்கிறார். இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
ஹைட்ரோகார்பனைத் தோண்டியெடுக்க அனுமதியைப் பெற்றிருக்கும் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனமானது கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.மல்லிகார்ஜூனப்பாவுடையது. மத்திய கர்நாடகாவில் மிகப்பெரிய தொழிலதிபர் இவர். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்து பிறகு பாஜகவின் சார்பில் மக்களவை உறுப்பினர் ஆனார். மல்லிகார்ஜுனப்பாவின் மகன் ஜி.எம்.சித்தேஸ்வரா 2016 ஆம் ஆண்டு வரைக்கும் மோடியின் மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்தார்.
நெடுவாசல் (இணைப்பில்)....

நீட் நுழைவுதேர்வு இறுதிநாள் ... மாணவர்கள் எதிர்காலம்? பொய்களை நம்பி திமுகவை தோற்கடித்து ....

Prakash JP மருத்துவ நுழைவு நீட் தேர்வு விண்ணப்பிக்க நாளை மறுநாள் மட்டுமே கடைசி. விண்ணப்பிக்க முடியாதவர்கள் இந்த வருடம் மருத்துவகல்லூரி சேரமுடியாது. தமிழக அரசு நீட்தேரவு இருந்து விலக்கு அளிக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது, ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி இல்லை. தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பின் எதிர்காலம் கேள்வி குறிகளாக உள்ளது.... தமிழகத்தில் அரசாங்க நிர்வாகம் என்று ஒன்று உள்ளதா?? திரும்ப திரும்ப யாரோ பரப்பும் வதந்திகளை ஆராயாமல், அப்படியே நம்பி, திமுகவை தோற்கடித்ததால், இப்போது தமிழகம் படும் பாடு பார்க்க சகிக்கவில்லை.... பொய்களை, அவதூறுகளை பரப்பும் ஊடகங்களை, மீம்ஸ்  பார்வேர்ட் மெசேஜ்களை நம்பாமல், இனியாவது திருந்துங்கள் மக்களே...  முகநூல் பதிவு

தூத்துக்குடி படகு விபத்து 9 பேர் உயிரிழந்தனர் ! 4 பெண்கள் ,2 சிறுவர்கள் உட்பட ..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் 20க்கு மேற்ப்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றர். இந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்செந்தூரில் இருந்து 20க்கு மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது படகானது மணப்பாடு அருகே வந்த போது கவிழ்ந்தது. இதனால் படகில் சென்ற பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். 9 died in Tiruchendur sea as boat capsized near Manappadu கடலில் விழுந்து தத்தளித்த சிறுமி உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் பலியானார்கள். கடலில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கார் ரேஸ் ! சென்னை ECR சாலையில் 9 அதி சொகுசு கார்கள் பறிமுதல்

கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் சென்ற சொகுசுக் கார்களை மடக்கிப்பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்வாக்குமிக்க வாரிசுகள் கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பந்தயத்தில் ஈடுப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த செயல்கள் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை அடுத்த உத்தண்டி அருகே பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ போன்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள 15 சொகுசுக் கார்கள் பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்மந்தப்பட்ட கார்களை பிடிப்பதற்காக சோதனையில் ஈடுபட்டனர். இதில் 9 கார்கள் மட்டுமே பிடிப்பட்டது. மீதமுள்ள 6 கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.
பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது சொகுசுக் கார் ஒன்று விசாரணை செய்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் காலில் ஏற்றியபடி சென்னையை நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாள் ..அதிமுக பொதுக்கூட்டம்...120 பேர் கலந்துகொண்டனர் ..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தச் சொல்லி ஆணையிட்டது அதிமுக தலைமை. கடந்த 24ந் தேதி சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 120 நபர்கள் மட்டுமே கலந்துக்கொண்டார்கள், அதுக்கு இருமடங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று 25-ஆம் தேதி இரவு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் எம்.எல்.ஏ, கே.ஏ. பாண்டியன், காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ,முருகுமாறன், முன்னால் எம்.எல்.ஏ, செல்வி ராமஜெயம் கலந்து கொண்டார்கள். கட்சியினர் 50-க்கும் குறைவாக இருந்ததால் என்ன பேசுவது என்று தெரியாமல் கூட்டத்தை முடித்துக்கொண்டார்கள், விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்ததால் எம்.எல்.ஏ,க்கள் யாரும் வராமல், தெருமுனை பிரசாரம் போல் முடித்துக்கொண்டார்கள்.

வையாபுரி கோபாலசாமி : நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள்!


சசிகலாவை நான் ஆதரிக்கிறேன் என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் 25-வது பொதுக்குழு கூட்டம்
கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற பொதுகூட்டத்தில், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பாழ்படுத்தக் கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மற்றும் பவானி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்டாலின் :பதவியில் இருந்தபோது பன்னீர் வாய் திறக்காதது ஏன் ?

மின்னம்பலம் :ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்தபோது வாய் திறக்காதது ஏன் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரண மடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான 100 கோடி ரூபாயைக் கட்டியாக வேண்டும் என்பதுதான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தியாவின் நீதித் தலைமை அளித்துள்ள இந்தத்தீர்ப்பு நாடு முழுவதும் ஊழல் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவில் அமைந்திருப்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை எதிர் பார்க்கின்ற இளையதலை முறையினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

24 வருட பகை - தொடரும் பழிக்குப்பழி! வெங்கடேச பண்ணையார் கொலையுடன் தொடர்பு...

காவலர் வாகனம் கே.டி.சி. நகரை கடந்தபோது எதிரே வந்து குறுக்காக நின்றது மீன்கள் ஏற்றி செல்லும் வாகனம். முட்டிவிடக்கூடாது என காவலர் வாகனம் நின்றபோது, கணப்பொழுதில் எதிரிலிருந்த வாகனத்திலிருந்து கனத்த அரிவாளுடன் குதித்த சிலர், காவலர் வாகனத்தை உடைத்து அதே வேகத்தில் அரிவாளுடன் மிரண்டா, கோக், பெப்சி குளிர்பானப் பாட்டில்களில் அடைத்து வைத்திருந்த மிளகாய் பொடி கரைசலை போலீஸ் வாகனத்தில் உள்ள காவலர்கள் மற்றும் கைதி சிங்காரத்தின்மீது வீசி கண் எரிச்சலை உண்டாக்கி நிலை குலைய வைத்தனர். அப்போது, சாலையின் மற்றொரு முனையிலிருந்து இன்னோவா, குவாலிஸ், போர்டு உள்ளிட்ட கார்களிலிருந்தும், இரண்டு டூவீலர்களிலிருந்தும் இறங்கியவர்கள் எஸ்.ஐ.வீரபாகுவின் துப்பாக்கியை பறித்து காவல் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, சிங்காரத்தை வெளியில் இழுத்து வெட்டிக் கொன்றனர்

நெல்லையில் போலீஸ் ஜீப்பை வழிமறித்து 24 வருட பகையின் பழிக்குப்பழியாக நடைபெற்ற கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் 4 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் கண்முன்னே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன்(வயது 47) , தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த பசுபதி பாண்டியனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வழக்குகளும், நெல்லை அருகே சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் மதன் உள்பட 3 பேர் கொலை வழக்குகளும் உள்ளன. பழைய காயலில் 2016 மார்ச் 8ஆம் தேதி மகாசிவராத்திரிக்கு மறு நாள் கொலைசெய்யப்பட்ட ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி இரட்டைக் கொலைக்கு காரணமானவராகவும் , 1993ம் வருடத்தில் கொலை செய்யச்செய்யப்பட்ட அசுபதி பண்ணையார் கொலையின் கொலையாளிகளில் ஒருவருமான இந்த சிங்காரம், நேற்று முன்தினம் பகல் 10.30 மணிக்கு நெல்லை கே.டி.சி. நகரில் பட்டப்பகலில் போலீஸ் கண்முன்னே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை பேட்டி

சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக திட்டமிட்டே, வேண்டுமென்றே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பதற்காக, மறைமுகமான சில சதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா மீது எந்த குற்றமும் கிடையாது. இவர்கள்தான் வழக்கு தொடர்ந்து, எப்படியாவது ஜெயலலிதா சிறைக்கு செல்ல வேண்டும். சிறைக்கு சென்றால் அவர் காலக்கட்டத்திலே இறந்துவிடுவார் என்று திட்டமிட்டது. திமுக சதிதான் ஜெயலலிதாவின் இறப்புக்குக் காரணம். இவ்வாறு கூறினார்.

பன்னீரும் பழனியும் பாஜக கண்ட்ரோலில் மகிழ்ச்சி! சு.சாமியும் கோபாலசாமியும் ஒண்ணா தொழில் பண்றாய்ங்க ..

எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பிற்கு முன் நடந்த சில திரைமறைவு பேச்சுவார்த்தைகள் வெளிவந்துள்ளன. சசிகலாவிற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது, அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள தயாரா என ஒரு மத்திய அமைச்சர் பேச்சுக் கொடுக்க, அவர்கள் தான் என்னை வளர்த்துவிட்டவர்கள் அவர்களுக்கு எதிராக எப்படி பேச முடியும் என்ற பன்னீர் செல்வத்தின் பதிலால் திகிலடைந்த மத்திய அமைச்சர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாயகனை வழிக்கு கொண்டுவந்து விட்டாராம். தனக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உண்டு என பன்னீர் தெரிவிக்க, பிறகு என்ன பார்த்துக் கொள்ளலாம் என மெரினா நாடகம் அரங்கேறியுள்ளது. அந்த இரவு சசிகலா எடுத்த அதிரடி ஆக்ஷன் தான் ஆட்டத்தை மாற்றியுள்ளது. பன்னீரின் நடவடிக்கையால் சுதாரித்துக் கொண்ட மன்னார் குடி சொந்தங்கள் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களை கார்டனுக்கு அழைத்து, அங்கேயே வைத்துக் கொண்டது.

இல கணேசன் :நாட்டுக்காக மாநிலத்தை தியாகம் செய்யலாம்! தமிழர்களே தமிழர்களே தியாகம் தியாகம் ..

இதுக்கு மிஞ்சி இவனுக கொள்கையை எப்படி விளக்க முடியும்?
புதுச்சேரி: நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய அளவிலோ எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. எதிர்க்கட்சி என்றால் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது விதியும் அல்ல. நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது. ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர். இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர்.  மாலைமலர்

மார்கண்டேய கட்ஜு வேதனை : பழனிசாமி முதல்வராக இருக்கும்வரை நான் தமிழனாக இருக்க மாட்டேன்

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தன்னை தமிழன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார். இந்த நிலையில் அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான பழனிசாமி முதல்-மந்திரி ஆக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதையும் செய்யாதது குறித்து வருத்தம் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நீங்கள் மாபெரும் சேர, சோழ, பாண்டியர்களின் சந்ததியினர். திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதி ஆகியோரின் பரம்பரையினர். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாமல், இதை (பழனிசாமி முதல்-அமைச்சர் ஆக்கப்பட்டதை) ஏற்றுக்கொண்டது வெட்கமாக இல்லையா?” என கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், “நானும் ஒரு தமிழன் என்று பெருமையுடன் கூறி வந்துள்ளேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் இனி இப்படி சொல்வேன்? வெளிப்படையாகவே சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறவரை நான் தமிழனாக இருக்க மாட்டேன்” எனவும் கூறி உள்ளார்.

தம்பிதுரை -- பன்னீர்செல்வம் - சசிகலா .. ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து பிராண்டும் களப்பணிகள்?


சிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என மூன்று தலைமைகளோடு மூன்றாக பிரிந்து நிற்கிறது அ.தி.மு.க. ஒவ்வொரு தரப்பும் இன்னொரு தரப்பை கடுமையாக விமர்சித்து வருகிறது. சசிகலா தரப்பில் இருந்து இப்படியான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளையொட்டி, கரூரில் அ.தி.மு.க. ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரையின் பேச்சில் சூடு அதிகமாகவே இருந்தது. கூட்டத்தில் தம்பிதுரை பேசியதாவது. “நீங்கள் 2016ல் எதற்கு அம்மாவுக்கு ஓட்டு போட்டீங்க. கருணாநிதி என்கிற தீய சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தானே. அதற்காகதான் அம்மாவும் பாடுபட்டாங்க. ஆனா, தீய சக்திகள் இன்னைக்கு என்ன சொல்றாங்க? ரெண்டே ரெண்டு பிரச்னைகளைதான் சொல்றாங்க. ஒண்ணு அம்மாவின் மரணத்துல மர்மம் இருக்குனு சொல்றாங்க. மற்றொன்று, இந்த ஆட்சியை எப்படியும் கவிழ்த்துவிட வேண்டும்னு துடிக்கிறாங்க.

ஜெ. பெயரில் அரசு திட்டங்கள் கூடாது: தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் நேரில் கடிதம்


தலைமைச் செயலரிடம் கடிதம் அளித்துவிட்டு வெளியேறும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
தலைமைச் செயலரிடம் கடிதம் அளித்துவிட்டு வெளியேறும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். "ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது" என வலியுறுத்தி தலைமைச் செயலரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) நேரில் கடிதம் அனுப்பினார்.

சுப.உதயகுமார் :போராட்டத்தில் தோல்வியே கிடையாது. அண்மை வெற்றி, தாமதமான வெற்றி என இரண்டு வெற்றிகள் மட்டுமே..

இடிந்தகரை போராளி சுப.உதயகுமார் அண்ணனின் பதிவு ..
அன்புப் பிள்ளைகளே:
வணக்கம். உங்கள் பார்வைக்கு ஆறு விடயங்கள்!
[1] அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடி மோடி அரசும், மோடி பாசிசத்தின் எடுபிடி பன்னீர்செல்வம் அரசும், உங்களின் அற்புதமான அறவழிப் போராட்டத்தை கடத்திச் சென்று, கூட்டுக்கள்ளன் நீதிமன்றத்தை ஒரு வாரம் பேசாதே என்று கேட்டுக் கொண்டு, ஏதோ அவசரச் சட்டம் போடுவதுபோல பாசாங்கு செய்து, அதை யாருக்கும் காண்பிக்காமல், அவர்களே சல்லிக்கட்டு விழாவை அவசர கதியில் நடத்தி இரண்டு அப்பாவித் தமிழர்களையும் கொன்றுவிட்டு, இப்போது காவல்துறையின் காட்டு தர்பாரை கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்தக் கையாலாகா மோடி, பன்னீர்செல்வம் அரசியலை வன்மையாகக் கண்டிபோம். சென்னையிலும், ஆங்காங்கே சில இடங்களிலும் திட்டமிட்டு நடத்தப்படும் அரச வன்முறையை கண்டிப்போம், கைவிடக் கோருவோம்.