திங்கள், 5 டிசம்பர், 2016

சசிகலா டீமுக்கு பிரேக் போடும் காவி அரசு

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் சென்னை வந்து சிகிச்சை அளிக்க உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தள்ளார். இந்த நிலையில் மன்னார்குடி ஜாம்பாவான்களான சசிகலாவின் உறவினர்கள் சென்னையில் முகாமிட்டு அனைத்து அதிமுக எம்எல்ஏக்களை வரவழைப்பது, அவர்களிடம் பேசுவது, ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள், ஆலோசனைகள் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவுக்கு உடனுக்கு உடன் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு தமிழக நிலவரங்களை கூர்ந்து கவனித்து வருவதுடன், தமிழக அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பதால், உடனடியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சென்னை அனுப்பியதுடன் இல்லாமல், விமான நிலையத்தில் இருந்து நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி, முதல்வர் உடல்நிலை மற்றும் அதிமுக அரசின் நிலைப்பாடு குறித்தும் கவனிக்க சொல்லியிருக்கிறது.நக்கீரன்,இன்

புதிய இடைக்கால முதல்வர் இன்று அறிவிக்கப்படும்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றமில்லாததைத் தொடர்ந்து, அவரது உடல் நிலை தேறும் வரை ஒரு இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை இன்று பிற்பகலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பார் என தகவல் பரவியுள்ளது. கடந்த 74 நாட்களாக தொடர் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. New Interim CM for Tamil Nadu?  இதைத் தொடர்ந்து மாநிலம் முழுக்க பரபரப்பும் இறுக்கமான சூழலும் நிலவுகிறது. ஜெயலலிதா நலம் பெற்று வரவேண்டும் என்ற பிரார்த்தனைகள் நாடு முழுவதும் தொடர்கின்றன. இந்த சூழலில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க, உடனடியாக பொறுப்பு அல்லது இடைக்கால முதல்வரை அறிவிக்க ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலிருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் பேசி வருகிறார். முதல்வரை அருகிலிருந்து கவனித்து வரும் சசிகலாவுடன் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர். இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மூன்று முறை சசிகலா தங்கியுள்ள அறையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. இன்று பிற்பகல் அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, புதிய இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.tamiloneindia.com

சசிகலா தலைமையில் அவசர கூட்டம்!


இன்று காலை ஆறு மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா தங்கி இருக்கும் அறைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முதலில் சென்றார்கள். அவர்களை தொடர்ந்து தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரும் சசிகலா அறைக்கு சென்றார்கள். அவர்களுடன் கிட்டதட்ட ஒரு மணிநேரம் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. சரியாக 7.30 மணிக்கு சசிகலா அறையில் இருந்து நால்வரும் வெளியே வந்தார்கள். ராமானுஜமும், ராம்மோகன் ராவும் தனியாக ஒரு அறையில் பேசிக் கொண்டு இருந்தார்கள். எடப்பாடியும் பன்னீரும் தனியாக ஏதோ ஆலோசனை செய்தார்கள். அமைச்சர்கள் அனைவரும் தரை தளத்தில் உள்ள ரிசப்சனில் காத்திருந்தார்கள். அவர்களுக்கு யாரிடம், என்ன கேட்பது என்று புரியவில்லை. தொடர்ந்து வந்தபடியே இருக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு, ‘நல்லா இருக்காங்க...’ என்ற ரிப்பீட் பதிலையே சொன்னபடி இருக்கிறார்கள். மின்னம்பலம்,காம்

மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்! தமிழச்சியின் திடுக் தகவல் ..

அதிமுகவினருக்கு உண்மை நிலையை கண்டறிய கடைசி வாய்ப்பு. அப்போலோவிற்குள் மக்களதிகாரத்தை அனுப்புங்கள் என்று தமிழச்சி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார். அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்" என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.

முதல்வருக்கு அஞ்ஜியோ கிராம் செய்யப்படவில்லை.. அறிக்கை சற்று நேரத்தில் வெளியாகும் .. no angiogram or angioplasty was done on her



மத்திய அரசு போலீஸ் பிரிவுகள் RAP உஷார் நிலையில் தமிழகம் வர தயார் நிலையில் என்று செய்தி #PTI குறிப்பு கூறுவதாக #ndtv ஆதாரப்பூர்வமாக தெவித்து உள்ளது .. கலவரம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் ஜாக்கிரதை Police on high alert mode .

Jayalalithaa’s cardiac arrest: How unwell is she? And is Chennai safe? 
Tamil Nadu Chief Minister J Jayalalithaa suffered a cardiac arrest on Sunday evening, according to a press release by Apollo Hospital in Chennai, where she has been under critical care since September 22.
It has been 74 days since the CM was admitted to the hospital, and her medical condition is now ostensibly poor.
Hundreds of AIADMK supporters have gathered outside the Apollo Hospital to pray for her well-being.
So, what do we know so far about her health?
Jayalalithaa was in a critical condition on Sunday night, and we are awaiting information on her condition on Monday.
She had been shifted to the general ward a few days back, but now she is in the critical care unit. She is being attended to by a group of cardiologists, pulmonologists and critical care specialists.

144 தடை உத்தரவு எந்நேரமும் பிறப்பிக்கப்படலாம் .. அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்ப உத்தரவு

முதல்வரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி தலைமையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி சத்தியமூர்த்தி மற்றும் சென்னை கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றுள்ளது. மேலும் தமிழக காவல்த்துறையினர் அனைவரும் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணிக்கு வரவேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் உடனடியாக அப்போலோ வர உத்தரவு!! கோஷ்டி மோதலை தடுக்கணுமோ?

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 50 தினங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நள்ளிரவில் இதய அறுவை சிகிச்சையின்றி ரத்தநாள அடைப்பை சரிசெய்யக்கூடிய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சியோ சிகிச்சையைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் காலை 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்களிடையேயும், அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. நன்றி  லைவ்டே

ஆளுநர் மீண்டும் அப்போலோ வந்தார் ... ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அப்போலோ வாசலில் .. அனுமதிக்க மறுப்பு


அப்பல்லோவுக்கு மீண்டும் செல்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், உடனடியாக விமானம் மூலம் சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் செல்வார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.வுக்கு ஞாயிறு மாலை திடீரென்று இதய துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நாளை பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை.. இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் அறிக்கை வெளியாகலாம்?

முதலமைச்சருக்கு 3 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 4 மணி நேர தொடர் கண்காணிப்பிற்கு பிறகே முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியும். அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியவரும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதை தொடர்ந்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அண்ணா பல்கலைகழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் 9ம் தேதி வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை டிஜிபி காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும் நாளை பணிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். ஏற்கவே துணை ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் முதல்வரின் உடல் நிலை குறித்த முழுவிபரமும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது theekkathir.com

அப்போலோ தடையை மீறிய தொண்டர்களுக்கு லத்தி சார்ஜ்..! கலவர பூமியாக மாறிவருகிறது..!

அப்போலோ தடையை மீறிய தொண்டர்களுக்கு லத்தி சார்ஜ்..! கலவர பூமியாக மாறிவருகிறது..! சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவியத்துவங்கினர். அவர்களை கட்டுபடுத்த முடியாமல் போலீஸார் எய்ம்ஸ் ரோட்டில். பேரிகேடு வைத்து போலீஸார் தடுத்தனர். தடையை மீறி தொண்டர்கள் பேரிகேட்டை உடைத்து கொண்டு முன்னேறினர். அவர்களை கட்டுபடுத்த முடியாமல் தடியடி நடத்தினர். அப்போலோ பகுதி கலவர பூமியாக மாறிவருகிறது.www.லைவ்டி

அப்போலோ திக்..திக்..திக்.. நள்ளிரவு முக்கிய அறிவிப்பு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பு நள்ளிரவு 3 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சென்னை அப்போலோ மருத்துவமனை முன்பு இந்த அறிக்கை வெளியாகும் என எதிர்பார்த்து ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் நாட்டு மக்கள் துரக்கத்தை விட்டு டி.வி.,மற்றும மொபைல் போன் மூலம் செய்தியை பரபரப்புடன் பார்த்து வருகின்றனர்.  www.லைவ்டே

முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் .. அப்போலோ அதிகார பூர்வ அறிவிப்பு! சங்கீதா ரெட்டி டுவீட்!

நேற்று மாலை 5.30 மணியளவில் தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் சிறப்பு வார்டில் இருந்து மீண்டும் திவீர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் ஜெயலலிதா. அங்கு அவருக்கு இதயத்துடிப்பை சீராக்கும் நவீன மருத்துவக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் அவசர அழைப்பு விடப்பட்டு அவர்களும் சென்னை விரைந்து விட்டார்கள். சென்னை அப்பல்லோ மருத்துவக்குழுவினர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்கள். அவருடன் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை செய்து அவர் வழங்கிய ஆலோசனையின் படியும் சிகிச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “முதல்வரின் இதயத்துடிப்பை சீராக்கும் முயற்சியாக அவருக்கு extracorporeal membrane heart assist device மூலம் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு .. ஆளுநர் சென்னை வருகை ..

மாலை 4.30 மணி : அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது வளாகம் பரபரப்படைந்தது மாலை 5 மணி: முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது
மாலை 5.30 மணி : சென்னையில் இருந்த மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பல்லோவிற்கு விரைந்தனர்.
மாலை 6 மணி : அப்பல்லோ மருத்துவமனை முன்பு அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. ராகுகால பூஜை துர்க்கைக்கு செய்ய சொல்லி அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இரவு 7 மணி: தமிழக காவல்நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு அப்பல்லோவில் இருந்து உத்தரவு பறந்தது
இரவு 8 மணி : அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ நோக்கி வரத் தொடங்கினர் இரவு 9.15 மணி: அப்பல்லோ அறிக்கை வெளியானது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை தெரிவித்தது.
 இரவு 9.30 மணி : மும்பையில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது
இரவு 9.45 மணி அப்பல்லோவில் நடப்பது பற்றி உள்துறை அமைச்சா ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார் இரவு 10 மணி : அப்பல்லோவில் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தினர்.
இரவு 10.15 மணி : அதிமுக தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கவே, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சென்னையில் நடக்கும் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியானது.

Cardiac arrest for Jaya? இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.

Cardiac Arrest occurs when the heart stops beating as a whole...
In summary, there is a difference between a heart attack and a cardiac arrest. A heart attack occurs when the blood supply to part of the heart stops and thus causes a section of the heart muscle to begin to die; whereas a cardiac arrest occurs when the heart stops beating as a whole.
- A heart attack is when blood flow to the heart is blocked, and sudden cardiac arrest is when the heart malfunctions and suddenly stops beating unexpectedly. A heart attack is a “circulation” problem and sudden cardiac arrest is an “electrical” problem.   முகநூல் பதிவு பிரகாஷ் facebook
(04/12/2016) இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.
குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.
மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்
இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது..
--- விகடன் செய்தி..

பிரதமர் மோ(ச)டி பிச்சைக்காரர்கள்: ‘ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொரதாபாத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டு மக்கள் அனைவரும் ரொக்க பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு மாற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். தனது கருத்துக்கு வலுச்சேர்க்க அவர் ‘வாட்ஸ் அப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் மெஷின்’ வைத்துக்கொள்கிற நிலை உருவாகி இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் குறிப்பிடும்போது, “இது எத்தனை தூரத்துக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பிச்சைக்காரனிடம் ஒருவர், ‘உனக்கு உதவத்தாம்பா எனக்கும் விருப்பம். ஆனால், என்கிட்ட சில்லறை இல்லியே?’ என்கிறார். அதற்கு அந்த பிச்சைக்காரர், ‘ஐயா, கவலையே படாதீங்க’ என்று சொல்லி, ‘ஸ்வைப் மெஷின்’ ஒன்றை அவரிடம் நீட்டி, ‘டெபிட் கார்டை கொடுங்க’ என்று கேட்கிறார்’’ என்று கூறினார். இதை கேட்டு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர்minnambalam.com

சாதி பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசும் முதல் தமிழ் சினிமா! மாவீரன் கிட்டு !

maaveeran-kittuthetimestamil.com : சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்தீபன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன் கிட்டு’ உண்மையான தலித் படம் என பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட சில குறிப்புகள் இங்கே…
அதி அசுரன்:
ஜீவா என்ற படத்தில், கிரிக்கெட் விளையாட்டிலும் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்திய தோழர் சுசீந்திரன், மாவீரன் கிட்டுவில் பிற்படுத்தப் பட்ட ஜாதியினரின் ஜாதிவெறியையும், பிற்படுத்தப்பட்டவர் – தாழ்த்தப்பட்டவர் ஒன்றாக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். பாடலாசிரியர் தோழர் யுகபாரதி அவர்களின் உரையாடலில் “அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்கவில்லை, அதிகாரங்களையே எதிர்க்கிறோம்” போன்ற கருத்தியல் பலமிக்க வசனங்களை, எளிமையாகக் கையாண்டுள்ள திறன் மாவீரன் கிட்டு படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளன.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகள் திருமணம்.. 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள்... திணறும் நாக்பூர்

நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க இந்தியாவின் உள்ள புள்ளிகள் 50க்கும் மேற்பட்ட தனி விமானங்கள் மூலம் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணம் இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவிஐபிக்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்கின்றனர். மத்திய அமைச்சரின் வீட்டு திருமணத்திற்கு குறைந்தது 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா நிர்வாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே மற்றும் இதர மத்திய அமைச்சர்கள் என 10 ஆயிரத்திற்கும் விவிஐபி விருந்தினர்கள் இன்று மாலை நாக்பூரில் நடக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு தனி விமானத்தின் மூலம் செல்ல உள்ளனர்.

துணை நடிகை ஜெயஸ்ரீ மர்ம மரணம்

சென்னை சாலிகிராமத்தில் துணை நடிகை ஜெயஸ்ரீ தனது வீட்டில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ. துணை நடிகை. அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜெயஸ்ரீ நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்மையில் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்த காரணமே இன்னும் தெரியாத நிலையில் மற்றொரு நடிகை இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. நடிகைகள் அடுத்தடுத்து பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.tamioneindia.com

பினாமிகளின் கமிஷன் பிசினெஸ் ஜோர் ஜோர் .. மகேஷ் ஷா ஒப்புதல் வாக்குமூலம் : அரசியல்வாதிகளுக்காக பொய் சொன்னேன் ..

ரூபாய் 13,860 கோடி கருப்புப் பணம் இருப்பதாக தவறான தகவல் அளித்தது ஏன் என விசாரணை குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 67 வயதான மகேஷ் ஷா மும்பை மற்றும் சில இடங்களில் ரியல் எஸ்டேட் செய்து வந்தார். இவர் ரூபாய் 13,860 கோடி கருப்புப் பணம் இருப்பதாக வருமான வரித்துறையினரிடம் தெரிவித்தார். அதற்கான முதல் தவணைக்கான வரி கட்டும் தேதிக்கு முன்னரே அவர் மாயமானார். அவரை வருமான வரித்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் ஸ்டூடியோவுக்கு சென்று நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ரூபாய் 13,860 கோடி கருப்புப் பணம் இருப்பதாக தெரிவித்தது தான்தான் என்றும், அந்தப் பணம் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சொந்தமானது என்றும், கமிசன் தொகைக்கு ஆசைப்பட்டு கருப்பை வெள்ளையாக்க முயன்றது தமது தவறு என்றார்.

சசிகலா புஷ்பா பாராளுமன்ற நிலைக்குழுவில் புகார் . பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் கலக்கத்தில் .

சென்னை:தன் மீது பொய் வழக்கு போடக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், காவல் துறை தலைவர் மீதெல்லாம், பார்லிமெண்ட் உரிமைக் குழுவிடம், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் எம்.பி.,யான சசிகலா புஷ்பா அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது, தலைமைச் செயலக வட்டாரங்களில் புயலைக் கிளப்பி உள்ளது.தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.,யான, திருச்சி சிவாவுக்கும், அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, சசிகலா புஷ்பாவை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அதன்பின், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் கட்சித் தலைவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார் சசிகலா புஷ்பா. இதையடுத்து, அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இதனால், தமிழக அரசு மீது, சசிகலா புஷ்பா கடும் கோபம் அடைந்துள்ளார்.
உள்துறை அமைச்சரிடம் புகார்:   தன் மீது வழக்குப் போட காரணமாக இருந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் கொடுத்தார்.

நாடு மொத்த விலைக்கே! வெட்ட வெளிச்சமாகக் கூறும் மோடி அரசு...

நவம்பர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை ரிசர்வு வங்கி இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு புதிய
பணம் பட்டுவாடா செய்ய வழங்கியிருப்பதன் விபரம் :
ICICI - ரூ.4500 கோடி , AXIS - ரூ.700 கோடி, HDFC - ரூ.900 கோடி, அதாவது இந்த மூன்று தனியார் வங்கிகளுக்கு மொத்தம் ரூ.6100 கோடி ரூபாய்.
இது தவிர நாட்டில் உள்ள ஒட்டு மொத்த பொதுத் துறை வங்கிகளுக்கும் ரூ.7800 கோடி.
பொதுத் துறை வங்கிகளில் உள்ள கணக்குகள் எவ்வளவு அவர்களின் மொத்த செயல்பாட்டு மதிப்பு/பரிவர்த்தனைகள்
எவ்வளவு, தனியார் வங்கிகளில் உள்ள கணக்குகள் எவ்வளவு அவைகளின் மொத்த பரிவர்த்தனைகள் எவ்வளவு என்பதை RBI அறியாதா??
நாட்டின் முதுகெலும்பாக திகழும் கூட்டுறவு வங்கிகளை இரண்டாம் பட்சமாக செயல்பட அனுமதியளிக்காமல்
பிக்பசார் முதல் ஜியோ பேங்கிங் வரை சிவப்பு கம்பளம் விரிக்கும் இந்த மொத்த ஏற்பாடுகளுக்குப் பின் உள்ள திருட்டுத்தனம் என்ன??
நாடு மொத்த விலைக்கே என்பதை இதை விட மோடியால் எப்படி வெட்ட வெளிச்சமாகக் கூறமுடியும்.....
எலி செத்த வாடை அடிக்கலியா....  முகநூல்  பதிவு  முத்துகிருஷ்ணன்

ஹிலாரிக்கு மீண்டும் வாய்ப்பு? நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் !

கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். அதில் டொனால்ட் டிரம்ப்பை விட, ஹிலாரி கிளிண்டன் 25 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கைப்படி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 65,152,310 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் 62,626,216 வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் 7,373,248 வாக்குகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் டிரம்பை விட, ஹிலாரி 1.9 சதவிகிதம் 2,526,094 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

மடங்களும் சாமியார்களும் கருப்பு பணத்தை கமிஷனுக்கு மாற்றி கொடுக்கிறார்கள்


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து பழைய ரூபாய் 500,1000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றி வருகின்றனர். இதனால் கமிஷனுக்கு கருப்புப் பணம் மாற்றி தரப்படும் தொழில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் 50% கமிஷனுக்கு பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும், சாமியார் மடங்களிலும் மாற்றி தரப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது டெல்லியின் காஷியாபாத்தில் உள்ள வைஷ்ணவி கோயில் பெண் சாமியார் ராதே மாதாவி பிரபலமானவர். கருப்புப் பணம் வைத்திருப்பவர்போல் நடித்து ஒரு பத்திரிகையாளர், ராதே மாதாவியிடம் பணம் மாற்றும் முறை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது, “வங்கி அதிகாரி ஒருவர் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு 50% கமிஷன் எடுத்துக் கொண்டு புது ரூபாய் நோட்டை உங்கள் வீடு தேடி வந்து வழங்குவார்.

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் சம்மன்


பெங்களூருவில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 152 கோடி சிக்கிய விவகாரத்தில் கர்நாடக அரசின் உயரதிகாரிகள் சிக்கராயப்பா, ஜெயச்சந்திரா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு, ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இந்த மாதம் வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இதனை பயன்படுத்தி பல்வேறு தந்திரங்களையும் பயன்படுத்தி கருப்புப் பணத்தை வெளுப்பாக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சீல் நடைபெற்று வருகின்றன. அதனை வருமான வரித்துறையும் முறியடித்து வருகின்றன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது தொடர்பான தில்லுமுல்லு அதிகரித்து வரும் செய்தி வருமான வரித்துறைக்கு கசிந்ததையடுத்து வேறு முக்கிய நகரங்களில் உள்ள பெரும் புள்ளிகளையும் அதிகாரிகளையும் குறிவைத்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதுதான் மொத்த இந்தியாவின் கதை - -எம்.ராஜசேகர்

.scroll.in
பண மதிப்பிழப்பு நடவடிக்கை – யோசனை - செயல்படுத்தப்பட்ட முறை இரண்டுமே - எப்படி இந்தியாவின் விவசாயச் சந்தை சங்கிலியை, குக்கிராமங்கள் வரைக்கும் பாதித்திருக்கிறது என்று தெரியும். மேலோட்டமாகப் பார்த்தால், பெட்டையா மண்டியின் மற்றுமொரு சாதாரண நாளாக அது தெரியலாம். வடக்கு பீகாரின் சிறு நகரில் இருக்கும் சந்தை. காய்கறிகளும் பழங்களும் விற்கப்படும் சந்தைக்கான கான்கிரீட் வாயிலுக்கு அருகே லாரிகள் நிற்கின்றன. மண்டி சமிதி என அழைக்கப்படும் இச்சந்தையில், கூடைகள் முழுக்க காய்கறிகளுடன் வியாபாரிகள் அமர்ந்திருக்கின்றனர். கடைகளில் சரக்கு நிறைந்து இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், வணிகர்களிடமும், நடைபாதை வியாபாரிகளிடமும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் குறித்துக் கேட்டால், சந்தையில் நிலவும் அசாதாரண நிலை வெளிச்சத்துக்கு வருகிறது. காய்கறிகளின் விலை வீழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். நவம்பர் எட்டு அறிவிப்புக்கு முன் கிலோ பன்னிரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட காலிஃப்ளவர், ‘இப்போது ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறது’ என்று சந்தையில் மொத்த வியாபாரம் செய்யும் மஹ்ஃபூஸ் ஆலம் சொல்கிறார்.