ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பினாமிகளின் கமிஷன் பிசினெஸ் ஜோர் ஜோர் .. மகேஷ் ஷா ஒப்புதல் வாக்குமூலம் : அரசியல்வாதிகளுக்காக பொய் சொன்னேன் ..

ரூபாய் 13,860 கோடி கருப்புப் பணம் இருப்பதாக தவறான தகவல் அளித்தது ஏன் என விசாரணை குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 67 வயதான மகேஷ் ஷா மும்பை மற்றும் சில இடங்களில் ரியல் எஸ்டேட் செய்து வந்தார். இவர் ரூபாய் 13,860 கோடி கருப்புப் பணம் இருப்பதாக வருமான வரித்துறையினரிடம் தெரிவித்தார். அதற்கான முதல் தவணைக்கான வரி கட்டும் தேதிக்கு முன்னரே அவர் மாயமானார். அவரை வருமான வரித்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் ஸ்டூடியோவுக்கு சென்று நேரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ரூபாய் 13,860 கோடி கருப்புப் பணம் இருப்பதாக தெரிவித்தது தான்தான் என்றும், அந்தப் பணம் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சொந்தமானது என்றும், கமிசன் தொகைக்கு ஆசைப்பட்டு கருப்பை வெள்ளையாக்க முயன்றது தமது தவறு என்றார்.


பேட்டி கொடுக்கும்போதே அவரை வருமானவரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் மகேஷ் ஷாவின் தகவல் தவறானது என தெரிய வந்ததால் அந்தப் பணம் தொடர்பான தகவல்களை ஏற்க வருமான வரித்துறையினர் மறுத்துவிட்டனர். மேலும் தவறான தகவல் அளித்ததன் பின்புலம் என்ன என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் வருமான வரித்துறையை நாடி, ரூபாய் 2 லட்சம் கோடி கருப்புப் பணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கேட்டபோது எதுவும் இல்லை என்று முழித்த அவர்கள் ஒரே ஒரு ஆவணத்தை மட்டும் காண்பிடித்துள்ளனர். அதனை ஆய்வு செய்தபோது ரூபாய் 2 லட்சம் கோடி கருப்புப் பணம் இருப்பதாக கூறியது பொய் என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். தவறான தகவல் அளித்ததன் ஏன் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: