அப்பல்லோவுக்கு மீண்டும் செல்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், உடனடியாக விமானம் மூலம் சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் செல்வார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.வுக்கு ஞாயிறு மாலை திடீரென்று இதய துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா, என் அத்தையைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன். என்னை மருத்துவமனைக்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. நான் வழக்கமாக போயஸ் தோட்டத்தின் இல்லத்தில் என் அத்தையை அவ்வப்போது நேரில் சந்திப்பேன். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் ஆன பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. இப்போதும் இங்கே வந்திருக்கிறேன். என் அத்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணமே தெரியவில்லை. ஏன் இபப்டிச் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. மீடியாவுடனும் பேசக் கூடாது எனவும் கூறுகின்றனர் என்றார். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக